Published:Updated:

தமிழ் வாழ உங்கள் தயவு வேண்டும்! #Save_Tamilarasan

சிகிச்சை
சிகிச்சை

இப்போது தமிழைக் காப்பாற்ற ஒரே வழி 'போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட் (Bone Marrow Transplant)' எனும் சிகிச்சை மட்டுமே.

வருஷத்தில் 365 நாளும், 24 மணி நேரம்கூட ஆட்டோ ஓட்டத் தயாராக இருக்கிறார் ஆறுமுகம். அவருக்கு இப்போது தேவையெல்லாம் 12 லட்ச ரூபாய். பணத்துக்காக தெரிந்தவர் வீட்டுப் படிகளெல்லாம் ஏறி இறங்கிவிட்டார், தெரியாத நபர்களிடம் கெஞ்சிப் பார்த்துவிட்டார். தன் வாழ்நாளில் மொத்தமாக அவ்வளவு பெரிய தொகையை அவர் பார்த்ததுகூட கிடையாது. தனக்கு இப்படியொரு நெருக்கடியான சூழ்நிலை வரும் என்று சவாரி ஓட்டிப்போகும்போது தற்செயலாகவும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். தமிழுக்கு (தமிழரசனுக்கு) வந்த கேன்சர் ஆறுமுகத்தின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது. மருத்துவமனையில் இருக்கும் தமிழுக்கு 9 வயசு, ஆறுமுகத்தின் ஒரே பிள்ளை...

2015, தமிழுக்கு 5 வயது. 'உங்கப் பிள்ளைக்கு அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுக்கேமியா (acute lymphoblastic leukemia)' என டாக்டர் கூறியபோது, அது ஏதோ கடுமையான ஜுரம் என்றே அப்பா ஆறுமுகமும் அம்மா ஜெயந்தியும் நினைத்தனர். எப்படியாவது டாக்டர்கள் காப்பாற்றிவிடுவார்கள் என்று நம்பினர். மெல்ல மெல்ல தமிழின் நிலைமையை விளக்கிய டாக்டரின் வார்த்தைகளில் இருந்து பிள்ளைக்கு வந்திருப்பது ரத்தப் புற்றுநோய் எனப் புரியும்போது... (சில சோகங்களுக்கு சொற்கள் கிடையாது). அழுது புலம்பி தெய்வங்களுக்கெல்லாம் நேர்ந்துகொண்ட பிறகு குழந்தைக்குத் தேவை 'கீமோதெரப்பி' சிகிச்சை என்கிற நிதர்சனத்தை உணர்ந்தனர்.

தமிழ் வாழ உங்கள் தயவு வேண்டும்! #Save_Tamilarasan

கடனுக்கு மேல் கடன் வாங்கினர், கையிலிருந்த கொஞ்சநஞ்சம் நகைகளையும் விற்றனர், கண்ணில்பட்டதை எல்லாம் அடகு வைத்து சிகிச்சைக்கான பணத்தைத் திரட்டினர் ஆறுமுகமும் ஜெயந்தியும். ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் மாறி மாறி ஓடி, தூக்கமில்லா இரவுகள் பல கடந்து, வலிமிகுந்த கீமோதெரப்பி சிகிச்சைகள் முடிந்து மூன்றரை வருடங்கள் கழித்து, 'தமிழுக்கு ரத்தப் புற்றுநோய் குணமாகிவிட்டது' என டாக்டர்கள் கூறியபோது ஜெயந்திக்கும் ஆறுமுகத்துக்கும் கிடைத்த நிம்மதியும் மகிழ்ச்சியும் அளவில்லாதவை. ஒரே மகன் உயிர்தப்பினான், இனியாவது நிம்மதியாக வாழலாம் என எண்ணினர்... ஆனால்...

12 லட்சம் தேவை...

இரண்டு மாதங்களுக்குப் பின், தற்போது மீண்டும் தமிழின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. ஜெயந்திக்கும் ஆறுமுகத்துக்கும் பழைய கசப்பெல்லாம் மீண்டும் எழுந்து வந்து தொண்டையை இறுக்கியதுபோல் ஆகிவிட்டது. பரிசோதனையில் தமிழின் உடம்பில் மீண்டும் புற்றுநோய் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருவதாக தெரியவந்துள்ளது. இப்போது தமிழைக் காப்பாற்ற ஒரே வழி 'போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட் (Bone Marrow Transplant)' எனும் சிகிச்சை மட்டுமே. ஏற்கனவே இச்சிகிச்சைப் பெற்ற பல நோயாளிகள் இதனால் உயிர்பிழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த இக்கட்டான சிகிச்சைக்கு 12 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.

கண்ணீர் எல்லாம் தீர்ந்தபின், அழத் தெம்பில்லாமல் சரிந்துபோயுள்ளனர் ஜெயந்தியும் ஆறுமுகமும். நாள் முழுதும் ஆறுமுகம் ஆட்டோ ஓட்டினாலும் இவ்வளவு பெரிய தொகையை எப்படி இந்த ஏழைக் குடும்பம் திரட்டப்போகிறது? தமிழ் பிழைப்பானா? இவர்களுக்கு ஒரு விடிவுகாலம்தான் பிறக்குமா? 'நீங்கள் நினைத்தால் முடியும்' என மக்களை நம்பி களமிறங்கியுள்ளது Ketto நிதி திரட்டும் தளம். தமிழின் சிகிச்சைக்காக உதவ நினைக்கும் ஒவ்வொரு நல்ல உள்ளத்திடமும் கையேந்தி நிற்கிறது ketto.

https://www.ketto.org/stories/savetamilarasan?utm_campaign=savetamilarasan&utm_medium=position_1&utm_source=external_vikatan&payment=form எனும் லிங்கிற்குச் சென்று, தமிழின் சிகிச்சைக்குத் தங்களால் இயன்ற உதவியை இப்போதே செய்யலாம். ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் மற்றும் ஜெயந்தியின் சுமையைக் கொஞ்சமேனும் குறைக்கலாம்...

தமிழ் வாழ உங்கள் தயவு வேண்டும்! #Save_Tamilarasan

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto-வின் விளம்பரதாரர் பகுதியாகும். எனவே, இதில் கூறப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால், நன்கொடை செய்வதற்கு முன்னர் இச்செய்தியின் உண்மைத்தன்மையை சுயாதீனமாக ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு