Published:Updated:

இந்தக் குழந்தையாவது பிழைச்சு வரணும்!" கதறும் இளம் தம்பதி.

மிக மிக இக்கட்டான, நீண்ட நேரம் நடைபெறக் கூடிய இந்த மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 16.5 லட்சம் ($ 22225) தேவைப்படுகிறது. தினக்கூலியாய் வேலை செய்யும் ஃபைஸானின் மாத வருமானமோ ரூ. 5000 மட்டுந்தான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"அந்தப் பிஞ்சு உடம்பில் ஏதேதோ மெஷின்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவனுக்கு அதுபற்றிய விவரம் எல்லாம் தெரியாது. மழலைச் சிரிப்புடன் எங்களைப் பார்க்கிறான். பிறந்ததிலிருந்தே அவனுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது, தினம் தினம் அதை எதிர்த்துப் போராடி வருகிறான். என் பிள்ளைதான் எனக்கு எல்லாமே! அவன் பிழைத்து வருவான் என்ற நம்பிக்கையில்தான் உயிரைக் கையில் பிடித்து வைத்துள்ளேன். ஆனால் இப்போது தகுந்த நேரத்தில் உதவி கிடைக்காமல் போனால்..." கண்ணீருடன் நிற்கிறார் உஸ்மானின் அம்மா ஜீனத்.

ஜீனத் மற்றும் ஃபைஸான் தம்பதியின் ஆறு மாத ஆண் குழந்தை உஸ்மான். அவன்தான் இந்தத் தம்பதியின் மகிழ்ச்சி... தங்களின் குழந்தைக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று பாடுபடும் ஏழைப் பெற்றோர் இவர்கள். ஃபைஸான்தான் வேலைக்குச் செல்கிறார், ஜீனத் வீட்டைக் கவனித்துக்கொள்கிறார். வாழ்க்கை சந்தோஷமாய்த்தான் போய்க்கொண்டிருந்தது, திடீரென உஸ்மானுக்கு உடம்பு சரியில்லாமல் போக, அவர்களின் வாழ்க்கை மீண்டும் திசை திரும்பியது!

இந்தக் கெட்ட கனவுக்கு முடிவே இல்லையா!

உஸ்மானை மருத்துவமனையில் வைத்துப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் கல்லீரலில் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதைக் கேட்ட அந்தத் தம்பதி பயத்தில் அரண்டு போனார்கள். இதே பிரச்னையால்தான் தங்களுக்கு முதலில் பிறந்த குழந்தை இறந்துபோனது! உஸ்மானின் பிறப்பு, ரணமாகிக் கிடந்த அவர்களின் நெஞ்சத்துக்கு மருந்து போல் இருந்தது. ஆனால் இப்போது அதே கெட்ட கனவு மீண்டும் அவர்களைத் துரத்துகிறது, உஸ்மானையும் இழந்து விடுவோமோ என்று மிரண்டு நிற்கிறார்கள் அந்த அப்பாவி பெற்றோர்!

இந்தக் குழந்தையாவது பிழைச்சு வரணும்!" கதறும் இளம் தம்பதி.

உஸ்மானுக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உஸ்மானின் தந்தையே பகுதி கல்லீரல் தானம் செய்யலாம் என்றாலும், மிகப்பெரிய சவால் ஒன்று காத்துள்ளது...

மிக மிக இக்கட்டான, நீண்ட நேரம் நடைபெறக் கூடிய இந்த மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 16.5 லட்சம் ($ 22225) தேவைப்படுகிறது. தினக்கூலியாய் வேலை செய்யும் ஃபைஸானின் மாத வருமானமோ ரூ. 5000 மட்டுந்தான்!

"அல்லா எங்கள் குழந்தையைக் காப்பாற்று, அல்லா எங்கள் பிள்ளையின் உயிரை மீட்டுக்கொடு." என்று உருகி உருகி கண்ணீர் வடித்தபடி தங்கள் குழந்தையின் சிகிச்சைக்கு ஏதாவதொரு வழி கிடைக்காதா என்று ஏங்கி நிற்கிறார் ஜீனத்.

வட்டி, கடன், கையில் இருந்ததை எல்லாம் விற்று சில ஆயிரம் ரூபாயைத்தான் இந்தத் தம்பதியால் சேகரிக்க முடிந்தது. தங்களால் இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலைமையில், உங்களின் உதவியை நாடி கையேந்தி நிற்கின்றனர்.

இந்தக் குழந்தையாவது பிழைச்சு வரணும்!" கதறும் இளம் தம்பதி.

மீண்டும் ஒரு குழந்தையை இந்தத் தம்பதி இழக்கக்கூடாது... உங்களால் முடிந்த பண உதவியைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தயவுகூர்ந்து உதவுங்கள், உஸ்மானின் உயிரைக் காப்பாற்றித் தருவீர்களா?

இப்போதே உங்களின் உதவியைச் செய்திட, இங்கே கிளிக் செய்யவும்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை கெட்டோ-வின் விளம்பரதாரர் பகுதி என்பதால் கட்டுரையின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால் நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு