Published:Updated:

எந்தத் திசைக்கு என்ன பலன்? வளமான வாழ்வுக்கு வாஸ்து!

வாஸ்து
வாஸ்து

நான்கு திசைகளும் நான்குவிதமான நன்மைகளை அளித்து மனிதனை வழிநடத்தக் கூடியவை. ஒவ்வொரு திசைக்கும் அதற்கென சிறப்பம்சங்கள் உள்ளன.

சொந்த வீடோ, வாடகை வீடோ, வாஸ்து சாஸ்திரப்படி நம் வீட்டை அமைக்கும்போது பல சௌபாக்யங்களைப் பெற்று வாழ்வில் வளம் பெற முடியும். கடந்த சில வருடங்களாகவே பொதுமக்களிடையே வாஸ்து சாஸ்திரமானது பிரபலமடைந்து வருகிறது. பலருக்கும் இதில் ஆர்வம் இருந்தாலும் வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றிய சரியான புரிதல் மக்களிடம் குறைவாகவே உள்ளது. வாஸ்துவில் முக்கிய இடம்பெறும் வீட்டின் திசைகள் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்து இப்பதிவில் விளக்கமளிக்கிறார் வாஸ்து சாஸ்திர நிபுணர் சங்கர்கணேஷ் ரவிராஜ்.

வீடு வாங்குவதற்கு அல்லது குடிபுகுவதற்கு பலரும் கிழக்கு அல்லது வடக்கு பார்த்த வாசலையே பெரும்பாலும் விரும்புகிறார்கள். இது சரியா?

நான்கு திசைகளும் நான்குவிதமான நன்மைகளை அளித்து மனிதனை வழிநடத்தக் கூடியவை. ஒவ்வொரு திசைக்கும் அதற்கென சிறப்பம்சங்கள் உள்ளன. விவரம் தெரியாத ஒரு சிலர், குறிப்பிட்ட சில திசைகளை மோசமான திசைகள் என்று தவறாகக் குறிப்பிடுகின்றனர். முதலில் திசைகள் குறித்து தெளிவு பெறுவோம்.

கிழக்கு: இந்தத் திசைக்கு அதிபதி இந்திரன். கிழக்கு நோக்கியுள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு இந்திரன் சுகபோக சொத்து சுகங்களை அளிக்கிறார்.

வடக்கு: இந்தத் திசைக்கு அதிபதி குபேரன். இவர் வெங்கடேச பெருமாளுக்கே கடன் கொடுத்தவர். இத்திசை நோக்கி வாழ்பவர்களுக்கு சிறப்பான பொருளாதார வளர்ச்சி உண்டு.

எந்தத் திசைக்கு என்ன பலன்? வளமான வாழ்வுக்கு வாஸ்து!

மேற்கு: இத்திசைக்கு அதிபதி வருணன். இவர் மழைக்கான கடவுள். மேற்கு பார்த்த இல்லத்தினால் ஒரு மனிதனுக்கு நல்ல தைரியமும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தும், புகழும், ஸ்திரமான சந்ததிகளும் வாய்க்கும். தொழிலில் நல்ல பணப் புழக்கமும், அரசாங்க ஆதரவும் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு ஏற்ற திசை மேற்கு.

தெற்கு: இந்தத் திசைக்கு அதிபதி எமன். இவர் தர்மத்தைக் காப்பவர். தெற்குப் பகுதியைச் சரியாக உபயோகித்தால் நல்ல உடல் ஆரோக்கியமும் தொழிலில் வெற்றியும் கிட்டும். நான் அறிந்தவரை, பரம்பரை பரம்பரையாக வெற்றிகரமாகத் தொழில் செய்பவர்கள் பலர் தெற்கு நோக்கிய வீடுகளிலேயே பாரம்பர்யமாக வசித்து வந்துள்ளனர்.

இதர திசைகளின் அதிபதிகள் :

தென்கிழக்கு: அக்னி | தென்மேற்கு: நைருதி | வடகிழக்கு: ஈசானன் | வடமேற்கு: வாயு

SankarGanesh RaviRaj
SankarGanesh RaviRaj

சங்கர்கணேஷ் ரவிராஜ், வாஸ்து நிபுணரான தனது தந்தை பி.ஜே.ரவிராஜ் அவர்களிடம் பாரம்பர்ய முறையில் வாஸ்து சாஸ்திரத்தைப் பயின்றவராவார். 'வாஸ்துவின் திறவுகோல்' எனும் பிரபலமான புத்தகத்தை எழுதியவர் சங்கர்கணேஷ் ரவிராஜ். 50,000-த்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் கொண்ட யூடியூப் சேனலையும் நடத்திவருகிறார்.

எந்தத் திசைக்கு என்ன பலன்? வளமான வாழ்வுக்கு வாஸ்து!

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களைப் பெற, தொடர்புகொள்ளவும் - ஃபோன் : 98946 44033 | மின்னஞ்சல் : sankarganeshandsons@gmail.com. பொதுநலன் கருதி வெளியிடுவோர் : CREDAI, கோயம்புத்தூர்.

அடுத்த கட்டுரைக்கு