Published:Updated:

யு.பி.எஸ் பேட்டரி வெடிப்பு: பராமரிப்பில் மேற்கொள்ள வேண்டியவை என்னென்ன?

யு.பி.எஸ் பேட்டரி

உற்பத்தியில் குறைபாடுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் குறைவு, ஏனென்றால் நாம் பயன்படுத்தும் செல்போன், மின்சார வாகனங்களின் பேட்டரிகளைவிட மேம்பட்ட பேட்டரிகளே யு.பி.எஸ் பேட்டரிகள்

யு.பி.எஸ் பேட்டரி வெடிப்பு: பராமரிப்பில் மேற்கொள்ள வேண்டியவை என்னென்ன?

உற்பத்தியில் குறைபாடுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் குறைவு, ஏனென்றால் நாம் பயன்படுத்தும் செல்போன், மின்சார வாகனங்களின் பேட்டரிகளைவிட மேம்பட்ட பேட்டரிகளே யு.பி.எஸ் பேட்டரிகள்

Published:Updated:
யு.பி.எஸ் பேட்டரி

கோவையில் யு.பி.எஸ் பேட்டரி வெடித்ததில் தாய் மற்றும் இரண்டு மகள்கள் உயிரிழந்துள்ளனர். வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதனால் இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது. மின்கசிவு ஏற்படுவது இயல்புதான் என்றாலும்; யு.பி.எஸ் பேட்டரிகள் வெடிப்பதற்கான காரணத்தைக் கண்டறியத் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஓய்வுபெற்ற தலைமை அதிகாரி அப்பாவுவைத் தொடர்புகொண்டு பேசியபோது, ‘பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தாததே இது போன்ற சம்பவங்கள் நிகழக் காரணம்’ என்று கூறினார்.

யு.பி.எஸ் பேட்டரி
யு.பி.எஸ் பேட்டரி

“கோடைக்காலம் தொடங்கவிருக்கும் சூழலில் யு.பி.எஸ் பயன்பாடு மக்களிடையே அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. விலைப் பட்டியலைப் பார்க்காமல் வாங்கக்கூடிய ஒரு அத்தியாவசியச் சாதனமாகவே யூ.பி.எஸ் நம் வாழ்வில் இடம்பெறத்தொடங்கிவிட்டது. அப்படிப்பட்ட சூழலில் வாங்கிய பொருளைச் சரியான பராமரிப்போடு பயன்படுத்துதல் அவசியம். பராமரிப்பு என்று வந்துவிட்டால் பேட்டரிகள் பலவிதம் உண்டு. அவற்றுக்கு ஏற்றார்போலக் குறிப்பிட்ட கால இடைவெளியில் வடிநீர் எனப்படும் ‘டிஸ்டில்ட் வாட்டர்’-ஐப் புதுப்பிப்பது, பேட்டரிகளின் மேல் தூசி படியாமல் பாதுகாப்பது மற்றும் காற்றோட்டம் இருக்கும் பகுதியில் அவற்றைப் பொருத்துவது ஆகியவற்றைப் பின்பற்றினாலே இது போன்ற நிகழ்வுகளைப் பெருமளவு தடுக்கலாம்,” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“பராமரிப்பு தேவையில்லாத பேட்டரிகளும் இப்போது பயன்பாட்டில் வரத்தொடங்கியிருக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தினாலும் காற்றோட்டம் உள்ள பகுதியில் பொருத்துவதை மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், உயர் மின்சாரப் பாய்ச்சலாலும் மின்கசிவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. சரியான எலெக்ட்ரிஷியனை வைத்து மின்சார இணைப்புகளைப் பொருத்தினால் இது போன்ற தவறுகளைத் தடுக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.

உற்பத்தியில் நிகழும் பிரச்னைகள் பற்றிப் பேசும்போது, “உற்பத்தியில் குறைபாடுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் குறைவு, ஏனென்றால் நாம் பயன்படுத்தும் செல்போன், மின்சார வாகனங்களின் பேட்டரிகளைவிட மேம்பட்ட பேட்டரிகளே யு.பி.எஸ் பேட்டரிகள்,” என்றார்.

அப்பாவு
அப்பாவு

வாங்கும் பொருளின் இணைப்பாக வரும் பராமரிப்புப் பட்டியலைப் படித்துப் பார்க்காமல், பொருளை வாங்கும் நிலையிலேயே பெரும்பாலானோர் வைத்திருக்கின்றனர். பராமரிப்பு விதிகளைப் பின்பற்றினாலே போதிய விழிப்புணர்வு ஏற்படும். எந்த ஒரு மின்சாதனப் பொருளாக இருந்தாலும், சிறப்பு கவனிப்புகளைத் தாண்டி சாதாரண பராமரிப்பே, அவை குறைபாடுகள் இன்றி நீண்டநாள் உழைக்க வழிவகுக்கும்!

-சுபஸ்ரீ

(பயிற்சிப் பத்திரிகையாளர்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism