Published:Updated:

உலகத்தரத்தில் பள்ளிக்கல்வி... கோவையில் ஒரு கேம்பிரிட்ஜ்!

SSVM
SSVM

சர்வதேச தரத்தில் உங்களின் குழந்தைக்கு கல்வி கிடைத்திட வேண்டுமா? சர்வதேச கல்வி மையங்களில் உங்கள் பிள்ளைக்கு வாய்ப்பு கிடைத்திட வேண்டுமா? சர்வதேச அளவில் மிகப் பிரசித்தி பெற்ற இங்கிலாந்தின் 'யுனிவர்சிட்டி ஆஃப் கேம்பிரிட்ஜ்' உங்களுக்கு உதவுகிறது!

கேம்பிரிட்ஜ் பல்கலை வழங்கும் உயர்தர கல்வி

கி.பி. 1209-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 800 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் பல்கலைக்கழகம் இங்கிலாந்தில் இயங்கி வரும் 'யுனிவர்சிட்டி ஆஃப் கேம்பிரிட்ஜ்'. உலகிலேயே 4-வது பழமையான பல்கலைக்கழகமாக திகழும் இக்கல்வி மையத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டுவருகிறது 'கேம்பிரிட்ஜ் அசெஸ்மென்ட்' (Cambridge Assessment) பிரிவு.

வருடாவருடம் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 80 லட்சம் மாணவர்களுக்கு பல வகையான மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்தி வருகிறது இந்த அமைப்பு. இந்தியாவிலும் பல்வேறு கல்வி மையங்களில் இந்த அமைப்பு வடிவமைத்துள்ள பயிற்சிகளும் பாடத்திட்டங்களும் வழங்கப்படுகின்றன. இதனால் சிறு வயது முதலே சர்வதேச தரத்தில் சிந்தித்து செயலாற்றக்கூடிய வகையில் மாணவர்களை உருவாக்கிட முடியும்.

வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு இந்தியக் கல்வி முறையில் என்னென்ன முன்னேற்றங்களைக் கொண்டு வரலாம் என்று சிந்தித்து கேம்பிரிட்ஜ் அசெஸ்மென்ட் பாட முறைகளை வழங்கி வருகிறது. தொடர்ந்து புதுப்பிக்கப்படும் இந்த முறை மூலம் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாணவர்களுக்கு கல்வி வழங்கிட முடிவது இதன் சிறப்பம்சமாகும். இதனால் இங்கிலாந்துக்குச் செல்லாமலேயே சர்வதேச தரத்திலான கல்வியை மாணவர்கள் பெற்றுப் பயனடைய முடியும். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர்படிப்பினை பெறச் செல்லும் மாணவர்கள் இந்தக் கல்வி முறையால் மேலும் பயனடைவார்கள் என்பது இதன் மற்றொரு அனுகூலம்.

தமிழகத்தில் கேம்பிரிட்ஜ் கல்வி!

கோவை மேட்டுப்பாளையம் 'எஸ்.எஸ்.வி.எம். இன்ஸ்டிட்யூஷன்ஸ்'-ன் அங்கமாக செயல்பட்டு வருகிறது 'எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்டு ஸ்கூல்'. கோவையில் உள்ள இந்த இண்டர்நேஷனல் பள்ளி தென்னிந்தியாவிலேயே Cambridge Early Years வகுப்புகளை வழங்கும் முதல் பள்ளியாகும். இங்கு கேம்பிரிட்ஜ் முறையில் கல்வியும், சர்வதேச தேர்வுகளில் கலந்து கொள்ள பயிற்சியும் வழங்கப்படுகின்றன.

குழந்தைகளின் படைப்புத் திறனையும் அறிவையும் ஆக்கப்பூர்வமான முறையில் வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு மகிழ்ச்சியான முறையில் கல்வி வழங்கிடுவதே எஸ்.எஸ்.வி.எம். சர்வதேச பள்ளியின் நோக்கம் என்கிறார் எஸ்.எஸ்.வி.எம். இன்ஸ்டிட்யூஸன்ஸ்-ன் நிறுனவர் Dr. மணிமேகலை மோகன்.

அட்மிஷன் நடைபெறுகிறது.

எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்டு ஸ்கூலில் KG வகுப்புகளுக்கும் (வயது 3-5), 1-5 ஆம் வகுப்புகளுக்கும் (வயது 6-11) 2021 - 2022 பள்ளி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. (Classes will drive upto IGCSE & A-level in the years to come.)

ஆங்கிலம், கணிதம், அறிவியல், தகவல் & தகவல் பரிமாற்ற தொழில்நுட்பம் போன்ற பலதரப்பட்ட பாடங்களை சர்வதேச தரத்தில் மாணவர்கள் பயில்கின்றனர். இதனால் எந்தவித உயர்படிப்பையும் மேற்கொள்ளும் அறிவும் தன்னம்பிக்கையும் அவர்களுக்குக் கிடைக்கிறது.

கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்

* இப்பள்ளியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் பெற்ற ஆசிரியர்களே பாடங்களை எடுக்கின்றனர்.

* வெளிநாடுகளுக்குச் சென்று உயர்படிப்பு மேற்கொள்ள பெரிதும் உதவுகிறது.

* மொழிப்பாடங்களாக தமிழ் / இந்தி / பிரெஞ்சு / ஸ்பானிஷ் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன.

* மாணவர்களைச் சிறந்த ஆளுமை மிக்க மனிதர்களாக உருமாற்றுகிறது இப்பாடத்திட்டம்.

எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்டு ஸ்கூலில் பள்ளிச் சேர்க்கைக்கு https://ssvmwscambridge.com என்ற இணைதளத்தில் விவரங்களைப் பெறலாம் அல்லது +91 90470 31313 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு