Published:Updated:

இது 'தமிழ்' பால்! சுவையான, சத்தான 'பசும்பால்' அறிமுகம்...

Sponsored content

பல இயற்கையான சத்துகள் அடக்கியுள்ள பசும் பாலுக்கான தேவை மக்களிடம் இருப்பதை உணர்ந்து தற்போது 'தமிழ்' பசும்பாலை அறிமுகம் செய்துள்ளது

G. கண்ணன், நிர்வாக இயக்குனர், GK டெய்ரி
G. கண்ணன், நிர்வாக இயக்குனர், GK டெய்ரி

தாய்ப் பாலுக்குப் பிறகு, நமக்குத் தேவையான சத்துகளை வழங்குவதில் முதன்மை வகிப்பது மாட்டுப் பால்தான்! உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைக்கும் ஒவ்வொருவரும் தரமான மாட்டுப் பாலை வாங்கிப் பருகவேண்டும்! மாட்டுப் பாலைப் பொறுத்தவரை, பசும்பாலுக்கு மகத்துவங்கள் அதிகம். சித்த மருத்துவம் பசும் பாலின் நன்மைகள் குறித்து புகழ்ந்துரைக்கிறது. பலதரப்பட்ட சித்த மருந்துகள் பசும்பாலில் கலந்து உண்ணப்பட வேண்டியவையாக இருப்பது இதற்கொரு சான்று...

இப்போது கும்பகோணத்துக்கு ஒரு விசிட்... கும்பகோணம் என்றாலே டிகிரி காஃபிதான்... ஏன் அப்படி? அந்தகால கும்பகோணத்தில், பாலின் தூய்மை மற்றும் திடம் எவ்வாறானது என்பதை பால்மானியில் (Lactometer) அளப்பார்களாம். அதிக டிகிரி = அதிக தரம். இப்படிச் சோதனை செய்து தரமான பாலில் போடும் காஃபிதான் படிக்காமல் பட்டம் வாங்கிய டிகிரி காஃபி! இப்படிக் கும்பகோணம் பகுதியில், தரமான டிகிரி காஃபி கிடைக்க தற்போது ஒரு பால் நிறுவனம் சிறப்பாக இயங்கிவருகிறது, பேர் என்ன தெரியுமோ? 'தமிழ் பால்'! ஆஹா!

கும்பகோணம் அருகேயுள்ள குறிச்சி ஊராட்சியில், 1979-ம் ஆண்டு குடும்பத் தொழிலாக ஆரம்பிக்கப்பட்ட பால் பண்ணை, இன்று G.K.Dairy-யாக வளர்ந்துள்ளது. இவர்களின் பிராண்ட்தான் இந்த 'தமிழ் பால்'.

G.K.Dairy
G.K.Dairy

"விவசாயக் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த என் அப்பா G.கண்ணன், அவரின் சகோதரர்கள் G. குணசேகரன், G.ஷங்கர் மூவரும் இணைந்து இந்தப் பால் பண்ணையைத் துவங்கினர். ஆரம்பத்தில் அக்கம்பக்கத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் / விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்து, அதை விற்பனை செய்துவந்தோம். பாலின் தரம் மக்களுக்குப் பிடித்ததால் நல்ல முன்னேற்றம் கண்டது தொழில். தற்போது பாக்கெட் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் எனத் 'தமிழ்' வளர்ந்துள்ளது", என்கிறார் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தியாகராஜன். G.K.டெய்ரியின் இயக்குநர்.

தூய்மையான 'தமிழ்' பசும்பால் அறிமுகம்!

பல இயற்கையான சத்துகள் அடக்கியுள்ள பசும் பாலுக்கான தேவை மக்களிடம் இருப்பதை உணர்ந்து தற்போது 'தமிழ்' பசும்பாலை அறிமுகம் செய்துள்ளது, ஜி.கே.டெய்ரி. முதல்கட்டமாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 'தமிழ்' பசும்பால் கிடைக்கவிருக்கிறது. " 'தமிழ்' பசும்பாலை அறிமுகம் செய்ய முக்கிய காரணம், பசுவின் பாலில் உள்ள சுவையும், மருத்துவ குணங்களும்தான்! உடலின் வலிமைக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவக்கூடியது பசும்பால். குறிப்பாக 'தமிழ்' பசும்பாலைக் காய்ச்சினால் நன்றாக ஆடை கட்டும். இதற்குக் காரணம் இதுவொரு Non-Homogenized பால். இயற்கையான கொழுப்புச் சத்தை நீக்காமல் தயாரிக்கப்படுகிறது. எனவே, 'தமிழ்' பசும்பாலில் இருந்து உருவாக்கப்படும் வாசனையான தயிர் மற்றும் மோருக்கு ஈடு இணை இருக்காது!" என்கிறார் தியாகராஜன்.

G.K.Dairy
G.K.Dairy

"தஞ்சை, அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள, சிறு/குறு பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மற்றும் பால் பண்ணை வைத்திருப்போரைச் சேர்த்து, 8500-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து பாலைக் கொள்முதல் செய்து தினந்தோறும் விற்பனை செய்துவருகிறது ஜி.கே.டெய்ரி. பால் வியாபாரம் ஆரம்பித்தபோது, தரத்துக்காகவே எங்களிடம் பால் வாங்கியோர் உண்டு. அதில் வெண்ணெய், நெய் எடுத்து சாப்பிட்டுப் பாராட்டியவர்கள் பலர். ஆனால், காலத்திற்கேற்ப பாக்கெட் பாலாக விற்பனை செய்யும்போது, பதப்படுத்த வேண்டியது கட்டாயம்! இதனால் கொழுப்பைச் சமன்படுத்த வேண்டியுள்ளது. எனவேதான் வாசமான, தரமான பசும்பாலை விரும்புபவர்களுக்காக கொழுப்புச் சத்து நிறைந்த சுவையான 'தமிழ்' பசும்பாலை அறிமுகம் செய்கிறோம்!" என்கிறார் அவர்.

'தமிழ்' பசும்பாலின் விலை, 1/2 லிட்டர் - ரூ. 23, 1 லிட்டர் - ரூ. 46. இனி மணக்க மணக்க டிகிரி காஃபி சுவைக்க விரும்புவோர், சுவையான, சத்தான கொழுப்புச் சத்து அடங்கிய 'தமிழ்' பசும்பாலை வாங்கலாம், தமிழின் சுவையை ருசித்து மகிழலாம்!

மேலும் விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்க...