Published:Updated:

நீங்கள் Mr.லோக்கல் தானா ? #MyVikatan

விகடன் வாசகி

இந்தக் குழப்பத்திற்கு எப்படி விடை காண்பது. நீங்கள் Mr. லோக்கலாக மாறித்தான் ..

Representational Image
Representational Image

அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றி எத்தனை விளம்பரங்கள் என்ன உண்பது, எதை அணிவது, எங்கே சுற்றுலா செல்வது என்று எந்த பற்பசையில் பல்துலக்குவது முதல் எந்த மெத்தையில் உறங்குவது வரை பல சாய்ஸ்கள். இந்தக் குழப்பத்திற்கு எப்படி விடை காண்பது. நீங்கள் Mr. லோக்கலாக மாறித்தான் !!

Representational Image
Representational Image

1. ஈட் லோக்கல் (Eat local) - கிவி சிறந்த பழம்தான். ஆனால் அம்மா செய்து கொடுத்த நெல்லி ஊறுகாய் அதைவிட சத்து நிறைந்தது. அத்தையின் கொண்டக்கடலை குருமா, சித்தியின் பூண்டுக்குழம்பு, பாட்டியின் சீனிவரைக்காய் வற்றல் என்று உங்களைச் சுற்றி உள்ளவரின் கைப்பக்குவத்தை உரிமையோடு கேட்டு அன்போடு சுவைத்துப் பாருங்கள். இவை ஆரோக்கியமும் கூட.

2. ரோம் லோக்கல் (Roam local) - சிக்கிம் சிறந்த சுற்றுலா தலம்தான். அங்கே செல்ல பணமும் வயதும் ஒத்துழைக்கவில்லை என்று குமுற தேவையில்லை. நம் சிலுக்குவார்பட்டிக்குகூட ஒரு ஸ்பெசாலிட்டி உண்டென்பதை கண்டு உங்கள் சொந்த ஊரின் அருகில் இருக்கும் பல இடங்களை விரும்பி சுற்றிப்பாருங்கள். என் நண்பர் சிவா அவர்களின் புகைப்பட பகிர்வுகளிலிருந்து மண்ணவனூர் செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையம், நெல்லை பணகுடி அருகே உள்ள குத்தரபாஞ்சான் அருவிக்கு அருகில் மலை ஏறும் இடம், செங்கோட்டை குண்டாறு நீர்த்தேக்கம், கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலையோடு அமைந்திருக்கும் சாமந்தி பூ தோட்டம் ஆகியற்றைப் பார்த்து இது வெளிநாடுதான் போல என்று ஆச்சர்யமடைந்துள்ளேன். இப்பேற்பட்ட இடங்கள் நம் அருகிலேயே இருக்கிறதா என்று நீங்களும் வியந்து போவீர்கள். குறைந்த செலவில், நேரத்தில் மிகுந்த புத்துணர்ச்சியை நம்மூரே நமக்கு அளிக்கும்

3. ஹியர் லோக்கல் (Hear local) - பிலிவர் பாடல் ( Imagine Dragons’ Believer ) தான் கடந்த ஒருவருட காலமாக இளைஞர்களை உற்சாகப்படுத்தும் ஓர் குரலாக பலரது அலைபேசியில் ஓங்கி ஒலிக்கிறது. இதற்கு சமமாக சுகிசிவம் அய்யா மற்றும் வாரியார் சாமிகள் அவர்களது பேச்சும் பல மடங்கு உற்சாகத்தை அளிக்கும் வல்லமை பெற்றவை. புரியாத மொழியைவிட நம் தாய் மொழியின் உரையாடல் நம் உறக்க நிலையில் கூட நம்மை விழித்தெழச் செய்யும்

குறைந்த செலவில், நேரத்தில் மிகுந்த புத்துணர்ச்சியை நம்மூரே நமக்கு அளிக்கும்

4. ரிவியூ லோக்கல் (Review local) - இன்று இணையம் அத்துணைப் பேரையும் ஒரு பெரிய விமர்சன உலகிற்கு இட்டுச்சென்றுள்ளது. ஒரு படம் வெளியாகி 3 மணி நேரத்திற்குள் 300 ரிவியூ வந்துவிடுகிறது. அனைவரும் கூட்டாக ஒரே குட்டையில் விழாமல் பல பெரிய இயக்குநர்கள் படங்களையே அசைபோடாமல், வெளிச்சத்திற்கு வராத நம்மைச் சுற்றியுள்ளவர்கள், தெரிந்தவர்கள் எடுக்கும் குறும்படம், ஆவணப்படத்திற்கும் இந்த வசதியைப் பயன்படுத்தி ரிவியூ செய்து, பகிர்ந்து அவர்களை மேலும் ஊக்குவிக்கலாம்

5. கம்பளைன்ட் லோக்கல் (Compliant local) - சிறுசேரியில் அமர்ந்து கொண்டு சீயாட்டல் (Seattle) இப்படி இருக்கும் அப்படி இருக்கும் இங்குதான் ஒரே குப்பை, மாசு என்று வீண் பேச்சு பேசாமல் ஒரு நல்ல குடிமகனாக எளிமையாக உங்களால் முடிந்த கடமைகளை செய்து கொண்டிருங்கள். பகலில் தெருவிளக்கு எரிந்து கொண்டிருந்தால் நம்மில் எத்துணைப் பேர் நகராட்சி அலுவலகத்திற்கு அழைப்பு விடுக்கிறோம். சாக்கடை திறந்திருந்தால் எவ்வளவு பேர் கம்பளைன்ட் பதிவு செய்கிறோம். ஒரு நல்ல குடிமகனாக நாம் அரசின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்லலாமே. இன்னும் இந்தியா பல நேர்மை அதிகாரிகளை கொண்டிருக்கத்தான் செய்கிறது. நிச்சயம் அவர்கள் ஆவண செய்வார்கள் என நம்புவோம்

Representational Image
Representational Image

6. அட்மைர் லோக்கல் (Admire local ) - தொலைக்காட்சியில் வரும் சுட்டிக்குழந்தையின் பாடலை கைதட்டி ரசித்து கேட்கும் நாம், நம் வீட்டுக் குழந்தைகளின் திறமையையும் ஊக்குவித்து, அங்கீகாரம் செய்து அவர்கள் திறமையில் ஜொலித்திட வழிவகை செய்து தர வேண்டும். மதிப்பெண்தான் வாழ்க்கை என்று உங்கள் குழந்தையின் மகத்துவத்தை தொலைத்து விடாதீர்கள்.

7. கம்யூட் லோக்கல் (Commute local) - ட்ரீம் கார் மற்றும் பைக் என்று எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். அதில் தவறில்லை. ஆனால் நம் சுயநலத்திற்காக இயற்கையை மாசுபடுத்திவிட்டு அடுத்த தலைமுறைக்கு காற்றையே கனவாக்கி விடக்கூடாது. உங்களால் இயன்ற சமயம் இயன்ற அளவு பப்ளிக் டிரான்ஸ்போர்ட் அதாவது பொதுத்துறை பேருந்துகளை பயன்படுத்த பழகுங்கள். நீங்கள் தனியாய்ச் செய்யும் பயணத்தைவிட இந்தப் பயணம் பல சுவாரசிய கதைகளை உங்களுக்குச் சொல்லும்.

Representational Image
Representational Image

8. ஹெல்ப் லோக்கல் (Help local) - நாம் அனைவரும் நம் வருமானத்தில் சிறிதளவையாவது யாருக்காவது உதவிட வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் அது தெரியாத நபராகத்தான் இருந்திருக்க வேண்டும் என்றும் கட்டாயம் இல்லை. உங்கள் தூரத்து உறவினர் வறுமையில் வாடினால் அவர்களது பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏதோ கண்ணுக்கு தெரியாத ஆன்லைன் சாரிட்டிக்குக் கொடுப்பதைவிட உங்கள் கண்முன் துன்பப்படும் குடும்பத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இன்றி உதவுங்கள்.

9. ஃ பீட் லோக்கல் (Feed local ) - புல்லினங்கள் பாடலை சமீபத்தில் ரசித்திடாதவர் எவரும் இலர். அனைவருக்கும் பறவைகள் என்றால் தனிப் பிரியம்தான். ஆனால் அதை பாடலோடு இணையத்தோடு (விரச்சுவலாக) நிறுத்தி விடாமல் நிஜ உலகில் சிறிதேனும் தண்ணீராவது, தானியமாவது பால்கனியில் வைப்பதற்கு நாம் நிச்சயம் முயல வேண்டும்

Representational Image
Representational Image

10. பிட் லோக்கல் (Fit local) - உலகத்தரம் வாய்ந்த ஜிம்களில் சேர்ந்து உடலை வலுப்பெடுத்த நேரம் ஒதுக்குவது அவசியம்தான். அதே சமயம் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வாட்டர் டேங்க் சுத்தம் செய்யும் போதும் உதவலாம். கோயில், மசூதி, சர்ச் என்று மாதம் ஒருமுறை உழவாரப் பணியில் கலந்து கொள்ளலாம். உடலும் மனதும் ஊரும் நலம் பெறும்.

-சு. நாகசரஸ்வதி

My vikatan
My vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/