Published:Updated:

போக்குவரத்து நெரிசலில் திண்டாடும்போது, உங்கள் பயணத்தைக் கொண்டாட வைக்கிறது TVS XL 100 கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட்!'

TVS XL 100 கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட்
TVS XL 100 கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட்

#TVSXL #TrafficNoWorries #EnjoyXLRide

போக்குவரத்து நெரிசல் என்பது இன்று அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சோர்ந்து போகச் செய்யுமளவுக்கு மேற்கொள்ளும் நீண்ட நேரப் பயணம், மிகவும் நெரிசலான சாலைகளில் கிடைக்கும் இடைவெளிகளில் நுழைந்து செல்வதில் இருக்கும் சிரமம் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்துவதற்கு வசதியான இடம் என இன்று நாம் எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

போக்குவரத்து நெரிசலில் திண்டாடும்போது, உங்கள் பயணத்தைக் கொண்டாட வைக்கிறது TVS XL 100 கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட்!'

இன்று சிறுசிறு நகரங்களிலும் இருசக்கர வாகன ஓட்டிகள்தான் இதுபோன்ற பிரச்சனைகளை அதிகம் எதிர்கொள்கின்றனர். தினசரி பயணமானது வழக்கத்தைவிட அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதால் வாகன ஓட்டிகள் சுமைக்கு ஆளாகின்றனர். இதை மனதில் கொண்டு, நம்முடைய அன்றாடப் போக்குவரத்து சிரமத்தைக் குறைக்கவும், போக்குவரத்து நெரிசலிலும்கூட தொந்தரவுகளின்றி சுலபமாக சென்று வரவும், போக்குவரத்து தரும் அழுத்தத்தைக் குறைக்கவும், உலகின் புகழ்பெற்ற இருசக்கர வாகனங்கள் & மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தி நிறுவனமான டி.வி.எஸ் மோட்டார், ஒர் அருமையான தீர்வாக டி.வி.எஸ் எக்ஸ்.எல் 100 கம்ஃபோர்ட் ஐ டச்ஸ்டார்ட்-ஐ (TVS XL100 Comfort i-Touchstart) சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

புத்தம் புதிய டி.வி.எஸ் எக்ஸ்.எல் 100 கம்ஃபோர்ட் ஐ டச்ஸ்டார்ட், நம்முடைய அன்றாட வேலைகளையும், பயணங்களையும் சுலபமாக்குகிறது. கண்களைக் கவரும் ஸ்டைலான நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஹெட்லேம்ப்கள், உட்காருவதற்கு சௌகரியமாக இருக்கும் வகையில் நீளமாக வடிவமைக்கப்பட்ட இரட்டை வண்ணங்களிலான இருக்கை, குஷன் வசதிகொண்ட பேக் ரெஸ்ட், க்ரோம் லெக் கார்ட், க்ரோம் சைலன்சர் கார்ட், இவற்றுடன் மேம்பட்ட சௌகரியமான பயணத்திற்கு உதவும் முன்பக்க ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் என அசத்தலான அம்சங்களுடன், அதிரடியாக அறிமுகமாகியிருக்கிறது டி.வி.எஸ் எக்ஸ்.எல் 100 கம்ஃபோர்ட் ஐ டச்ஸ்டார்ட்.

போக்குவரத்து நெரிசலில் திண்டாடும்போது, உங்கள் பயணத்தைக் கொண்டாட வைக்கிறது TVS XL 100 கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட்!'

டி.வி.எஸ் எக்ஸ்.எல் 100 கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட் முதல்முறையாக புதுமையான எலக்ட்ரிக் ஸ்டார்ட் டெக்னாலஜியான ஐ-டச்ஸ்டார்ட் (Electric Start Technology 'i-Touchstart) ஐ அறிமுகமாகி இருக்கிறது. இந்த நவீன ஐ டச்ஸ்டார்ட் தொழில்நுட்பமானது ஒருங்கிணைந்த ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் (Integrated Starter Generator System) சிஸ்டமுடன் இணைந்திருக்கிறது. இதனால் டி.வி.எஸ் எக்ஸ்.எல் 100 கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட், மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் வசதி, மோட்டார் சைக்கிள்களைப் போலவே முன்பக்க ஹைட்ராலிக் சஸ்பென்ஷன், எந்த மாதிரியான சாலைகளிலும் உறுதியுடன் பயணிக்க உதவும் 16 அங்குல பெரிய சக்கரங்கள், ஈஸி சென்டர் ஸ்டாண்ட், சிங்க் பிரேக்கிங் டெக்னாலஜி, கண்களை கவரும் அசத்தலான கிராஃபிக்ஸ் என ஒட்டுமொத்தமாக ஒர் அருமையான இருசக்கர வாகனத்திற்கான அனைத்து அம்சங்களுடன் களமிறங்கி இருக்கிறது.

இவ்வாகனத்தின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சம் வீட்டில் யார் வேண்டுமானாலும் எளிதில் ஓட்டிச் செல்லும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய டி.வி.எஸ் எக்ஸ்.எல் 100 கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட்-இன் அடக்கமான வடிவமைப்பு நம்முடைய அனைத்து விதமான அன்றாட போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. நெரிசலான சாலைகளிலும் சுலபமாக செல்லும் சௌகர்யத்தை அளிக்கிறது. பார்க்கிங் செய்வதற்கு அதிக இடம் தேவை இல்லை என்பதால் பார்க்கிங்கினால் உண்டாகும் தொந்தரவை குறைக்கிறது. இதனால்தான் டி.வி.எஸ் எக்ஸ்.எல் 100 கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட், எந்தச் சூழலிலும் போக்குவரத்தை எளிமையாக்கும் ஒரு வெற்றிகரமான இருசக்கர வாகனமாக சாலைகளில் கம்பீரமாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

போக்குவரத்து நெரிசலில் திண்டாடும்போது, உங்கள் பயணத்தைக் கொண்டாட வைக்கிறது TVS XL 100 கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட்!'

மேலும் தகவலுக்கு இணையத்தில் பார்க்கவும் -

https://www.tvsxl.com/

https://www.tvsxl.com/XL100-Comfort-i-TOUCHstart.aspx

அடுத்த கட்டுரைக்கு