Published:Updated:

விடாமல் துரத்தும் சைனஸ் பிரச்னைக்கான தீர்வு! #Balloon_Sinuplasty

பலூன் சிகிச்சைக்குப் பிறகு இரண்டு நாள் ஓய்வு எடுத்தால் போதுமானது. 5 நாட்களுக்குப் பிறகு விமானப் பயணத்தை மேற்கொள்ளலாம். பலூன் சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள் சிகிச்சைக்குப் பின் உடலளவிலும் மனதளவிலும் உற்சாகமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

சைனஸ் :

நம் முகத்துக்குள் இருக்கும் காற்றுப்பைகள் அல்லது அறைகளை 'சைனஸ் (Sinus)' என்று அழைக்கிறார்கள். இந்த சைனஸ் காற்றறைகள் தொற்றுக்கு உள்ளாகும்போது வரும் ஒவ்வாமை அழற்சி 'சைனஸிடிஸ்(Sinusitis)' நோயாக அறியப்படுகிறது.

சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தொற்று நோய் அல்லது தனிப்பட்ட உடல் இயல்பினாலோ ஒவ்வாமை ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒருவகை நீரைச் சுரக்க ஆரம்பிக்கிறது. எதிர்ப்புச் சக்தி குறைவால், நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். இதன் காரணமாக தும்மல், தலைவலி, தலைபாரம் வரக்கூடும். இது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் தூக்கமின்மையையும் சோர்வைவையும் உண்டாக்கும்... நாளடைவில் நுரையீரலில் பிரச்னை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

சைனஸ் நோய்க்கான சிகிச்சை :

காது, மூக்கு தொண்டை தொடர்பாக மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் 70% சைனஸ் நோயாகவே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல். மாசடைந்த காற்று சைனஸ் அறைகளை பாதிக்கும். சைனஸுக்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆன்டிபயோட்டிக் போதுமானது. அதுவே தீவிரமடையும்போது கூடுதல் சிகிச்சைகள் அவசியமாகிறது.

விடாமல் துரத்தும் சைனஸ் பிரச்னைக்கான தீர்வு! #Balloon_Sinuplasty

"இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை சைனஸ் நோய்க்கு நேரடி சிகிச்சையே இல்லை. சைனஸ் தொடர்பான பிரச்னைக்கு, Septal Deviation என்னும் விலகி இருக்கும் மூக்குத் தண்டை சரிசெய்வதற்கான சிகிச்சை மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், 90-களில் இருந்து சைனஸில் உள்ள அடைப்பைச் சரிசெய்ய என்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை கடைப்பிடிக்கப்பட்டது. இச்சிகிச்சைகளுக்குப் பிறகு 'வாரக்கணக்கில்'ஓய்வு தேவைப்படும். ஆனால் இன்றைய அவசரகாலத்தில் தங்களின் உடல்நலத்தில் அக்கறைக்கொண்டு யாரும் நேரத்தை செலவிடுவதில்லை. ஒரே நாளில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவதையே விரும்புகின்றனர்" என்கிறார் ENT மருத்துவர் நரேந்திரன், "நாள்பட்ட சைனஸ் பாதிப்பு, காற்றறைச் சுவரைத் தடிப்பாக்கி, அதன் வாயை அடைக்க முற்படும். இதற்கு மிகவும் எளிமையான முறையில் செய்யப்படும் மேம்பட்ட சிகிச்சையான 'பலூன் சைனோபிலாஸ்ட்டி (Balloon Sinuplasty)' மூலம் நிவாரணம் பெறலாம்".

Balloon Sinuplasty

"தீர்க்க முடியாத சைனஸ் அடைப்புக்கான சிறந்த தீர்வாக அமைகிறது Balloon Sinuplasty சிகிச்சை. இந்த முறையில் சிறிய, நெகிழ்தன்மையுடைய பலூன் வடிவக் குழாய், மூக்கு துவாரங்கள் வழியாக செலுத்தப்பட்டு அடைக்கப்பட்ட சைனஸ் வழிகளைத் திறக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சளி வெளியேறுவதற்கான வழி அகலப்படுத்தப்பட்டு திறக்கப்படுகிறது, ஆனால் பிற திசுக்களுக்கு எந்தவிதத் தொந்தரவுமில்லை."

"பலூன் சிகிச்சைக்குப் பிறகு இரண்டு நாள் ஓய்வு எடுத்தால் போதுமானது. 5 நாட்களுக்குப் பிறகு விமானப் பயணத்தை மேற்கொள்ளலாம். பலூன் சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள் சிகிச்சைக்குப் பின் உடலளவிலும் மனதளவிலும் உற்சாகமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். முன்பு லட்சக்கணக்கான ரூபாயில் இருந்த பலூன் சிகிச்சைக்கான செலவே, மக்கள் இதை அணுகாமல் இருந்ததற்கான காரணமாக இருந்தது. இப்போது சிகிச்சைக்கான செலவு ஆயிரக்கணக்கில் மட்டுமே ஆவதால் இந்த எளிமையான சிகிச்சையைப் பெற எந்தத்தடையும் இல்லை" என்று கூறுகிறார் டாக்டர் நரேந்திரன்.

விடாமல் துரத்தும் சைனஸ் பிரச்னைக்கான தீர்வு! #Balloon_Sinuplasty

Base ENT

"முற்றிலும் காது, மூக்கு & தொண்டைப் பிரச்னைகளுக்கான தீர்வினை வழங்கும் மருத்துவமனையாக Base ENT செயல்பட்டுவருகிறது. சைனஸ் பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கும் மேம்பட்ட அறுவை சிகிச்சை முறையான Balloon Sinuplasty -ஐகடந்த மூன்று ஆண்டுகளாகக் கடைப்பிடித்துவருகிறோம். இதுவரை சுமார் 200 நோயாளிகளுக்கும் மேல் Balloon Sinuplasty அறுவை சிகிச்சையைச் செய்துள்ளோம். அதில் 50ல் இருந்து 60 நோயாளிகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்."

"Balloon Sinuplasty சிகிச்சையினால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. சிகிச்சைக்குப் பின் நோயாளிகள் தங்களின் அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கின்றனர். இருந்தாலும் மாசடைந்த காற்றை சுவாசித்தால் மீண்டும் சைனஸுக்கான பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதால், நோயாளிகள் வழக்கமான சோதனைகளை அவ்வப்போது மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கிறார் Base ENT மருத்துவர் நரேந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு