Published:Updated:

Free eBook: ரூ.360 மதிப்புள்ள 'ஜெயகாந்தன் கதைகள்' இ-புக் முற்றிலும் இலவசமாக!

ஜெயகாந்தன் கதைகள்' புத்தகம் இப்போது இ-புக் வடிவில் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம். இதற்காக, நீங்கள் செய்யவேண்டிய எளிதான வழிமுறை கீழே தரப்பட்டுள்ளது.

"உங்கள் கைகளில் தவழும் இந்த நூல் கடந்துபோன பழமையைக் கொண்டாடும் முயற்சி மட்டுமல்ல; இலக்கியம், கலை, ஓவியம் இவற்றின் சிகரத்தைத் தொட்ட உன்னதத்தை மீண்டும் தரிசனம் செய்து எதிர்காலத்தை நோக்கி உத்வேகம் பெறும் கருவியும் ஆகும்" என்கின்றனர், 'ஜெயகாந்தன் கதைகள்' நூலைத் தொகுத்த டாக்டர் ராம் - வனிதா தம்பதியர்.

இந்நூல் குறித்து 2013-ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய அணிந்துரையிலிருந்து...

"1960, 70-களில் நான் எழுதிய குறுநாவல்கள், சிறுகதைகள், பேட்டிக் கட்டுரைகள் ஆகியவற்றுக்கு அப்படியே - பிறந்தமேனிக்கு, அழிவோ, மாற்றமும் இல்லாமல் அப்படியே - வாசகர்களுக்குத் தர வேண்டும் என்ற முயற்சியில் டாக்டர் ராம் - திருமதி வனிதாவின் கைவண்ணத்தில் வெளிவரும் தொகுப்பு இது.

ஓவியர்கள் கோபுலு, மாயா ஆகியோர் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கி இருக்கிறார்கள் என்பதைவிட உயிர் கொடுத்திருக்கிறார்கள் என்பதே பொருத்தம்.

இதிலுள்ள நயங்களை நான் திரும்பவும் எடுத்துச் சொல்லப்போவதில்லை. இவற்றை எழுதியவனையும் வாசகர்களையும் இவற்றை எழுதிய காலத்துக்கே அழைத்துச் செல்வது இதன் சிறப்பு அம்சம்!"

பதிப்புரை:

ஜெயகாந்தன்... தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை!

ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்!

ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளிகளுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முன்னோடும் ஏர்!

வாழும் இலக்கியக் கர்த்தாக்களில் தலைப்பிள்ளையாக இருக்கிற ஜெயகாந்தனின் சிறுகதைகள், அது பிரசவம் ஆன... அதாவது பிரசுரம் ஆன அழகிலேயே மீண்டும் வாசகர்களுக்குத் தரும் வித்தியாசமான முயற்சிதான் இந்த நூல்.

1960-களில் ஆனந்த விகடனின் அழகிய பக்கங்களில் ஜெயகாந்தனின் முத்திரை எழுத்துகள் தொடர்ந்து பதிவாகிவந்தன. அது தமிழ் இலக்கிய உலகில் புதிய வசந்த காலமாகப் பரவியது. அந்தக் காலகட்டத்தைச் சொல்லிப் புரியவைப்பதைவிடக் காட்சிப்படுத்தி உணர்த்தத் திட்டமிட்டார்கள் டாக்டர் ராம் - வனிதா தம்பதியர்.

'ஜெயகாந்தன் கதைகள்' இ-புக் இலவசமாக இங்கே > https://vikatanapp.page.link/JayakanthanKathaigal

Free eBook: ரூ.360 மதிப்புள்ள 'ஜெயகாந்தன் கதைகள்' இ-புக் முற்றிலும் இலவசமாக!

ஜெயகாந்தனின் படைப்புகள் ஆனந்த விகடனில் வெளியான அதே வடிவத்திலேயே, அதே பக்க வடிவமைப்பிலேயே புத்தகமாக்கி அதனை வெளியிடும் வாய்ப்பை மீண்டும் 'விகடன்' பிரசுரத்துக்கே வழங்கியுள்ளனர்.

அரை நூற்றாண்டு இடைவெளியில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கது.

வாசகர்களை, மீட்டெடுக்க முடியாத பழைய காலத்துக்கே மீண்டும் அழைத்துச் செல்லும் அனுபவத்தை, 'ஜெயகாந்தனின் கதைகள் - ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்' - என்ற இந்தப் பொக்கிஷம் நிச்சயம் வழங்கும்.

இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி?

மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'ஜெயகாந்தன் கதைகள்' புத்தகம் இப்போது இ-புக் வடிவில் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம். இதற்காக, நீங்கள் செய்யவேண்டிய எளிதான வழிமுறை:

உங்களது மொபைலில் Vikatan App-ஐ (Android only) டவுன்லோடு செய்து, ரெஜிஸ்டர் செய்தால் போதும், இந்த இ-புத்தகத்தை முழுமையாக வாசிக்கலாம்.

நீங்கள் டவுன்லோடு செய்யும் இந்த இ-புத்தகம் விகடன் App-ல் உள்ள Library-ன் EBook பகுதியில் சேவ் ஆகியிருக்கும். அதை நீங்கள், இந்த இலவச சலுகை காலம் வரை எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம்.

சிறப்புக் கூடுதல் சலுகை: இந்த இ-புக் உடன், புதிதாக விகடன் App-ஐ டவுன்லோடு செய்து தங்களைப் பதிவு செய்துகொள்பவர்கள் விகடன் இதழ்கள் அனைத்தையும் 30 நாள்களுக்கு இலவசமாக வாசிக்கும் சலுகையும் பெறலாம். மேலும், விகடன் இதழ்களின் கடந்த 15 ஆண்டு கால பொக்கிஷப் பகுதிகளிலும் வலம் வரலாம்.

'ஜெயகாந்தன் கதைகள்' இ-புக் இலவசமாக இங்கே > https://vikatanapp.page.link/JayakanthanKathaigal

பின்குறிப்பு: Desktop-ல் இ-புக் பெற இயலாது. Android Mobile பிரவுசர் வழியாக முயற்சிக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு