Published:Updated:

3 வயதில் ரத்தப் புற்றுநோய்! #தருணைக்_காப்பாற்றுங்கள்

அன்றிலிருந்து இன்றுவரை எங்கள் சக்திக்கு முடிந்ததை எல்லாம் செய்து தருணை பிழைக்க வைத்துள்ளோம். எங்கள் வாழ்க்கையே நரகமாகிவிட்டது போலத்தான் இருக்கிறது. - தருணின் தாய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தன்னுடைய 3 வயது மகன் தருண்-ஐத் தழுவும்போதெல்லாம், இதுவே கடைசி முறையாக இருந்துவிடுமோ என்ற பதற்றத்துடனேயே தன் நாட்களைக் கழித்து வருகிறார் அந்தத் தாய். தருணுக்கு வந்திருப்பது மிகக் கொடூரமான ரத்தப் புற்றுநோய். பிறந்ததிலிருந்தே பிழைப்புக்கான போராட்டத்தை ஆரம்பித்துவிட்டான். நோயினால் வாடி வதங்கிக் காணப்படும் தன் பிள்ளையைக் கண்டு அழுவதைத் தவிர அவனது தாயால் எதுவும் செய்ய முடியவில்லை.

"புற்றுநோய் பிரச்னை இல்லை. ஏழையாக இருப்பதுதான் எங்களின் பெரிய தப்பு. எங்கேயாவது ஓடியலைந்து பணம் திரட்டி எங்கள் பிள்ளையைக் காப்பாற்றத்தான் நினைக்கிறோம், ஆனால் முடியவில்லையே!" கதறுகிறார் தருணின் தாய்.

"தருண் பிறந்த தருணம்தான் என் வாழ்வின் பொன்னான தருணம். எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும் சரி, அவனின் சின்ன சிரிப்பு போதும். அந்த மகிழ்ச்சியிலேயே எங்களின் நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. துரதிர்ஷ்டவசமாக, அந்த மகிழ்ச்சி எல்லாம் சிதைந்து மண்ணோடு மண்ணாகப்போனது."

3 வயதில் ரத்தப் புற்றுநோய்! #தருணைக்_காப்பாற்றுங்கள்

ஜனவரி 2020: எங்களின் வாழ்க்கை ஒரே இரவில் தடம்புரண்டது!

சில தினங்களாக தருணின் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் தெம்பே இல்லாமல் உடல் எல்லாம் வெளிறி தருணால் நடக்கக்கூட முடியாமல் போனது. உடம்பெல்லாம் நெருப்பாய் கொதிக்க அவனைத் தூக்கிக்கொண்டு பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கே அவனுக்கு நிறைய சோதனைகள் நடத்தப்பட்டன.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவிப்பிலிருந்த தருணின் பெற்றோர் வார்டுக்கு வெளியே இருந்துகொண்டு பிள்ளை பிழைத்து வர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். ஆனால் பாவம், அவர்களின் பிரார்த்தனை எல்லாம் வீணாகிப்போனது. அடுத்ததாக டாக்டர் சொல்லவிருக்கும் செய்தியைக் கேட்டால் அவர்கள் எப்படித் தாங்கிக்கொள்வார்கள்?

"உங்களின் மகன் வருணுக்கு வந்திருப்பது அக்யூட் மயலாய்டு லுக்கேமியா (acute myeloid leukemia) எனும் ஒருவகையான ரத்தப் புற்றுநோய், மிகவும் கொடூரமானது. உடனடியாக தருணுக்குக் கீமோதெரப்பி கொடுக்கப்படவில்லை என்றால் அவனின் உயிருக்கே ஆபத்து!" என்றார் டாக்டர்.

திகைப்பு. பயம். அதிர்ச்சி. அவர் சொன்னதை தருணின் அன்னையால் நம்ப முடியவே இல்லை. "டாக்டர்! நீங்கள் சொல்வது உண்மைதானா?" என்ற அவரின் கேள்விக்கு டாக்டரிடமிருந்து வந்த பதில்: "என்னை மன்னித்துவிடுங்கள். ஆம்!"

3 வயதில் ரத்தப் புற்றுநோய்! #தருணைக்_காப்பாற்றுங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடரும் ஓட்டம்.

"அன்றிலிருந்து இன்றுவரை எங்கள் சக்திக்கு முடிந்ததை எல்லாம் செய்து தருணை பிழைக்க வைத்துள்ளோம். எங்கள் வாழ்க்கையே நரகமாகிவிட்டது போலத்தான் இருக்கிறது. இப்போது தருணின் மொத்த சிகிச்சைக்கும் ரூ. 20 லட்சம் ($ 26723) தேவைப்படுகிறது."

"நாங்கள் இருக்கும் நிலையில் இந்தத் தொகையை எங்களால் கனவிலும் நினைத்துக்கூடப்பார்க்க முடியாது. பிறரிடம் கையேந்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை! எங்களால் இதற்கு மேல் கடன் வாங்க முடியாது. எங்களின் சக்தியை எல்லாம் இழந்து நிற்கிறோம். தயவுசெய்து உதவிடுங்கள்."

"நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு ரூபாயும் தருணின் வாழ்வை மீட்டுத் தர உதவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!", மகன் பிழைப்பான் என்ற எதிர்பார்ப்புடன் தருணின் தாய்.

இப்போதே பண உதவி செய்திட, இந்த லிங்க் க்ளிக் செய்யவும்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை கெட்டோ-வின் விளம்பரதாரர் பகுதி என்பதால் கட்டுரையின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால் நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு