Published:Updated:

சிறு வணிகர்கள் இனி ஆன்லைனில்! ‘செம ஆபர்’ நிறுவனத்தின் செம ஐடியா!

செம ஆபர்
செம ஆபர்

சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுவரும் பல வணிகங்களின் வியாபாரம் பெரும்பாலும் வாய் வழி விளம்பரம் அல்லது வாடிக்கையாக வரும் நபர்களால் மட்டுமே உந்தப்படுகிறது.

நூறு ரூபாய்க்கு நாம் வாங்கும் பொருள், அதே தரத்தோடு எண்பது ரூபாய்க்கு கிடைத்தால் நமக்கு லாபந்தானே! பத்து பேர் வரும் கடைக்கு, நூறு பேர் வருவார்கள் என்றால் விலையில் கொஞ்சம் தள்ளுபடி கொடுப்பதில் நஷ்டம் இல்லைதானே! ‘செம ஆபர் (Sema Offer)’ நிறுவனத்தின் அடிப்படை ஐடியா இதுதான்! 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இயங்கிவரும் ‘செம ஆபர்’ நிறுவனம், ஆறே மாதங்களில் பாண்டிச்சேரி, விருத்தாசலம் மற்றும் கடலூரில் சக்கைபோடு போட்டு வருகிறது!

அப்படி என்னதான் செய்கிறது 'செம ஆபர்'??

வின்சென்ட் மகிமைராஜ், ஓசூரில் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். சில்லறை வர்த்தகம் செய்துவரும் தன் நண்பர்கள் பலர் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதில் சந்தித்த சிக்கல்களை நன்கு உணர்ந்தவர் வின்சென்ட். இதற்கு தீர்வு தருவதற்கான வின்சென்ட்டின் புதுமையான யோசனைதான் இன்று 'செம ஆபர்' நிறுவனமாக வளர்ந்துள்ளது. சிறு, குறு மற்றும் சில்லறை வணிகர்களுக்கு உதவும் இவரின் இந்த யோசனை, சில மாதங்களிலேயே நல்ல பலன்களையும் தரத் துவங்கியுள்ளது.

செம ஆபர் செயலி (மொபைல் ஆப்) டவுன்லோடு செய்யுங்கள், உங்கள் அருகாமையிலுள்ள ஓட்டல், ரெஸ்டாரன்ட், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆடை அணிகலன்கள், விளையாட்டு உபகரணங்கள், மளிகைக் கடை வணிகர்கள் தரும் அத்தனைத் தள்ளுபடிகளையும் ஒரே இடத்தில் பெற்றிடுங்கள்! ஒரு பொருளை வாங்கும் முன்னர், அந்தப் பொருள் எங்கே, என்ன தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதைத் தெரிவித்து பணத்தை மிச்சப்படுத்தித் தருகிறது செம ஆபர்!

அட இதுபோல பல சேவைகள் இருக்கே?

அதுதான் இல்லை! சலுகைக் கூப்பன்கள் அல்லது தள்ளுபடிகள் பற்றித் தெரிவிக்கும் எத்தனையோ ஆன்லைன் ஆப்கள் / நிறுவனங்கள் இருக்கின்றன என்றாலும், அவை பெரும்பாலும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் அல்லது உணவகங்கள் தொடர்பான தள்ளுபடிகள் குறித்தே பேசுகின்றன. ஆனால் செம ஆபர், முழுக்க முழுக்க சில்லறை வணிகர்கள் மீது கவனம் செலுத்துகிறது! உங்கள் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் கடையில் கிடைக்கும் சூப்பர் ஆபரைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவுவதுதான் செம ஆபரின் தனித்துவம்!

வின்சென்ட் மகிமைராஜ்
வின்சென்ட் மகிமைராஜ்

கடைக்காரர்களுக்கு உதவும் செம ஐடியா!

சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுவரும் பல வணிகங்களின் வியாபாரம் பெரும்பாலும் வாய் வழி விளம்பரம் அல்லது வாடிக்கையாக வரும் நபர்களால் மட்டுமே உந்தப்படுகிறது. இந்நிலையில் புதிய விளம்பரம் ஏதாவது செய்து தங்களின் வியாபாரத்தைப் பெருக்கலாம் என்றாலோ, அதற்கான நேரமும், போதிய பொருளாதாரமும் அவர்களுக்கு இருப்பதில்லை. இங்கேதான் செம ஆபர் வணிகர்களுக்கு கைக்கொடுத்து உதவுகிறது. ஒரு வணிகர் தன்னுடைய ஆபர் பற்றி செம ஆபர் ஆப்-ல் பதிர்ந்தார் என்றால், அந்த வணிகருக்கான, ஹோர்டிங், மக்களை ஈர்க்கும் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்லைன் விளம்பர வேலைகள் போன்ற பலவற்றைச் செய்துதருகிறது செம ஆபர். இதனால் வணிகங்கள் வெகுவாக பயனடைகின்றன.

முயற்சி, கை மேல் பலன் தந்துள்ளது! – வணிகர்கள்

புதுவையில், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை நிலையம் நடத்திவருபவர் ராம்ராஜ். பதினாறு வருடமாக இந்தத் துறையில் இருக்கிறார். பலதரப்பட்ட வியாபார உத்திகளை இதுவரைக் கையாண்டு வந்துள்ளார். செம ஆபரில் இணைந்த பின்பு விளம்பரத்துக்கு செய்யும் செலவு குறைவு என்றாலும், செம ஆபரின் பலதரப்பட்ட வித்தியாசமான விளம்பர அணுகுமுறை மூலம், தன் விற்பனையகத்துக்கு வாடிக்கையாளர் வரத்து அதிகரித்துள்ளதாக குறிப்பிடுகிறார். ஆப் விளம்பரங்களுடன், வாக்கத்தான் (Walkathon) போட்டி, சுலோகன் போட்டி போன்ற நிகழ்ச்சிகளை செம ஆபர் நடத்தித் தருவதால் அதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் தங்களின் வியாபாரத்தை அறிய முடிகிறது என்கிறார் ராம்ராஜ்.

தலைமுடி மற்றும் சரும மருத்துவ மையம் நடத்தி வரும் இளம்பருதி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வர்த்தகம் செய்துவரும் சத்யா இருவரும் செம ஆபர் ஆப் மூலம் நன்மை அடைந்துள்ளார்கள். "நம் ஏரியாவில் இருக்கும் வாடிக்கையாளரோடு சுலபமாக நம்மை இணைத்துவைக்கிறது செம ஆபர். எந்தவித மறைப்பும் இன்றி கடையின் முகவரி மற்றும் போன் நம்பரை செயலியில் கொடுப்பதால், வாடிக்கையாளர்கள் நேரடியாக எங்கள் கடைக்கே வந்து தள்ளுபடிகளைப் பெற்றுச் செல்கின்றனர்!" என்கின்றனர் இளம்பருதியும் சத்யாவும்!

சிறு வணிகங்களை எப்போதும் கைவிடக்கூடாது!

“ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மிகுந்துவிட்ட இக்காலத்தில், சிறு வணிகர்ளின் நிலைமை கவலைக்குரியதாக மாறிவருகிறது. நம்மை நம்பியே முதல் போட்டு தொழில் நடத்தும் லட்சக்கணக்கான சிறு வணிகர்கள்தான் உண்மையில் இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரம். ஆன்லைன் ஷாப்பிங்குக்கு எதிராக குரல் கொடுப்பது தற்காலத்துக்கு உதவாது, எனவே சிறு வணிகர்கள் அனைவரையும் ஆன்லைன் / டிஜிட்டலில் இணைப்பதே சிறந்தது. இதையே அடிப்படையாய்க் கொண்டு இயங்கிவருகிறது செம ஆபர். லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் லாபமடைந்தால் நாம் அனைவரும் நிச்சயம் பயன்பெறுவோம்!” என்கிறார் செம ஆபர் நிறுவனர் வின்சென்ட் மகிமைராஜ்.

புதுவை, கடலூர் மற்றும் விருத்தாசலத்தில் இயங்கிவரும் இந்தச் சேவை, இன்னும் சில மாதங்களில் தமிழகம் முழுவதும் கிடைக்கும் என்கின்றனர் செம ஆபர் நிறுவனத்தினர்.

தள்ளுபடிகளால் நமக்குப் பணம் மிச்சம், நம்மால் சில்லறை வணிகர்களுக்கு லாபம், உண்மையில் இது செம ஆபர்தானே!

வணிகர்கள் செம ஆபர் நிறுவனத்தை அணுக: 93607 29591

செம ஆபர் செயலியை டவுன்லோடு செய்ய Click here: https://play.google.com/store/apps/details?id=com.suprreme.semaoffer

அடுத்த கட்டுரைக்கு