Published:Updated:

220 டேட்டிங்கும் கைகொடுக்கல...! - நாயைத் திருமணம் செய்துகொண்ட லண்டன் பெண்

கலிலுல்லா.ச

லண்டனில் பெண் ஒருவர் நாயைத் திருமணம் செய்துகொண்டுள்ள நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாயுடன் நடந்த திருமணம்
நாயுடன் நடந்த திருமணம்

எலிசபெத் ஹோட் தனக்கான இணையைத் தேர்ந்தெடுப்பதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் அவர் திருமணம் செய்தவற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இது லைவ் ஷோ என்பது கூடுதல் தகவல். நிகழ்ச்சி தொடங்குகிறது; லைவ் ஷோவைப்பார்க்க தொலைக்காட்சி முன் ஏராளமானோர் குவிந்தனர். எலிசபெத் மணக்கப்போகும் மணமகன் யார் என்று பார்வையாளர்கள் எதிர்நோக்கியிருந்தனர்.

லோகன்
லோகன்
ITV

அப்போதுதான் அந்த ட்விஸ்ட் நடந்தேறியிருக்கிறது. `லோகன்’ என்ற நாயை அவர் அறிமுகப்படுத்தி, மோதிரம் மற்றும் ப்ரேஸ்லெட் மாற்றி எலிசபெத் திருணம் செய்துகொண்டார். நிச்சயம் இப்படியொரு ட்விஸ்டை அங்கிருந்தவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ``நான்கு முறை நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நின்றுபோனநிலையில், நாயைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.

அந்தத் திருமணம்தான் இது” என்று நிகழ்ச்சி தொகுப்பாளர்களிடம் எலிசபெத் தெரிவித்துள்ளார். ``நான் லோகனை காணும் முன்வரை உடைந்திருந்தேன். என்னை லோகன் காப்பாற்றியது; நான் அதை காப்பாற்றினேன்” என்கிறார் எலிசபெத். ஒருவருடத்துக்கு முன்புதான் அந்த நாயை எலிசபெத் வாங்கியுள்ளார்.

எலிசபெத்
எலிசபெத்
ITV

``என்னுடைய நண்பர்கள் பலரும், ஆண்களைக்காட்டிலும் நாயைத் திருமணம் செய்துக்கொள்ளலாம் என விரும்பியிருக்கிறார்கள்” என்று விநோதமான இந்த நடைமுறைக்கு விளக்கம் கொடுக்கிறார் எலிசபெத். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. `அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி தேவை’ என்றெல்லாம் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பினர், ``சரியான முடிவு. அவர், தனது வாழ்க்கைக்கான முடிவை எடுத்திருக்கிறார்” என்று வரவேற்றும் பேசிவருகின்றனர்.