Published:Updated:

சென்னைக்குள் உருவாகும் ஒரு புதிய நகரம்: "எஸ்பிஆர் சிட்டி"

எஸ்பிஆர் சிட்டி
எஸ்பிஆர் சிட்டி

45 மாடிகள் கொண்ட சென்னையின் மிக உயரமான கட்டடத்தைக் கூடிய விரைவில் எஸ்பிஆர் ஹைலிவ்விங் உருவாக்கி வரும் 'எஸ்பிஆர் சிட்டி' டவுன்ஷிப்பில் காணப்போகிறோம். அதன் மேல் நின்று பார்த்தால் வங்காளக் கடல் எவ்வளவு பெரியது, அழகானது எனத் தெரிந்துவிடும்!

பசுமையான சூழல், குறைவில்லாத காற்றோட்டம், அமைதியான சுற்றுவட்டாரம், சுலபமான போக்குவரத்து, கல்விக் கூடங்களுடன், ஷாப்பிங் மால், கடைகள் மற்றும் மருத்துவ வசதியும் இருக்க வேண்டும் - இதுவே நாம் வீடு வாங்க நினைக்கும் இடம். இருந்தாலும் தீப்பெட்டி போல ஒரு அடுக்குமாடி வீட்டை நகரத்தின் நெருக்கடிக்குள்ளே வாங்குவது ஏன்? இதற்கு பெரும்பாலும் நம் திட்டமின்மைதான் காரணம். முதலில் சொன்னது போல சிறப்பான இடத்தில் நம் கனவு வீட்டை வாங்க பெஸ்ட் சாய்ஸாக தற்போது இருப்பவை டவுன்ஷிப்கள்தாம் (Townships). வளர்ந்துவரும் சமுதாயத்துக்கு ஏற்ப, புதிய தலைமுறையின் எதிர்ப்பார்ப்புகள் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு சீரிய திட்டத்துடன் வடிவமைக்கப்படுபவை டவுன்ஷிப்கள். சென்னையின் முக்கிய பகுதியான பெரம்பூரில் விண்ணை முட்டும் கட்டடங்களுடன் பிரமாண்டமான டவுன்ஷிப்பை எழுப்பத் திட்டமிட்டு, இரண்டு பெரும் கட்டடங்களையும் ஏற்கனவே கட்டி முடித்திருக்கிறது 'SPR ஹைலிவ்விங்' கட்டுமான நிறுவனம்.

சென்னையின் உயரமான கட்டடம் இதுதான்!

சென்னைக்குள் உருவாகும் ஒரு புதிய நகரம்: "எஸ்பிஆர் சிட்டி"

45 மாடிகள் கொண்ட சென்னையின் மிக உயரமான கட்டடத்தைக் கூடிய விரைவில் எஸ்பிஆர் ஹைலிவ்விங் உருவாக்கி வரும் 'எஸ்பிஆர் சிட்டி' டவுன்ஷிப்பில் காணப்போகிறோம். அதன் மேல் நின்று பார்த்தால் வங்காளக் கடல் எவ்வளவு பெரியது, அழகானது எனத் தெரிந்துவிடும்! 63 ஏக்கர் பரப்பளவில், குடியிருப்புகள், அலுவலகக் கட்டடங்கள், வர்த்தகத் தலங்கள், கல்வி மற்றும் மருத்துவ மையங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என ஒருவருக்கு வேண்டிய ஒட்டுமொத்தத் தேவைகளும் ஒரே இடத்தில் அமையப்பெற்று உருவாகிவருகிறது சென்னையின் மிகப்பெரிய டவுன்ஷிப்பான எஸ்பிஆர் சிட்டி. 'வாழ்வும் வேலையும் சங்கமிக்கும் இடம்', இதுவே இத்திட்டத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கிறது எஸ்பிஆர்.

36 மாடிகள் கொண்ட டவர் ஏ & பி, 45 மாடிகள் கொண்ட டவர் ஹெச் என 3 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் இத்திட்டத்தில் உள்ளன, இதில் டவர் ஏ-வில் உள்ள அனைத்து வீடுகளும் ஏற்கனவே புக் செய்யப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்குள் உருவாகும் ஒரு புதிய நகரம்: "எஸ்பிஆர் சிட்டி"

வாழ-வேலை செய்ய-கற்க-அனுபவிக்க... எல்லாம் ஓரிடத்தில்...

எந்தவொரு கட்டுமானத் திட்டத்துக்கும் முதல் செல்லிங் பாயிண்ட் அதன் இடம்தான். பெரம்பூரில் வரும் இத்திட்டம், கீழ்ப்பாக்கத்திலிருந்து 2கிமி தொலைவிலும், புரசைவாக்கம் மற்றும் வேப்பேரிக்கு மிக அருகிலும் இருக்கிறது. சென்னை துறைமுகத்துக்கு அருகாமையில் இருக்கும் இந்த இடம் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர்க்கு ஏற்ற இடமாக அமைவதோடு மட்டுமல்லாமல் புரசைவாக்கம் பகுதியிலிருந்து அருகிலேயே வசதியான இடத்துக்கு குடியிருப்பை மாற்றிக்கொள்ள நினைக்கும் பல வர்த்தகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்கிறது எஸ்பிஆர். வரவுள்ள பட்டாளம், ஓட்டேரி மற்றும் பெரம்பூர் மெட்ரோ மூலம் மேலும் இவ்விடத்தின் மதிப்பு உயர்கிறது.

அம்சங்கள்:

5 லட்சம் சதுர அடியில் உருவாக்கப்படவுள்ள பசுமைத்திட்டத்தின் மூலம் இவ்விடத்தை ரம்மியமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது எஸ்பிஆர். 4.5 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பூங்கா ஒன்றையும் நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது. கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்புத் திட்டங்களை விடப் பலமடங்கு பெரிதான டவுன்ஷிப் என்பதால், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடைப்பயிற்சித் தடம், ஜிம், ஜாக்கிங் ட்ராக், வெளி விளையாட்டுத் திடல்கள், நீச்சல் குளம், மினி தியேட்டர், ஸ்பா என 65க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்கள் கொண்டதாக இருக்கப்போகிறது எஸ்.பி.ஆர். சிட்டி. எஸ்பிஆர் சிட்டி வாசிகளுக்காக 15 லட்சம் சதுர அடியில் எஸ்பிஆர் சிட்டி மால் உருவாகவுளள்து. சினிமா விரும்பிகளுக்கு திரையரங்குகளும் வரவிருக்கின்றன. எஸ்பிஆர் சிட்டி-யில் சர்வதேச தரத்திலான ஸ்ரீராம் யூனிவர்சல் ஸ்கூல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட் ஆப் இந்தியா - எஸ்பிஆர்-ன் கனவுத் திட்டம்!

சர்வதேச தரத்தில் சென்னையின் மதிப்பை உயர்த்தும், தங்களின் கனவுத் திட்டமான 'மார்க்கெட் ஆப் இந்தியா' எனும் மொத்த வியாபார வர்த்தகத் தலத்துக்கு அடித்தளம் அமைத்துள்ளது எஸ்பிஆர். 5000+ மொத்த வியாபாரக் கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கான இடம் கொண்ட பிரமாண்டமான இடமாக உருவாக இருக்கிறது மார்க்கெட் ஆப் இந்தியா. மின்னணு, மின்சாதனப் பொருள்கள், நகைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், வீட்டு உள்ளலங்காரப் பொருள்கள், பேக்கேஜ்டு உணவுகள் என அனைத்துவிதமான சாமான்களுக்கும் மொத்த கொள்முதல் இடமாக மார்க்கெட் ஆப் இந்தியா இருக்கப்போகிறது. 54 லட்சம் சதுர அடியில், ஒரு சர்வதேச விமான நிலையத்துக்கு நிகராக பிரமாண்டமாக காட்சியளிக்கவுள்ள இந்தத் திட்டம் உலக அரங்கில் சென்னையின் பெருமையை நிச்சயம் உயர்த்தும் என்கிறது எஸ்பிஆர் நிறுவனம்!

சென்னைக்குள் உருவாகும் ஒரு புதிய நகரம்: "எஸ்பிஆர் சிட்டி"

ஒவ்வொரு அங்குலத்துக்கும் முக்கியத்துவம்...

உயரமான கூரை கொண்ட குடியிருப்புகள், காற்றோட்டமான அறைகள், தொழிநுட்ப உதவியுடன் கூடிய ஹை டெக் வடிவமைப்பு, ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் என எஸ்பிஆர் சிட்டியின் ஒவ்வோர் அங்குலத்தையும் அளந்து கட்சிதமாக, தரமாக, சொகுசாக வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது எஸ்பிஆர். நூற்றுக்கணக்கான அம்சங்களோடு சர்வதேச தரத்தில் உருவாகிவரும் இத்திட்டம் சமீபத்தைய நாட்களில் சென்னையின் முக்கிய முதலீட்டுத் தேர்வாக மாறியுள்ளதில் நிச்சயம் ஆச்சரியம் இல்லை!

எஸ்பிஆர் சிட்டி குறித்து மேலும் விவரங்களுக்கு: 7824099885

பின் செல்ல