Published:Updated:

இது தமிழ் மணக்கும் 'பசும்' நெய்!

Sponsored content

8840 விவசாயிகளிடம் இருந்து தினமும் சுமார் 65,000 லிட்டர் பாலை பெறும் இந்நிறுவனம், பால் மட்டுமல்லாது தயிர், மோர், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது.

'பசும்' நெய்
'பசும்' நெய்

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு மாடுகள் இருந்ததால் வெண்ணெய், நெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை அவர்களே தயாரித்துக்கொண்டனர். வீட்டில் தயாரிக்கப்படும் இதுபோன்ற தரம் வாய்ந்த பொருள்களை, மாடு இல்லாதவர்கள் வாங்கி உபயோகித்தனர். இப்படி இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பொருள்களின் மணமும், சுவையும் அற்புதமாக இருக்கும். அதேநேரம் 'ஹோம் மேட்' என்பதால் எந்தவித பயமுமின்றி குழந்தைகள் முதல் அனைவரும் பயன்படுத்தினர்.

இன்றைய காலகட்டத்தில் நல்ல தரமான பசும் பால் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. அதேபோல் நெய்யும் விதவிதமாக பேக் செய்யப்பட்டு கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. அனைத்து உணவுப் பொருட்களைப் போலவே நெய்யிலும் கலப்படம் இருக்க வாய்ப்புண்டு. தரமற்ற நெய்யில் சேர்க்கப்படும் பொருள்களின் பட்டியலைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும், ரசாயனங்கள், மிருகக் கொழுப்பு, வெஜிடபிள் ஆயில் போன்றவை சேர்க்கப்பட்டிருப்பது பல்வேறு சோதனைகளில் தெரியவந்துள்ளது. எனவே, நெய் போன்று இயற்கையான பாலில் தயாரிக்கப்படும் பொருள்களை வாங்குவதில் மக்களிடம் எப்போதும் தயக்கம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இதனால் நெய்யில் இருந்து கிடைக்கும் பயன்களும் கலப்படத்தால் கிடைக்காமல் போகின்ற அச்சம் நிலவுகிறது. கலப்படமற்ற தூய பசும் நெய் பல நன்மைகளை உள்ளடக்கியது. சேச்சுரேடட் ஃபேட் (Saturated Fat), வைட்டமின் ஏ, டி, இ, கே, ஒமேகா 3 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இது காணப்படுகிறது.

'பசும்' நெய்
'பசும்' நெய்

நெய்யின் மருத்துவ குணங்கள்:

* தினமும் தேவையான அளவு நெய்... உடல் மற்றும் மன நலத்தைக் காக்கிறது.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுவாக்கவும் நெய் உதவுகிறது.

* கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை எடுத்துக்கொள்ளலாம்.

* நெய்யில் உள்ள வைட்டமின்கள் உடலின் ரத்த சுழற்சியை மேம்படுத்த உதவியாக உள்ளன.

* செரிமான மண்டலத்தை சீராக வைக்கவும், மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் உதவியாக இருக்கிறது நெய்.

* உடல் செயல்பாட்டுக்குத் தேவையான நல்ல கொழுப்பை நெய் தருகிறது.

இதுபோன்று பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக நெய் உள்ளது. இருப்பினும் தரமற்ற நெய்யினால் பாதிப்பும் உண்டு. இதனைத் தவிர்த்து வீட்டில் தயாரிக்கும் நெய் போலவே தரமான நெய்யை மக்களுக்கு வழங்கிவருகிறது ஜி.கே.டெய்ரி-யின் (GK Dairy) 'தமிழ் பசும் நெய்'.

தமிழ் பசும் நெய்:

பசும் பாலில் இருந்து கிடைக்கும் பசும் வெண்ணெயை சீரான வெப்ப நிலையில் உருக்கி தயாரிக்கப்படுவதுதான் தமிழ் பசும் நெய். சுத்தமான பசும் பாலால் தயாரிக்கப்படும் தமிழ் பசும் நெய் இயற்கையான மணமும் சுவையும் நிறைந்ததாக இருக்கிறது. தமிழ் பசும் நெய் 50ml முதல் 15 லிட்டர் டின் வரை சந்தையில் கிடைக்கின்றது. எருமை, பசு என இரண்டு பால்களையும் கலந்து சிலர் பசும் நெய் எனச் சொல்லி விற்கின்றனர். அதனை அறியாமல் மக்களும் கலப்பட பசும் நெய்களை வாங்குகிறார்கள் என்கிறார் ஜி.கே. டெய்ரியின் இயக்குனர் தியாகராஜன்.

ஜி.கே. டெய்ரி...

35 ஆண்டுகளாக பால் பண்ணையாக இயங்கிய ஜி.கே. டெய்ரி நிறுவனம், கடந்த 2000ம் ஆண்டு 'தமிழ் பால்' என்னும் பிராண்டை உருவாக்கியது. 8840 விவசாயிகளிடம் இருந்து தினமும் சுமார் 65,000 லிட்டர் பாலை பெறும் இந்நிறுவனம், பால் மட்டுமல்லாது தயிர், மோர், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. நமது தமிழ் பாரம்பர்ய முறைப்படி தயாரிக்கப்படும் இந்நிறுவனத்தின் பொருட்கள் யாவும் தமிழ் பசும் தயிர், தமிழ் பசும் நெய், தமிழ் பசும் பனீர், தமிழ் பசும் வெண்ணெய் என்றே அடையாளப்படுத்தப்படுகின்றன.

'பசும்' நெய்
'பசும்' நெய்

" 'அன்றைய பால், அன்றைய தினமே...' மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வரும் தமிழ் பசும் பாலில், எந்தவித ரசாயனமும் கலக்கப்படுவதில்லை. இயற்கையான பாலை அப்படியே மக்களுக்கு வழங்குகிறோம்" என்கிறார் ஜி.கே. டெய்ரி நிறுவனத்தின் இயக்குநர் தியாகராஜன். கும்பகோணம், தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பத்து மாவட்டங்களுக்கு தற்போது விநியோகம் செய்து வரும் தமிழ் பால் மற்றும் பால் பொருள்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கொண்டுசேர்க்க வேண்டுமென்கிற நோக்கத்துடன் ஜி.கே டெய்ரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றும் தியாகராஜன் தெரிவித்தார்.

தூய்மை மற்றும் தரமான தமிழ் பசும் நெய் மற்றும் பிற பால் பொருள்களைப் பெற்றிட 'தமிழ் பால்'-ஐ அணுகலாமே! மேலும் விவரங்களுக்கு +91 73730 11500 / www.tamilmilk.com