Published:Updated:

Free eBook: ராஜுமுருகனின் 'வட்டியும் முதலும்' - ரூ.290 மதிப்புள்ள இ-புக் முற்றிலும் இலவசமாக!

வட்டியும் முதலும்

'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி' ஆகிய கவனத்துக்குரிய திரைப்படங்களின் இயக்குநரும் எழுத்தாளருமான ராஜுமுருகன் எழுதிய 'வட்டியும் முதலும்' புத்தகத்தை இப்போது இ-புக் வடிவில் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம். இதற்காக, நீங்கள் செய்யவேண்டிய எளிதான வழிமுறை கீழே தரப்பட்டுள்ளது.

Free eBook: ராஜுமுருகனின் 'வட்டியும் முதலும்' - ரூ.290 மதிப்புள்ள இ-புக் முற்றிலும் இலவசமாக!

'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி' ஆகிய கவனத்துக்குரிய திரைப்படங்களின் இயக்குநரும் எழுத்தாளருமான ராஜுமுருகன் எழுதிய 'வட்டியும் முதலும்' புத்தகத்தை இப்போது இ-புக் வடிவில் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம். இதற்காக, நீங்கள் செய்யவேண்டிய எளிதான வழிமுறை கீழே தரப்பட்டுள்ளது.

Published:Updated:
வட்டியும் முதலும்

"இந்த எழுபது சொச்சம் வாரங்களிலும் நீங்கள் குறைந்தபட்சம் எழுநூறு மனிதர்களையாவது எங்களுக்குக் காட்டியிருப்பீர்கள். வாழ்வு என்பதும், மனிதர்கள் என்பதும், மனிதரைப் புரிதலே வாழ்வினைப் புரிவது என்பதும்தானே அடிப்படையான உண்மை. அதில் பாதிக்குப் பாதி அனேகமாக, அவரவர் வாழ்வில், அவரவர் ஊரில் அதே சாயலில் நாங்கள் பார்த்த வேறு மனிதர்கள்...

...ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சாயலுடன் யாரிடமாவது யாரையாவது தேடுகிறோம். யாரையாவது யாரிடமாவது அடைந்துவிடுகிறோம். கட் பண்ணினால் - யாருடைய வீட்டில் எங்கே ஷாட் வைத்தாலும், ஃப்ரேமில் ஏதோ ஒரு மூலையில் நீங்களும் (ராஜுமுருகன்) உங்களுடைய மனிதர்களும் ஹாசிப் கானும் இருக்கிறீர்கள்" என்று 'வட்டியும் முதலும்' புத்தகத்தின் அணிந்துரையில் சிலாகிக்கிறார் வண்ணதாசன்.

"நாம் வாழ்கிற காலகட்டம் மிகவும் துன்பமும் குரூரமும் நிறைந்ததாக இருக்கிறது... அதேநேரத்தில் மக்கள் போராட்டங்களும், இணைய எழுச்சியும், இளைஞர்களின் புதுக் குரல்களும் நாளைய நம்பிக்கைகளுக்கான விளக்குகளை ஏற்றுகின்றன. இந்தக் காலகட்டத்தின், ஒரு முதல் தலைமுறை சாமான்ய இளைஞனின் குறிப்புகளாக 'வட்டியும் முதலும்' இருக்கும் என்று நம்புகிறேன்" என்கிறார் எழுத்தாளர் ராஜுமுருகன்.

பதிப்புரையிலிருந்து...

இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா?

ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், வாஞ்சை, பாசம், பரிதவிப்பு, நெருடல் என எத்தனை விதமான உணர்வுகள்!

தன் வாழ்வியல் அனுபவங்களாக வாழ்க்கையின் பன்முகங்களையும் பந்தி வைத்திருக்கும் ராஜுமுருகன், தமிழ் எழுத்துலகின் நம்பிக்கை மிகுந்த அடையாளம். சிரித்து, அழுது, விளையாடி, தூங்கி பன்முகத்தனங்களையும் தன்னை அறியாமலே செய்யும் ஒரு குழந்தையைப்போல் வாழ்வின் அத்தனை விதமான உணர்வுகளையும் போகிறபோக்கில் நெஞ்சு தைக்கச் சொல்லி இருக்கிறார் ராஜுமுருகன்.

துயரங்களும் நம்பிக்கைகளும் கலந்து நகரும் இந்த உலகை சற்று தூரத்தில் நின்று கவனித்த கணக்காய் அத்தனை விதமான அனுபவங்களையும் இந்தப் புத்தகத்தில் காணலாம்.

புறந்தள்ளப்பட்டவர்களுக்காக அழலாம்; போராடுபவர்களுக்குக் கைகொடுக்கலாம்; இழந்தவர்களுக்குத் துணை நிற்கலாம்; வென்றவர்களுக்கு மலர்க்கொத்து நீட்டலாம்; கொன்றவர்களுக்கு மன்னிப்புக் காட்டலாம். மனித உணர்வுகளின் அத்தனை விதமான வெளிக்காட்டல்களையும் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குள் நிகழ்த்தும்.

'வட்டியும் முதலும்' இ-புக் இலவசமாக இங்கே > https://vikatanapp.page.link/Vattiyum-Muthalum

வட்டியும் முதலும்
வட்டியும் முதலும்

குவிந்து கிடக்கும் பணத்தைப் பார்ப்பதும் பார்வையே... பணத்தின் நடு வட்டத்தில் யாரோ ஒருவன் தன் காதலைப் பிழைகளோடு சொல்லி இருப்பதைப் பார்த்துச் சிலிர்ப்பதும் பார்வையே. அந்தக் காதலன் தன் காதலியோடு சேர்ந்திருப்பானா என, எவனோ ஒருவனுக்காக ஏங்கித் தவிப்பது மூன்றாம் பார்வை.

இந்தப் புத்தகத்தின் அற்புதம் இத்தகைய பெருங்குணமே! கடலுக்குள் கூடுகட்ட - கனவுக்குள் கடல் கட்ட மனப்பக்குவம் வார்க்கும் மயிலிறகுத் தீண்டலே இந்தப் புத்தகம்!

இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி?

ஏற்கெனவே வாசித்து நெகிழ்ந்தவர்கள் மறுவாசிப்பில் கரைந்திடவும், இளம் வாசகர்கள் தேடித்தேடி வாசிக்கவும் விரும்பும் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ராஜுமுருகனின் 'வட்டியும் முதலும்' புத்தகத்தை இப்போது இ-புக் வடிவில் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம். இதற்காக, நீங்கள் செய்யவேண்டிய எளிதான வழிமுறைகள்:

உங்களது மொபைலில் Vikatan App-ஐ (Android only) டவுன்லோடு செய்து, ரெஜிஸ்டர் செய்தால் போதும், இந்த இ-புத்தகத்தை முழுமையாக வாசிக்கலாம்.

நீங்கள் டவுன்லோடு செய்யும் இந்த இ-புத்தகம் விகடன் App-ல் உள்ள Library-ன் EBook பகுதியில் சேவ் ஆகியிருக்கும். அதை நீங்கள், இந்த இலவச சலுகை காலம் வரை எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம்.

சிறப்புக் கூடுதல் சலுகை: இந்த இ-புக் உடன், புதிதாக விகடன் App-ஐ டவுன்லோடு செய்து தங்களைப் பதிவு செய்துகொள்பவர்கள் விகடன் இதழ்கள் அனைத்தையும் 30 நாள்களுக்கு இலவசமாக வாசிக்கும் சலுகையும் பெறலாம். மேலும், விகடன் இதழ்களின் கடந்த 15 ஆண்டு கால பொக்கிஷப் பகுதிகளிலும் வலம் வரலாம்.

'வட்டியும் முதலும்' இ-புக் இலவசமாக இங்கே > https://vikatanapp.page.link/Vattiyum-Muthalum

பின்குறிப்பு: Desktop-ல் இ-புக் பெற இயலாது. Android Mobile பிரவுசர் வழியாக முயற்சிக்கவும்.