Published:Updated:

இயற்கை உரத்தால் ஜெயிக்க முடியும்! - வி. செந்தில் குமார், நிறுவனர், சத்யம் பயோ

சத்யம் பயோ
சத்யம் பயோ

விவசாயம் மற்றும் இயற்கை வேளாண்மையில் ஆர்வம்கொண்ட அனைவரும் இதில் பங்கெடுக்கும் வகையில் பிரான்சைசி முறையைப் பின்பற்றுகிறோம்.

இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்தல், வேளாண் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, இயற்கை விளைபொருள்களை மக்களிடம் கொண்டுசேர்த்தல் - இவையே சத்யம் பயோ நிறுவனத்தின் குறிக்கோள். 'விவசாயத்தைத் தொழில் ஆக்குவோம், விவசாயிகளைத் தொழிலதிபர் ஆக்குவோம்!' எனும் லட்சியக் கொள்கையோடு நடைபோட்டு வரும் சத்யம் பயோவின் நடவடிக்கைகளால் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை விவசாய நடைமுறைகளுக்கு மாறி பயனடைந்துள்ளதாக தெரிவிக்கிறது சத்யம் பயோ. இந்நிறுவனத்தின் புதுமுயற்சி கடலையும் கழனியையும் இணைத்துள்ளது. கடற்பாசி மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் மூலம் களத்தைப் பசுமையாக்கி வருகிறது சத்யம்.

இயற்கை உரத்தால் ஜெயிக்க முடியும்! - வி. செந்தில் குமார், நிறுவனர், சத்யம் பயோ

ரசாயன உரத்துக்கு எதிரான குரல்

மதுரையைச் சேர்ந்த வி. செந்தில் குமார் பி.காம் LLB மற்றும் வேளாண் டிப்ளமோ பட்டதாரி. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் ரசயான உரத்தின் தீமைகளை நன்கு அறிந்தவராவார். அவற்றைப் பயன்படுத்துவதால் மண்ணும் பயிரும் விஷமாகிப்போகும் என்பதை உணர்ந்து, அவற்றுக்கு மாற்றாக பாதுகாப்பான இயற்கை உரங்களைத் தேட ஆரம்பித்தார். இறுதியாக சர்காசம் விக்டி (Sargassum Wightii) எனும் பழுப்பு நிறக் கடற்பாசி மூலம் இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கும் முறையை அறிந்து, அவற்றை அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் முயற்சியில் முழுமூச்சாய் இறங்கினார்.

2004 முதல் கடந்த 16 ஆண்டுகளாக இயற்கை வேளாண்மை குறித்த பல கருத்தரங்குகள், கிராமிய விவசாயிகள் விழிப்புணர்வுக் கூட்டங்கள், விவசாய ஆலோசனை முகாம்கள், மாணவர்களுக்கான விதைப்பந்து திருவிழா எனப் பலதரப்பட்ட நடவடிக்கைகள் மூலம் இயற்கை விவசாயத்தின் நற்பயனைப் பற்றியும், ரசாயன உரத்தின் தீமைகள் பற்றியும் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில், தன் சத்யம் பயோ நிறுவனம் மூலம் எடுத்துரைத்து வருகிறார் செந்தில்குமார். தமிழகத்தில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை உலகளவில் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளார். இயற்கை விவசாயத்தில் புதுமை செய்துள்ள விவசாயிகளை அங்கீகரிக்கும் விதமாக 'உழவு நாயகன்' விருதுகளையும் சத்யம் பயோ வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

இயற்கை உரத்தால் ஜெயிக்க முடியும்! - வி. செந்தில் குமார், நிறுவனர், சத்யம் பயோ

ஏன் வேண்டும் இயற்கை விவசாயம்?

"ஆண்டுக்கணக்கில் ரசாயன உரத்தைக் கொட்டி மண்ணை நச்சாக்கி வைத்துள்ளோம். இப்படியிருக்க, இயற்கை உரம் பயன்படுத்துவதால் உடனே மண்ணின் பசுமையை மீட்டுவிடமுடியாது. இயற்கை விவசாயத்துக்கு மாற நினைப்பவர்கள் குறைந்தது 24 - 36 மாதங்கள் வரை காக்கவேண்டும். 10%, 20% எனப் படிப்படியாக இரசாயன உரத்தைக் குறைத்து, அதற்கு மாற்று அளவில் இயற்கை உரத்தை இட வேண்டும். 2-3 ஆண்டுகள் முடிவில் மண்ணின் ஆரோக்கியம் மீள்வதோடு, பசுமையான விளைச்சல், சுவையான பயிர்கள், குறைவான நோய்த்தாக்கம் மற்றும் நீர் சேமிக்கும் திறன் அதிகரிப்பு உள்ளிட்ட பயன்களைக் கண்கூடாகக் காணமுடியும். செயற்கை ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால், விளைச்சலுக்குக் குந்தகம் விளைவிக்கும் உயிரிகள் மேலும் பலமடையவே செய்கின்றன, இதனால் மேலும் மேலும் ரசாயனத்தின் அளவை அதிகரிக்க நேரிடும். ஆனால் இயற்கை விவசாய முறைகளால் மண் செழிப்புற்று, வளம் குன்றாமல் நல்ல மகசூல் எடுக்கும் மிகச்சிறந்த நிலையை எட்ட முடியும்." என்கிறார் செந்தில்குமார்.

சக்தி இயற்கை உரம் - விவசாயிகளுடன் மாணவர்கள்!

"ISCOP-ன் NPOP தரச்சான்றிதழ், ISO 9001: 2015 சான்று பெற்றுள்ள எங்கள் நிறுவனத்தின் 'சக்தி இயற்கை உரங்கள்', ரசாயனப் பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக்கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்களுக்கு மாற்றாக 100% இயற்கைத் தயாரிப்புகளை விவசாயிகளுக்கு வழங்கிவருகிறது. சக்தி இயற்கை உரங்கள் அனைத்தும் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி மையங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, வழக்கத்தை விட கூடுதலாக 30 சதவீதம் மகசூல் அளிக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆரோக்கியமான, நோயற்ற, செழிப்பான பயிர்கள் வளருவதாக பல்வேறு விவசாயிகள் அனுகூலமான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்."

இயற்கை உரத்தால் ஜெயிக்க முடியும்! - வி. செந்தில் குமார், நிறுவனர், சத்யம் பயோ

"நீண்ட காலப் பயிர், குறுகிய காலப் பயிர், அடி உரம், தொழு உரம் மற்றும் தெளி உரம் உள்ளிட்ட விவசாயிகளின் பலதரப்பட்ட சந்தேகங்களுக்கு ஆலோசனை தந்து உதவுகிறது சத்யம். இதற்காக தமிழ்நாடு முழுக்கவுள்ள பல வேளாண் கல்லூரிகளில் நேர்முகத் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்படும் வேளாண் பட்டதாரி மாணவர்களைக் கொண்டு, விவசாயிகளுக்கு நேரடியான கள ஆலோசனைகளையும், இயற்கை வேளாண் முறை மற்றும் இயற்கை இடுபொருள் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்கத்தையும் அளித்துவருகிறது. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான வேளாண் மாணவர்கள் இதனால் பயனடைந்துவருகின்றனர், இதுமட்டுமல்லாது விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வேளாண் மாணவர்கள் உழவைத் தொடர்ந்து செய்திட உதவிவருகிறது சத்யம்!"

எங்கும் இயற்கை எதிலும் இயற்கை...

"இயற்கை விளைபொருள்களை மக்களுக்குக் கொண்டுசெல்ல F3 ஆர்கானிக் மார்க்கெட்டை உருவாக்கியுள்ளோம். விவசாயம் மற்றும் இயற்கை வேளாண்மையில் ஆர்வம்கொண்ட அனைவரும் இதில் பங்கெடுக்கும் வகையில் பிரான்சைசி முறையைப் பின்பற்றுகிறோம். இதுவரை 50-க்கும் மேற்பட்ட இயற்கை வேளாண் ஆர்வலர்கள் இதில் இணைந்துள்ளனர். தமிழகம் முழுக்க, தாலுக்காவுக்கு ஒரு F3 மார்க்கெட் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம், இதனால் ஆயிரக்கணக்கான கிராமிய இளைஞர்களை இயற்கை வேளாண்மை சார்ந்த தொழில்முனைவோராக மாற்ற முடியும். இவர்கள் அனைவருக்கும், விற்பனைக் கள ஆய்வு, விற்பனைப் பயிற்சி மற்றும் தொழில்சார்ந்த செயல்பாடுகளில் உறுதுணையாக செயல்படவுள்ளது சத்யம் பயோ."

"நாடு முழுக்க இயற்கை உணவை கொண்டுசேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதவிர கால்நடைகளுக்கான சத்தான இயற்கை தீவனம் தயாரித்தல், இயற்கை உணவு மூலப் பொருள்கள் தயாரித்தல், மதுரை IARS வேளாண் கல்லூரி மூலம் மாணவர்களை இயற்கை விவசாயத்தில் பயிற்றுவித்தல், SEED அறக்கட்டளை மூலம் இளைஞர்க்கு இயற்கை உழவு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துதல் என இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தி சத்யம் பயோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்கிறார் வி. செந்தில் குமார்.

இயற்கை உரத்தால் ஜெயிக்க முடியும்! - வி. செந்தில் குமார், நிறுவனர், சத்யம் பயோ

கடந்த சர்வதேச கடல்பாசி கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் தமிழ்நாடு அரசின் கடலோர கிராமிய மீனவப் பெண்களின் கடல்பாசி சேகரிப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் சத்யம் தொழிற்குழுமத்திற்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் கடலோர கிராமிய மீனவப்பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலை மேம்பட நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இயற்கை விவசாயம் குறித்து மேலும் அறிந்துகொள்ள, உங்கள் வயல்/தோட்டத்துக்குத் தேவையான வேளாண் அறிவுரைகள் பெற்றிட, இயற்கை விவசாயம் தொடர்பான களப் பயிற்சி, வியாபாரப் பயிற்சி, செயல்முறைப் பயிற்சி பெற, F3 ஆர்கானிக் மார்க்கெட-ல் பிரான்சைசியாக இணைந்து வியாபாரத்தில் ஈடுபட, அழைக்கவும்: 75508 75508

அடுத்த கட்டுரைக்கு