Published:Updated:

கேன்சர் நோயாளிக்கு கொரோனாவா? என்ன செய்ய வேண்டும்?

பில்ரோத்
பில்ரோத்

நோயாளிக்கு 24 மணிநேரமும் சப்போர்ட்டிவ் தெரப்பி அளித்து, உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைப்பதை உறுதி செய்தது பில்ரோத் மருத்துவமனை

ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகள் ரேடியேஷன் தெரப்பி மற்றும் கீமோதெரப்பி சிகிச்சைகளை எடுத்து வருகின்றனர். இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி இதனால் குறையக்கூடும் என்பதால், அவர்களுக்கு கோவிட்-19 காய்ச்சல் வர நிறைய வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். உலக சுகாதார நிறுவனமோ, சாதாரண மனிதர்களைவிட புற்றுநோயாளிகளுக்கு கோவிட்-19 காய்ச்சல் வர இருமடங்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

'கோவிட்-19 வந்துவிட்டால், தொடர்ந்து புற்றுநோய் சிகிச்சையை அளிக்கலாமா? அல்லது முதலில்

காய்ச்சலைக் குணப்படுத்தவேண்டுமா?' என்கிற முக்கியமான கேள்வி மருத்துவத்துறையில் எழுந்துள்ளது.

கேன்சர் நோயாளிக்கு கொரோனாவா? என்ன செய்ய வேண்டும்?

இதற்கு என்னதான் தீர்வு?

"புற்றுநோய் சிகிச்சையைத் தொடர்வது அல்லது நிறுத்துவது குறித்த முடிவை எடுக்கும் முன், சிகிச்சையை வழங்கிவரும் மருத்துவரை அணுகி அவரவர் உடல்நிலை, புற்று நோயின் தீவிரம் மற்றும் காய்ச்சலின் தீவிரம் போன்றவற்றைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்." என்கிறது புற்றுநோய் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் சர்வதேச அமைப்பான அமேரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி (ASCO).

'புற்றுநோய் சிகிச்சையை நிறுத்துவதால் காய்ச்சலை விரைந்து குணப்படுத்த முடியும் என எந்தவொரு ஆய்வு முடிவுகளும் கூறவில்லை. எனவே புற்றுநோய் சிகிச்சையை நிறுத்துவது பரிந்துரைக்கப்படுவதல்ல.' என்கிறது ASCO.

வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் அனுபவம் என்ன சொல்கிறது?...

அவருக்கோ 37 வயது. வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்த அவரைச் சோதித்த மருத்துவர்கள் அவருக்கு 'இரைப்பைப் புற்றுநோய்' இருப்பதைக் கடந்த மே மாதம் கண்டறிந்தனர். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதால், கோவிட்-19 டெஸ்ட் செய்துகொண்டார். டெஸ்ட் ரிசல்ட் பாசிட்டிவ்!

இக்கட்டான நிலைமையை உணர்ந்த அவரது குடும்பத்தினர், சென்னை ஷெனாய் நகரில் அமைந்துள்ள பில்ரோத் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர்.

மருத்துவர்களின் துரிதமான நடவடிக்கை...

நோயாளியின் உயிரைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை முக்கியம் என்பது பரிசோதனையில் தெரியவந்தாலும், கொரோனா காய்ச்சல் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்வதில் பல செயல்முறை சிக்கல்கள் இருந்தன.

நோயாளிக்கு 24 மணிநேரமும் சப்போர்ட்டிவ் தெரப்பி அளித்து, உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைப்பதை உறுதி செய்தது பில்ரோத் மருத்துவமனை. தொடர்ந்து எடுக்கப்பட்ட கோவிட்-19 டெஸ்டில் நெகட்டிவ் ரிசல்ட் வரவே, கொஞ்சமும் தாமதிக்காமல் மயக்க மருந்து நிபுணர் டாக்டர் ஜெய்குமார், அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் பி. பதம் குமார் மற்றும் டாக்டர் ஞானசேகர் தலைமையில் நோயாளிக்கு புற்று நோயை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கேன்சர் நோயாளிக்கு கொரோனாவா? என்ன செய்ய வேண்டும்?

வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்திருந்தாலும், நோயாளியின் உடலில் மெட்டபோலிக் மற்றும் எலக்ட்ரோலைட் டிஸ்டர்பன்ஸ் போன்ற சிக்கல்கள் இருக்கவே செய்தன. பில்ரோத் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இவையனைத்தும் சரிசெய்யப்பட்டு இன்று நோயாளி முற்றிலுமாக நலமடைந்துவிட்டார்!

"கோவிட் காய்ச்சல் இருப்பதால் பல மருத்துவமனைகளில் அவரை அனுமதிக்கவில்லை. பில்ரோத் மருத்துவமனையின் வேகமான நடவடிக்கையால் இன்று அவர் நலமாக இருக்கிறார்! புற்று நோயினால் உடலளவில் மிகவும் வாடிப்போயிருந்த என் கணவர் இப்போது நன்றாக தேறியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது." என்கிறார் குணமடைந்தவரின் மனைவி.

கோவிட்-19 சிகிச்சையில் அதிக கவனம் செலுத்துகிறோம்...

"பில்ரோத் மருத்துவமனையில், காய்ச்சல் வந்தவர்களை முற்றிலுமாக தனிமைப்படுத்தி, பாதுகாப்பான முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்காக 150 தனிப் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஷெனாய் நகரில் அமைந்துள்ள பில்ரோத் மருத்துவமனை 350 படுக்கைகளைக் கொண்டுள்ளது, மேலும் ஆர். ஏ. புரம் கிளை 100 படுக்கைகளைக் கொண்டுள்ளது. அனைத்துவிதமான மருத்துவ சேவைகளையும் வழங்கிவரும் எங்கள் மருத்துவமனையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் கூடிய புற்றுநோய் சிகிச்சைத் துறை, கோவிட்-19 காய்ச்சலுடன் அவதிப்படும் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சைகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது." என்கிறார் பில்ரோத் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜேஷ் ஜெகநாதன்.

அலட்சியம் வேண்டாம்...

கோவிட்-19'லிருந்து காத்துக்கொள்ள, புற்றுநோயாளிகள் முடிந்தவரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதும், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமாகும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக வீடியோ காலிங் மூலம் உங்கள் மருத்துவரை அணுகவும். மருத்துவமனைக்குச் சென்றால் தொற்று வந்துவிடுமோ எனப் பயந்து, புற்றுநோய் சிகிச்சையைத் தள்ளிப்போடலாம் என நீங்களாக முடிவெடுக்க வேண்டாம் என்பதுதான் மருத்துவ நிபுணர்கள் தரும் அறிவுரையாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு