Published:Updated:

உற்சாகமாய் ஒரு டூர் போலாமே!

தாய்லாந்து
தாய்லாந்து

வாடிக்கையாக பயணத்துக்கு முன்னர் பணம் செலுத்துவது நம் வழக்கம், இதனோடு மாதத்தவணை மற்றும் அட்வான்ஸ் செலுத்தி பயணம் செல்லும் வாய்ப்பையும் வழங்குகிறது லா அலெக்ரியா.

அதே இடம், அதே வேலை, அதே முகங்கள்... இப்படி வாழ்க்கை அலுத்துப்போய் உற்சாகம் கொஞ்சம் கம்மியாக இருக்கிறதா? போய் ஒரு கப் காபி அருந்துங்கள், அப்படியே புதிதாக எங்கே போகலாம் எனவும் யோசித்துவிடுங்கள், ஏனெனில் நீங்கள் சுற்றுலா செல்லவேண்டியதற்கான நேரம் வந்துவிட்டது!

வெளிநாட்டுக்குச் சுற்றுலா வேண்டும் என நீங்கள் நினைத்திருந்தால் உங்களுக்காக 3 நாடுகளைப் பரிந்துரைக்கிறோம். அவைதான் ஆசியாவின் 'ட்ரிப்பில் ட்ரீட்' ஆன - சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து!

சிங்கப்பூர் : சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட சொர்க்கம் சிங்கப்பூர். அழகிய நாடுகள் பல இருந்தாலும் தனித்துவமான இடங்களால் ஸ்கோர் செய்வது சிங்கப்பூரின் விசேஷம். பிரம்மாண்டமான பூங்காவான கார்டன்ஸ் பை தி பே (Gardens By The Bay), சென்டோஸா தீவு, சிங்கப்பூரின் ஃபிளையர் (விமானம்) மூலம் நகர்வலம் , சில்லறை வர்த்தக வளாகமான ஜுவல் சங்கி விமான நிலையம் (Jewel Changi Airport) போன்ற மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய ஏராளமான இடங்கள் சிங்கப்பூரின் பக்காவான டூரிஸ்ட் ஸ்பாட்டுகளாக திகழ்கின்றன!

உற்சாகமாய் ஒரு டூர் போலாமே!

மலேசியா : சிங்கப்பூரின் 'அக்கா'வான மலேசியாவுக்குச் சென்றால், பத்து மலை (Batu Caves) முருகன் கோயில், தலைநகர் கோலாலம்பூர், உலகின் மிக உயர்ந்த கட்டடமான பெட்ரோனாஸ் கோபுரங்கள் (Petronas Towers), விதவிதமான உணவுகளுக்கு பெயர்போன சைனா டவுன், புத்திரஜெயா பூங்கா நகரம், கேமரூன் மலைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் நம்மை ஈர்க்கக் காத்திருக்கின்றன. பல இன நாடான மலேசியா சென்றால், ஆசியாவின் இனம், மதம் மற்றும் கலாச்சாரங்களின் பன்முகத்தை நிச்சயமாக அறிந்துகொள்ளமுடியும்.

தாய்லாந்து : இளைஞர்களின் 'பார்ட்டி லேண்ட்' எனக் கூறப்பட்டாலும் குடும்பத்துடன் சுற்றிப்பார்க்கவும், சுலபமாக ஒரு வெளிநாட்டுச் சுற்றுலா செல்லவும் இந்தியர்களுக்கு ஏற்ற நாடாக விளங்குவது தாய்லாந்தின் சிறப்பு! பல கலாச்சாரங்களால் கட்டிய கதம்ப பூமியாக இருக்கும் தாய்லாந்தில் பிரம்மாண்ட கடற்கரை, மிதக்கும் சந்தைகள், பழங்கால கோயில்கள் ஆகியவை பிரசித்தி பெற்றவை. தாய்லாந்துக்கு செல்லும்பட்சத்தில், யானைகள் சரணாலயம், ஜேம்ஸ் பாண்ட் தீவு, ஃபி ஃபி மற்றும் மூங்கில் தீவு, சியாங் மை இரவு சஃபாரி, சாவோ பிரயா நதி, தலைநகர் பேங்காக்கின் பழங்காலத்தைய மிதக்கும் சந்தைகள் போன்ற பிரபலமான இடங்களைப் பார்க்கத் தவறாதீர்கள்!

லா அலெக்ரியா...

சுற்றுலா என்பது வாழ்வில் முக்கியம் என உணர்த்தவும், மக்களைச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் செயல்பட்டு வருவகிறது சர்வதேச சுற்றுலா திட்டமிடல் நிறுவனமான 'லா அலெக்ரியா - La Alegria' (ஸ்பானிஷ் மொழியில் 'லா அலெக்ரியா' என்றால் மகிழ்ச்சி என்று அர்த்தம்). மேற்கூறப்பட்ட 3 நாடுகள் மட்டுமல்லாது இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் பல வெளிநாடுகளுக்கும் பருவகாலம் மற்றும் விழாக்காலங்களுக்கு ஏற்றவாறு பயண ஏற்பாட்டைச் செய்து தருகிறது லா அலெக்ரியா.

La Alegria
La Alegria

வாடிக்கையாக பயணத்துக்கு முன்னர் பணம் செலுத்துவது நம் வழக்கம், இதனோடு மாதத்தவணை மற்றும் அட்வான்ஸ் செலுத்தி பயணம் செல்லும் வாய்ப்பையும் வழங்குகிறது லா அலெக்ரியா. இதில் குடும்பச் சுற்றுலாவுக்குச் செல்ல ஆகும் பட்ஜெட்டை மாதாமதாம் தவணை முன்பணமாக செலுத்தும் வசதி பல வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுதவிர மொத்த பணத்தையும் முன்பணமாகவும் செலுத்தலாம், இதனால் டிக்கெட் புக்கிங், ஓட்டல் புக்கிங் ஆகியவை முன்கூட்டியே செய்யப்படுவதால், பணத்தை மிச்சப்படுத்த முடிகிறது. லா அலெக்ரியாவில் பேக்கேஜைத் தேர்ந்தெடுத்து கட்டணத்தைக் கட்டினால் போதும், வெளியூருக்கு விமானம் ஏறுவது முதல் திரும்பி வரும் வரை அனைத்து வேலைகளையும் லா அலெக்ரியாவே பார்த்துக்கொள்கிறது.

சிங்கப்பூர், மலேசியா & தாய்லாந்து மற்றும் பிற இடங்களுக்குச் செல்ல விரும்புவோர், லா அலெக்ரியாவைத் தொடர்புகொண்டு பயணம் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளலாம். சுற்றுலாவுக்கு புக் செய்யவும், மேலும் விவரங்கள் பெறவும், உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவும்:

பின் செல்ல