Published:Updated:

'தேன் நெல்லி' சாப்பிடுங்க, வயசே ஆகாது!

தேன் நெல்லி
தேன் நெல்லி

உடலை அழிவிலிருந்து காக்கக்கூடிய உணவு/மூலிகைகளைக் காயகற்பம் என்று குறிப்பிடுகின்றனர். இதில் நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய காயகற்பம்தான் 'நெல்லிக்காய்'.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

என்றும் இளமையாக இருக்க முடியுமா? எகிப்து ராணி கிளியோபாட்ரா முதல் எதிர்த்த வீட்டுக்காரர் வரை இந்த ஆசை இல்லாதவர் யார்? மனிதனின் தீராத இந்த ஆசையை நிறைவேற்ற கோடியாய் கோடியாய் கொட்டி ஆராய்ச்சிகள் ஒருபக்கம் நடந்துகொண்டு இருக்கின்றன. உண்மையிலேயே இதுபற்றி அறிவியல் என்னதான் சொல்கிறது?

நம் உடலில் பழைய செல்கள் இறந்து, அதன் இடங்களைப் புதிய செல்கள் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. காலப்போக்கில் புதிய செல்களை உற்பத்தி செய்யும் திறனை நம் உடல் இழக்கிறது, முடிவு - முதுமை! டி.என்.ஏ பாதிப்பு, ஹார்மோன் குறைபாடு, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு என்று ஏகப்பட்ட விஷயங்களை முதுமைக்கான காரணங்களாக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். இந்தக் காரணங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு சங்கிலிக் கன்னிகள் போல கிடக்கின்றன. உண்மையில் முதுமைக்கு இதுதான் காரணம் என்று நவீன அறிவியலால் அறுதியிட்டு கூறிவிட முடியவில்லை. சரி பண்டைய இந்தியக் கலாச்சாரத்தில் இதற்கு பதிலுண்டா?

காயகற்பம் பற்றி இந்திய மருத்துவம்.

சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில் உடலைப் பேணுவது குறித்து ஏகப்பட்ட குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. 'காலம்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் உடல் அழிவது இயற்கை என்பது மிகப் பழமையான இந்திய மருத்துவ முறைகளின் முடிவாகும். ஆனாலும்கூட நம் உணவுமுறை மூலம் அழியும் இந்த உடலை நீட்டிக்கச் செய்து முதுமையிலும் சிங்கம் போல கம்பீரமாய் வாழலாம் என்கின்றன நம் நாட்டு மருத்துவ முறைகள்.

உடலை அழிவிலிருந்து காக்கக்கூடிய உணவு/மூலிகைகளைக் காயகற்பம் என்று குறிப்பிடுகின்றனர். இதில் கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, தூதுவளை, அஸ்வகந்தா, கடுக்காய் போன்ற பல அடங்கும். ஆனால் இவற்றையெல்லாம் விட எளிதாக நமக்குக் கிடைக்கக் கூடிய காயகற்பம்தான் 'நெல்லிக்காய்'.

நெல்லிக்காய் - 'கில்லி'க்காய்!

ஒரு கட்டுரை அல்ல ஒரு புத்தகமே போடலாம்! நெல்லிக்காயில் அவ்வளவு மேட்டர் இருக்கிறது. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டாம் என்பது ஆங்கிலப் பழமொழி. ஆனால் ஒரு நெல்லிக்காயிலேயே மூன்று ஆப்பிள்களுக்குச் சமமான சத்துகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டாயமாகத் தேவைப்படும் விட்டமின் சி நெல்லிக்காயில் ஏராளம், அது கிட்டத்தட்ட 20 ஆரஞ்சு பழங்களுக்குச் சமமாம்!

'தேன் நெல்லி' சாப்பிடுங்க, வயசே ஆகாது!

நெல்லிக்காய் பலன்கள்.

* நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

* முதுமையைத் தள்ளிப்போடும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் அதிகம்

(அதியமான் - ஒளவையார் கதை ஞாபகம் வருகிறதா?)

* உடலில் கேன்சர் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது.

* ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்தச் சோகையைக் குணப்படுத்துவதில் பேரிச்சம்பழங்களை விட சிறப்பாக செயல்படுகிறது.

* டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருள்கள் இருக்கின்றன.

* கண் நோய்களுக்கு அருமருந்து!

* விட்டமின் சி, உணவிலிருந்து சத்துக்களை உடல் கிரகித்துக்கொள்ள உதவுகிறது.

* முதுமையை ஏற்படுத்தும் நச்சுப் பொருள்களை உடலில் இருந்து அகற்றுகிறது!

முதுமையைத் தள்ளிப்போடத் 'தேன் நெல்லி'!

இவ்வளவு பயன்கள் இருப்பதால்தான் இன்று உலகளவில் இந்திய நெல்லிக்காய்க்கு மவுசு அதிகரித்துள்ளது. என்றும் இளமையாக, துள்ளிக் குதித்து வாழ்க்கையை வாழ நினைப்பவர்கள் கட்டாயம் தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொள்ள வேண்டும்!

சரி, ஒரு முழு நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாது. சாப்பிட்டாலும் நிறைய தண்ணீர் பருக வேண்டும். ஆதலால் தேனில் நெல்லியை ஊரப் போட்டு சாப்பிடலாம். இதன் சுவையை சொல்லி மாளாது, சுவைத்தவர்களுக்குத்தான் அந்த அருமை புரியும்! மேலும் தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் தேனின் நற்குணங்கள் நமக்குக் கிடைப்பதோடு, நெல்லியின் முழுப்பயன் நமக்குக் கிடைக்கிறது.

அதி அற்புதமான முதல் தர சுவை 'தேன் நெல்லி' யை சாரல் ஃபுட்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. ஃபாரீன் சாக்லேட் போல பேக் செய்யப்பட்டிருக்கும் இந்தச் சுவையான தேன் நெல்லிக்களை குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. சர்க்கரை நோய் உள்ளது என்று கவலைப்பட வேண்டாம், உங்களின் தினசரி கலோரி அளவு பொறுத்து சாரல் தேன் நெல்லிக்களை உட்கொள்ளலாம். அழகான கிஃப்ட் பேக்கிங்கில் கிடைப்பதால் உங்களின் அன்பானவர்களுக்கும் பரிசாக வாங்கித் தரலாம்!

சாரலின் இயற்கை உணவுகள்.

ஆரோக்கியமான உணவுமுறைக்கு மாறுவது இனி விருப்பம் அல்ல, அது காலத்தின் கட்டாயமாக ஆகிவிட்டது! இந்தச் சூழ்நிலையில் சமுதாயத்துக்குத் தேவையான நம் பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், தேன் நெல்லி, தேனில் ஊறவைத்த பழங்கள், இந்துப்பு போன்றவற்றை வழங்கிவருகிறது சாரல் ஃபுட்ஸ் நிறுவனம். பாலிஷ் செய்யப்படாத, பதப்படுத்தும் பொருள்கள், ரசாயனங்கள் இல்லாத இயற்கையான உணவுப் பொருள்களை வழங்குவதில் அக்கறை செலுத்திவருவது சாரலின் தனித்துவமாகும்!

சாரல் ஃபுட்ஸின் 'தேன் நெல்லி'யை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிடலாம்! விகடன் வாசகர்களுக்குச் சிறப்புச் சலுகையாக, ரூ. 200-க்கு மேல் ஆர்டர் செய்வோருக்கு, 30% தள்ளுபடி வழங்குகிறது சாரல் ஃபுட்ஸ். AVAL30 - எனும் டிஸ்கவுண்ட் கோட் பயன்படுத்தி இந்தத் தள்ளுபடியைப் பெற்றிடுங்கள்! (இந்த டிஸ்கவுண்ட் சாரல் ஃபுட்ஸின் அனைத்து தயாரிப்புகளுக்கும் உண்டு.)

இப்போதே வாங்க: https://saaralfoods.com/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு