Published:Updated:

வெற்றிப் பாதைக்கான அடித்தளம்! #Business_Magnate

Business_Magnate
Business_Magnate

நிறுவனத்தின் நன்மதிப்பைப் பணத்தின் மூலம் பெற இயலாது. விற்கப்படும் பொருள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் மீது வாடிக்கையாளர்கள் வைக்கும் நம்பிக்கையும் அவர்களுடனான நல்லுறவுமே மட்டுமே நிறுவனத்தை உயர்த்துவதற்கான அடிக்கல்லாக இருக்கின்றன

'சட்டெனப் பறக்கும் தீப்பொறிபோல் மனதில் உதிக்கும் எண்ணமே புதிதாக ஒரு தொழிலை ஆரம்பிப்பதற்கான உந்துதலைத் தருகிறது.'

- பிசினஸ் மேக்னேட்...

'ஏற்கனவே உள்ள பல தொழில்களை அப்படியே பிரதி எடுத்துச்செய்பவர்கள் வியாபாரிகளாக உள்ளனர். இதுவரை நாம் கேள்விப்பட்டிராத உத்திகளைப் பயன்படுத்தி, புதிதாக ஒரு தொழில் முறையை உருவாக்குபவர்களே தொழில் முனைவோராக வலம் வருகின்றனர்' என ஆரம்பத்திலேயே தொழில் செய்வோர்க்கும் தொழில் முனைவோர்க்குமான வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டுகிறது டாக்டர் ரேஸ் குமரனின் 'பிசினஸ் மேக்னேட் - Business Magnate' புத்தகம் (ஆங்கிலம்). வியாபாரத்திலும் வாழ்விலும் மகிழ்ச்சியாகவும் ஊக்கமாகவும் செயல்பட்டு வெற்றியை எட்டிப்பிடிக்க நினைக்கும் இளம் தலைமுறை தொழில் முனைவோருக்குத் தேவையான அறிவுரைகளையும், நடைமுறை யோசனைகளையும் வழங்குகிறது.

தொழில் செய்பவர்கள் vs தொழில் முனைவோர்

* தொழில் செய்பவர் சந்தையில் ஒரு பங்குதாரராக செயல்படுகிறார்; தொழில் முனைவோரோ சந்தையைக் கட்டுப்படுத்தும் தலைவராக இருக்கிறார்.

* நட்டம் ஏற்படவேகூடாது எனப் பணிபுரிவார் வியாபாரி; துணிச்சலாக சவால்களை எதிர்கொள்பவர்கள் தொழில் முனைவோர்.

* லாபத்திற்காக இயங்குபவர் வியாபாரி, வாடிக்கையாளர்களுக்காக இயங்குபவர் தொழில் முனைவோர்....

வெற்றிப் பாதைக்கான அடித்தளம்! #Business_Magnate

தொழில் முனைவோர் எவ்வாறு செயல்பட வேண்டும்? தொழில்முனைவோர் எங்கே சறுக்குகிறார்கள்? தொழில்முனைவுக்கு அறிவும், திறமையும், தெளிவும் ஏன் முக்கியம்? நெறிப்படுத்தப்பட்ட வேலை அமைப்பு மற்றும் திட்டமிட்ட செயல்பாட்டின் அவசியம் என்ன? எனத் தொழில் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் விவரிக்கிறது பிசினஸ் மேக்னேட்.

வாடிக்கையாளர்களுடனான உறவுக்கு வழிகாட்டுதல்...

'நிறுவனத்தின் நன்மதிப்பைப் பணத்தின் மூலம் பெற இயலாது. விற்கப்படும் பொருள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் மீது வாடிக்கையாளர்கள் வைக்கும் நம்பிக்கையும் அவர்களுடனான நல்லுறவுமே மட்டுமே நிறுவனத்தை உயர்த்துவதற்கான அடிக்கல்லாக இருக்கின்றன. தொழில் முனைவுப் பயணம் என்பது ஒரு பாறையை மலைக்கு மேல் எடுத்துச்செல்வது போன்றது. உங்கள் பொருள்கள்/சேவையின் மீது நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டுள்ள வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுடனான உறவை மேம்படுத்திக்கொண்டால் நம் மலைப்பயணத்தை அவர்களே சுலபமாக்கி விடுவார்கள்' என்கிறது பிசினஸ் மேக்னேட்.

தொழிலை வளர்ப்பதற்கு பிசினஸ் கார்டுகளை மட்டும் பகிர்ந்து கொள்வதில் பயனேதும் இல்லை. பலமான உறவுக்கு 'நம்பகமான இணைப்பு' மிகவும் அவசியம். அந்த இணைப்பை உருவாக்க உதவுவது நெட்வொர்க்கிங். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களோடு எல்லாம் சுமூகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வலியுறுத்தி, அதற்கான நடைமுறை யோசனைகளையும் வழங்குகிறது இப்புத்தகம்.

வெற்றிப் பாதைக்கான அடித்தளம்! #Business_Magnate

இலக்குகளை அடைய இதுவும் முக்கியம்!

குழுவாக செயல்படுவதே தொழில். நிறுவனத் தலைவர்களாக இருப்பவர்கள் தொழிலில் பல உயர்ந்த இலக்குகளை அடைய தனது ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எப்போதும் ஊக்குவிக்கும் வார்த்தைகளையே ஊழியர்களிடம் பேசுவது; வேலை, ஒய்வு மற்றும் பொழுதுபோக்குக்கு தேவையான அளவீடுகளில் முக்கியத்துவம் கொடுப்பது, ஊழியர்களின் ஆற்றல் தொய்வடையாமல் பார்த்துக்கொள்வது என நிறுவனத்தின் நிலைத்தன்மையை தக்கவைக்கும் பல முக்கிய விஷயங்களைப் பற்றி எடுத்துரைக்கிறது இப்புத்தகம்.

தொழில் முனைவு, இலக்கு நிர்ணயம், திட்டமிடல், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை, தலைமை, தொழில் செயல்பாட்டு அமைப்புகள் மற்றும் செயல்முறை, முடிவெடுத்தல் போன்ற பலவகையான தொழில் ரீதியான கட்டங்களுக்கு எனத் தனி அத்தியாயங்களை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு முன்னணி தொழில்முனைவு நிறுவனத்தின் சுருக்கமான அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் டாக்டர் ரேஸ் குமரன்:

தன்னுடைய 17 வருட தொழில் முனைவு அனுபவங்களைக் கொண்டு டாக்டர். ரேஸ் 'பாசிட்டிவ்' குமரன் 'பிசினஸ் மேக்னேட்' புத்தகத்தை எழுதியுள்ளார். அமெரிக்காவில் செயல்பட்டுவரும் இன்டர்நேஷனல் பீஸ் கவுன்சில் அமைப்பின் 2018ஆம் ஆண்டுக்கான 'மெஜஸ்டிக் கிராண்ட் அச்சீவர் அவார்டு' உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள ரேஸ் குமரன் மேடைப்பேச்சாளரும் ஆவார்.

பொறுப்பு துறப்பு: இது ஒரு விளம்பரதாரர் பகுதி!

அடுத்த கட்டுரைக்கு