Published:Updated:

தவழும் வயதில் 'தலசீமியா' நோய்! #SaveDeepak

தலசீமியா
தலசீமியா

மகனின் மருத்துவ சிகிச்சை காரணமாக, தொடர்ந்து தொழிலில் கவனம் செலுத்தமுடியாத ஸ்ரீனிவாசன் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் கிடைத்துவந்த கொஞ்சநஞ்சம் பணமும் இல்லாமல் போனது. "சந்தோஷம் எங்கள் வாழ்க்கைக்குள் நுழைந்ததும், வேதனையும் தொற்றிக்கொண்டது.

பிறந்தது முதல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும், வலி மிகுந்த மழலைக் குரலை கேட்பதுமாய் நாட்களை கடத்தி வருகின்றனர் தீபக்கின் பெற்றோர் சங்கீதா மற்றும் ஸ்ரீனிவாசன். மாதம் ஒருமுறை ரத்த மாற்று சிகிச்சை செய்யவில்லை எனில் தீபக்கின் உடல்நலம் கவலைக்கிடமாக மாறிவிடும் என்பதே அவர்களின் வேதனைக்கு காரணம். தீபக்கிற்கு ஏன் இந்த நிலைமை...

வேதனையாக மாறிய சந்தோஷம்...

கடவுளின் வரமாக சங்கீதா - ஸ்ரீனிவாசன் தம்பதிக்கு கிடைத்தான் தீபக் (தற்போது 2 வயது). முதன்முறையாக பெற்றோரான தருணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சி கொண்டிருந்தனர். அந்த மகிழ்ச்சியான தருணம் அவர்களுக்கு நிலைத்து நிற்கவில்லை.. தீபக் பிறந்த நான்கு மாதங்களிலேயே ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் அவர்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

திடீரென ஒருநாள் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தீபக்கின் உடல்நிலை மோசமடைந்தது, தாய்ப்பாலையும் குடிக்க மறுத்தான். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தீபக்கிற்கு பலவிதமான சோதனைகள் எடுக்கப்பட்டன. சோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ள மருத்துவர் அறைக்கு மிகுந்த பயத்துடனே சென்றனர் தீபக்கின் பெற்றோர். உடல் நடுக்கத்துடன் மருத்துவரின் எதிரே அமர்ந்த அவர்களின் இதயம் மருத்துவர் கூறியதைக் கேட்டு சுக்குநூறாக உடைந்தது. தலசீமியா - Thalassemia (Major) எனும் அரியவகை ரத்த அழிவுச் சோகை நோயினால் தீபக் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் கூறினார்.

தவழும் வயதில் 'தலசீமியா' நோய்! #SaveDeepak

தலசீமியா நோயால் ஏற்படும் ரத்தக் கோளாறினால் ஹீமோகுளோபினின் வடிவம் இயல்புக்கு மீறி உருமாறத் தொடங்கும். ஹீமோகுளோபின் என்பது புரதக் கூட்டணுக்களாகும். சிவப்பு ரத்த அணுக்களில் இருக்கும் இவைதான் உடலுக்கு ஆக்சிஜெனை எடுத்துச் செல்கின்றன. இதில் உருமாற்றம் ஏற்படும்போது, எலும்பு குறைபாடு (குறிப்பாக முகத்தில்), கறுமையான சிறுநீர், தாமதமான வளர்ச்சி, அதிகப்படியான சோர்வு, வெளிரிய தோல் போன்ற பாதிப்புகளைக் கொடுக்கும்.

இதன் காரணமாக தீபக்கிற்கு ஒவ்வொரு மாதமும் ரத்த மாற்று சிகிச்சை அவசியம் தேவை என்று மருத்துவர் கூறினார். பல மாதங்களாக தீபக்கிற்கு ரத்த மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீபக்கின் தந்தை ஸ்ரீனிவாசன் நெசவுத் தொழில் செய்பவர். மாத வருவாயாக சிறு தொகையையே பெறுகிறார். இருப்பினும் நண்பர்கள், லோன் என இத்தனை மாதங்களும் தீபக்கின் சிகிச்சைக்கான பணத்தை ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில், தீபக்கிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தாற்காலிகமானது என்றும் உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்தால் மட்டுமே அவனது உடல்நலம் சரியாகும் எனவும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். தாமதமானாலும், தீபக்கிற்கான கொடையாளியை (Donor) கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் அவனுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்கு ரூ.25 லட்சம் தேவையாக இருக்கிறது.

வேலை போனது...

மகனின் மருத்துவ சிகிச்சை காரணமாக, தொடர்ந்து தொழிலில் கவனம் செலுத்தமுடியாத ஸ்ரீனிவாசன் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் கிடைத்துவந்த கொஞ்சநஞ்சம் பணமும் இல்லாமல் போனது. "சந்தோஷம் எங்கள் வாழ்க்கைக்குள் நுழைந்ததும், வேதனையும் தொற்றிக்கொண்டது. இந்த நிலைமைக்கு வர நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று தெரியவில்லை. என் மகனின் கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. என்ன செய்வதென்றே புரியவில்லை" எனக் கலங்கிநிற்கிறார் ஸ்ரீனிவாசன்.

ரத்த மாற்று சிகிச்சையில் 26 சுழற்சிகளை வலியுடன் பொறுத்துக்கொண்ட தீபக், இன்னும் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு உதவ நிதி திரட்டும் இணையதளமான 'KETTO' முன்வந்துள்ளது. நம்பிக்கை இழந்து தவிக்கும் தீபக்கின் குடும்பத்தாருக்காக KETTO-வுடன் சேர்ந்து உதவிக் கரங்களை நீட்டினால் அது நாம் அவனுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவியாக அமையும். தீபக்கிற்கு உதவி செய்ய நினைக்கும் அத்தனை நல்லுள்ளங்களும் இந்த லிங்கிற்குச் சென்று தங்களின் உதவியைச் செய்யலாம்!

தவழும் வயதில் 'தலசீமியா' நோய்! #SaveDeepak

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை KETTO-வின் விளம்பரதாரர் பகுதியாகும். எனவே, இதில் கூறப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் தாங்கள் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால், நன்கொடை செய்வதற்கு முன்னர் இச்செய்தியின் உண்மைத்தன்மையை சுயாதீனமாக ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு