Published:Updated:

`இவையெல்லாம் 2020-ல் மாறிவிட்டால்?'- வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

தனிமனிதர்களின் புத்தாண்டு சபதங்கள் பெரும்பாலும் ஓரிரு வாரங்களிலேயே முடிந்துபோய் விடுகின்றன.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஆண்டொன்று கூடினால் வயதொன்று அதிகரிக்கும் என்பதோடு நின்றுவிடாமல் 2020-ல் இவையெல்லாம் மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

Representational Image
Representational Image

பணம் பெறாமல் மக்கள் ஓட்டு போட ஆரம்பித்தால், குண்டும் குழியுமான சாலைகள் காணாமல் போய்விட்டால், மொட்டைமாடி தண்ணீர் தொட்டிகள் அடிக்கடி கழுவப்பட்டால், போக்குவரத்து நெரிசல்கள் இல்லாமல் போய்விட்டால், மாதமொரு ஜி.பி இணையதள வசதி மட்டுமே கிடைத்தால், சிக்னல்களை மக்கள் மதிக்க ஆரம்பித்தால், போராடுவதற்குக் காரணங்கள் காணாமல் போய்விட்டால்..

ஆறுமாத சிவப்பழகு விளம்பரங்கள் ஆயுள் குறைந்துவிட்டால், அபத்த சினிமா சண்டைக் காட்சிகள் அமைதியாகிவிட்டால், வாட்ஸ்அப் போராளிகள் வழக்கொழிந்து போய்விட்டால், பாகிஸ்தான் பஞ்சாயத்துகள் பறந்து போய்விட்டால், மதப்பிரச்னைகள் கதம் ஆகிவிட்டால், செல்போன் இல்லாமல் குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்தால், டிவி நாடகக் கதைகள் நாடு கடத்தப்பட்டால், மதிப்பெண் முறைகள் மதிப்பிழந்து போய்விட்டால், ஃபேஸ்புக்கில் லைக் பட்டன் டிஸ்சபிள் ஆகிவிட்டால், காப்பி பேஸ்ட்டுகள் வேஸ்ட் ஆகிவிட்டால், பஞ்ச் டயலாக்குகள் பஞ்சராகிப் போனால், தேர்தல் வாக்குறுதி அளிப்போருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டால், கையூட்டு பெறுவோரெல்லாம் கையும் களவுமாய் பிடிபட்டால்..

Representational Image
Representational Image

புரியாத மேடைப் பேச்சுகள் புரையோடிப் போய்விட்டால், காமுகோர்க்கெல்லாம் கணநேரத்தில் தண்டனை கிடைத்தால், சிரிப்பற்ற மீம்ஸ்கள் சிறைப்பட்டுப் போய்விட்டால், இணையப் போராளிகள் தெளிவாய் பேசினால், விவாத மேடைகள் விநோதமாய் மாறிவிட்டால், விருதுகள் வாங்கப்படாமல் கொடுக்கப்பட்டால், மலையளவு விலைவாசி மடுவளவு மாறிவிட்டால், காசே இல்லாமல் கடவுள் காட்சி தந்தால் 2020 எத்தனை நன்றாக இருக்கும்!

- அகன்சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு