Published:Updated:

பேச்சில் தமிழ், மூச்சில் தமிழ், இனி வாட்ச்சிலும் தமிழே!

எண்களுக்கு பதிலாக 'நான்கு, எட்டு, பத்து' என மணிகளைக் குறிக்கும் தமிழ் எழுத்து பொறித்த வாட்ச்சுகளும் டைட்டனின் நம்ம தமிழ்நாடு கலக்‌ஷனில் அடங்கும்

டைட்டன்
டைட்டன்

நொடிப்பொழுதும் தமிழை மறந்திடாத நெஞ்சங்களுக்கு ஏற்ற பரிசு ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளது டைட்டன் நிறுவனம். தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மற்றும் தமிழ் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதத்தில் தயாரிக்கப்பட்ட கைக் கடிகாரங்கள் கொண்ட 'நம்ம தமிழ்நாடு' கலக்‌ஷனை இனி அனைத்து தமிழக டைட்டன் ஷோ ரூம்களிலும் வாங்கலாம்!

அன்னப் பட்சியும் யாளியும்...

வித்தியாசமான டிரென்டுகளை விரும்பும் இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில், தமிழக கலைநயத்தை மையப்படுத்தி வெளிவந்துள்ளது டைட்டனின் 'நம்ம தமிழ்நாடு' கலெக்‌ஷன். கிளாசிக்கான விஷயங்களை விரும்புவோரையும், தமிழ் உணர்வு கொண்டோரையும் இது நிச்சயம் ஈர்க்கக்கூடியது.

பேச்சில் தமிழ், மூச்சில் தமிழ், இனி வாட்ச்சிலும் தமிழே!

காஞ்சிப் பட்டின் அன்னப்பட்சி: மான், மயில், மீன், யானை, இருதலைப்பட்சி போன்ற எண்ணற்ற உயிர்களை அழகிய கலை வடிவங்களாக கொண்டிருப்பது காஞ்சிப்பட்டின் சிறப்பம்சம். பாலையும் நீரையும் கலந்து வைக்க, நீரைப் பிரித்து பாலை மட்டும் பருகும் அன்னப்பட்சி பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்களில் கிடைக்கின்றன. பட்டு நூலில் பூத்தையல் போட்ட அன்னப்பட்சி கொண்ட வடிவம் கொண்ட டைட்டன் வாட்ச்சுகள் டைட்டனின் புதிய கலக்‌ஷனில் இடம்பெற்றுள்ளது.

புராண யாளி மிருகமும், மலர் வேலைப்பாடும்: பழங்கால தமிழகக் கோயில்கள் எண்ணற்ற சிற்பங்களையும், சுவர்ச்சித்திரங்களையும் கொண்டவை. கோயில் கோபுரங்கள், தூண்கள் மற்றும் படியோரங்களில் அதிகம் காணப்படும் புராண மிருகமான, சிங்க உடலும், யானைத் தலையும் கொண்ட 'யாளி'யின் உருவமும், மண்டபங்களின் மேற்கூரையில் காணப்படும் மலர்க்கோலமும் கொண்ட வாட்ச்சுகளை டைட்டன் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகக் கோயில்ககளின் கலை வேலைப்பாட்டை கௌரவப்படுத்தும் இந்தக் கடிகாரங்கள் காண்போரைக் கவரக்கூடியவை!

தமிழ் எழுத்துகள்: எண்களுக்கு பதிலாக 'நான்கு, எட்டு, பத்து' என மணிகளைக் குறிக்கும் தமிழ் எழுத்து பொறித்த வாட்ச்சுகளும் டைட்டனின் நம்ம தமிழ்நாடு கலக்‌ஷனில் அடங்கும். தமிழ் ஆர்வலர்களைக் கவரும் விதமாக அமைந்திருக்கும் இந்தவகை வாட்ச்சுகள், தமிழ் போற்றும் நவீன தமிழ் இளைஞர்களுக்கு சிறப்பான பரிசாக அமைந்துள்ளது.

பேச்சில் தமிழ், மூச்சில் தமிழ், இனி வாட்ச்சிலும் தமிழே!

நம்ம தமிழ்நாடு கலக்‌ஷனில் வரும் கைக்கடிகாரங்கள் அனைத்திலும் 'டைட்டன்' எனத் தமிழிலேயே முத்திரை பதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 'நம்ம தமிழ்நாடு' சிறப்புத் தொகுப்பில் இடம்பிடித்துள்ள 7 கடிகாரங்களின் விலை ரூ. 4495 முதல் ரூ. 6995 ஆகும். தமிழின் மகத்துவம் உலகம் முழுக்க பரவிவரும் இவ்வேளையில், தமிழ் மணம் பரப்பும் கடிகாரங்களை வெளியிட்டு தமிழர்களின் லைக்கை அள்ளியுள்ளது டைட்டன்! ஃபேஷன் இனி தமிழ் பக்கம்!

https://www.titan.co.in/shop/namma-tamil-nadu என்கிற வலைத்தள முகவரியிலும், தமிழகத்தில் உள்ள வேர்ல்டு ஆப் டைட்டன் ஸ்டோர்களிலும் இந்தக் கடிகாரங்களை வாங்கலாம். வெளிநாடு வாழ் தமிழர்கள் titan.co.in தளத்தில் வாங்கலாம்.