Published:Updated:

அஜயன் பாலா எழுதிய `நாயகன் - அம்பேத்கர்' இ-புக் முற்றிலும் இலவசமாக!

பள்ளி நாட்களிலேயே சாதியத்தின் கொடுங்கரங்களால் தீண்டப்பட்டு மனமெங்கும் புண்ணாகிப்போன பீமாராவ் சக்பால் என்ற இளைஞர்தான் அம்பேத்கராக மாறினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாம் முக்கியமான காலகட்டத்தில் வாழ்கிறோம். நம்மில் பலருக்கும் சரித்திர நாயகர்களின் வரலாறு என்பது பாடப்புத்தகங்களுடன் படித்து முடித்த விஷயமாகவே இருக்கிறது. ஆனால், சமகால சமூக அரசியலைப் புரிந்துகொள்வதற்கு, அவர்களின் வரலாறுதான் எப்போதும் துணைபுரியும். உங்களுக்காகவே அஜயன் பாலா எழுதிய 'நாயகன் - அம்பேத்கர்' இ-புக் வடிவில் முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம். (இணைப்பும் விவரமும் கீழே...)

வேர்களை அறுத்தெரிந்து வெடித்துக் கிளம்பிய ஒரு வித்தாக, சாதியத்தின் கொடிய நரம்புகளை அறுத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட 'மகர்' இனத்தின் இருண்ட கருவறையிலிருந்து வெளிவந்த ஒரு விடிவெள்ளி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.

பள்ளி நாட்களிலேயே சாதியத்தின் கொடுங்கரங்களால் தீண்டப்பட்டு மனமெங்கும் புண்ணாகிப்போன பீமாராவ் சக்பால் என்ற இளைஞர்தான் அம்பேத்கராக மாறினார். வேதனையில் வெந்து நொந்துகொண்டிருந்த அந்த நேரத்தில் கல்வி என்ற தற்காப்பு ஆயுதம் அவர் கைக்குக் கிடைத்தது. கூரான அந்த ஆயுதம் சாதியத்தின் நரம்புகளை பதம் பார்க்கத் தொடங்கியது.

அம்பேத்கர்
அம்பேத்கர்
'நாயகன் - அம்பேத்கர்' இ-புக் இலவசமாக இங்கே க்ளிக் செய்க> https://vikatanapp.page.link/Ambedkar2

இதனால், தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை என்று பிரயோகப் படுத்திக்கொண்டிருந்த சாதிய, துவேஷ சக்திகள் அம்பேத்கரை கண்டு அஞ்சத் தொடங்கின. இதுதான் சமயம் என்று உணர்ந்த அவர், தன் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக கல்வி என்னும் ஆயுதத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தினார். சட்டம் பயின்றார். பல பட்டங்கள் பெற்றார். ஆலய நுழைவு போராட்டத்தை கையில் எடுத்தார். தொடர்ந்து தம் மக்களின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் எழுப்பினார்.

இந்திய அரசியல் சரித்திரத்தின் பங்கங்களைப் புரட்டும்போது அம்பேத்கரின் பெயர் இல்லாத அத்தியாயங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரின் பங்களிப்புகள், செயல்பாடுகள் ஏராளம்.

அப்படிப்பட்ட ஒப்பற்ற தலைவர் அம்பேத்கரின் வரலாற்றை நூலாசிரியர் அஜயன் பாலா எளிய நடையில் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடனில் 'நாயகன்' வரிசையில் வெளியான அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து அபூர்வ புகைப்படங்களுடன் இப்போது நூலாக வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது.

இந்தியனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களில் அம்பேத்கரின் வரலாறும் மிக முக்கியமானது.

எப்போதும் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் புத்தகம் இப்போது இ-புக் வடிவில் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம். இதற்காக, நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்:

உங்களது மொபைலில் Vikatan App-ஐ டவுன்லோடு செய்தால் போதும், இந்த இ-புத்தகத்தை முழுமையாக வாசிக்கலாம். அத்துடன், புதிதாக விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்வோர் விகடன் இதழ்கள் அனைத்தையும் 30 நாள்களுக்கு இலவசமாக வாசிக்கலாம். மேலும், கடந்த 15 ஆண்டு கால பொக்கிஷப் பகுதிகளிலும் வலம் வரலாம்.

'நாயகன் - அம்பேத்கர்' இ-புக் இலவசமாக இங்கே > https://vikatanapp.page.link/Ambedkar2

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு