Published:Updated:

நிறுவனங்களின் மந்தநிலை: 'வேலை இழப்பு' அச்சுறுத்தல் யாருக்கு?

நிறுவனம் உங்களுக்குக் கொடுக்கும் வேலையைத் தட்டிக் கழிக்காமல் செய்யும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். சில நேரங்களில் நிறுவனத்தின் தேவைக்கேற்ப நீங்கள் வேறொரு துறைக்குக்கூட மாற்றப்படலாம்

work
work

தொழில்துறையின் மந்தநிலை எதிரொலியாக, அங்கும் இங்கும் சில நிறுவனங்கள் ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்பும் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பொருளாதார சுணக்கம்தான் இந்த வேலை இழப்புக்குக் காரணம் என்கிறார்கள். தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இந்த வேலையிழப்புக்குக் காரணம் என்று வேறு சிலர் சொல்கிறார்கள். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2mgDmrY

காரணம் என்னவாக இருந்தாலும் வேலையிழப்பு என்கிற சிக்கலில் சிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும், வேலை குறித்த நம் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொண்டால், நாம் எந்தப் பிரச்னையும் இல்லாமல், நம்முடைய பணி வாழ்க்கையில் நாம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து யுனோனா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் மனிதவள நிபுணருமான ஜாஃபர் அலியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச்சொன்னார் அவர்.

சில நபர்கள் அதிக ஊதியம் வாங்குவார்கள். ஆனால், அவர்கள் பெறும் ஊதியத்திற்குத் தேவையான அளவு தங்கள் திறமைகளை அப்டேட் செய்துகொள்ளாமல் இருப்பார்கள்.

"இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலையால் சில நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் சில ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கும் நடவடிக்கையை எடுக்கின்றன. இப்படி வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் நிறுவனத்துக்குச் செய்யும் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கும். நிறுவனத்துக்கு வருமானத்தைக் கொண்டுவருகிறவர்களை எந்த நிறுவனமும் எப்போதும் வேலையை விட்டு அனுப்பாது. நிறுவனத்துக்கு நீங்கள் ஒரு முக்கியமான நபராக இருக்கும் நிலையில், நம்மையும் வேலையிலிருந்து அனுப்பிவிடுவார்கள் என்கிற தேவையில்லாத பயம் உங்களுக்கு வேண்டாம். பொருளாதார மந்தநிலை என்பது தற்காலிகமான விஷயம்தான். பொருளாதார வளர்ச்சி மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கி விட்டால், வேலைநீக்கம் என்கிற பேச்சை எங்கும் கேட்க முடியாது" என்றார்.

மேலும், "நிறுவனம் உங்களுக்குக் கொடுக்கும் வேலையைத் தட்டிக் கழிக்காமல் செய்யும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். சில நேரங்களில் நிறுவனத்தின் தேவைக்கேற்ப நீங்கள் வேறொரு துறைக்குக்கூட மாற்றப்படலாம். அப்படியொரு சூழல் வரும் பட்சத்தில் 'நான் இந்த வேலைக்காக வரவில்லை' என்று சொல்லாமல், 'எந்தத் துறையில் வேண்டுமானாலும் எனக்கு வேலை கொடுங்கள். அந்த வேலையில் என் திறமையை எந்த அளவுக்குக் காட்ட முடியுமோ, நான் காட்டுகிறேன்' என்று துணிச்சலாக அந்த வேலையை ஏற்றுச்செய்யுங்கள். அனுபவமே இல்லாத துறையாக இருந்தாலும்கூட, உங்கள் சீனியர்களிடம் கேட்டு உங்களை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

work
work

நிறுவனங்களில் சில நபர்கள் அதிக ஊதியம் வாங்குவார்கள். ஆனால், அவர்கள் பெறும் ஊதியத்திற்குத் தேவையான அளவு தங்கள் திறமைகளை அப்டேட் செய்துகொள்ளாமல் இருப்பார்கள். அவர்களை வேலையைவிட்டு அனுப்பிவிட்டால், அதைவிடக் குறைவான ஊதியம் வாங்கும் நபர்களைப் பணியில் அமர்த்தி செலவை மிச்சப்படுத்தலாம் என சில நேரத்தில் நிறுவனங்கள் நினைக்கலாம். இதுமாதிரியான ஒரு எண்ணம் நம்மீது நிறுவனத்துக்கு வந்துவிடவே கூடாது. இந்தச் சிக்கலில் சிக்காமல் இருக்கவேண்டு மெனில், உங்கள் வேலை தொடர்பான விஷயங்களில் நீங்கள் எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டும்" என்றார்.

- இவை மட்டுமா... வாய்ப்புகளை உருவாக்குங்கள், அனுபவத்தையும் திறமையும் வளர்த்துக்கொள்ளுங்கள், அப்டேட் அவசியம், தலைமையுடன் நல்லுறவு வேண்டும் மற்றும் கவனம் கைகொடுக்கும் ஆகிய ஐம்பெரும் சூத்திரங்களை முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க > ஆட்குறைப்பு பதற்றம்... வேலை இழப்பைத் தவிர்க்கும் வழிகள்! https://www.vikatan.com/news/general-news/how-to-secure-your-job-in-this-crisis