Published:Updated:

"வ.யி. ஷண்முகம் பிள்ளை ஜுவல்லர்ஸ்" புதுக்கோட்டை மண்ணின் வாசம்!

Jewellers
Jewellers

நகை விலை உயர்ந்தாலும், பார்ப்பதற்கு அளவு பெரிதாக தெரியும் லைட் வெயிட் கலெக்ஷன்ஸை வாங்கலாம்.

புதுக்கோட்டை மாநகர் கிழக்கு ராஜ வீதியின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது அந்த ஸ்தாபனம். கிட்டத்தட்ட '80 வருடங்களாக' புதுக்கோட்டைப் பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெற்று வந்துள்ளது. 1932, வ.யி.ஷண்முகம் பிள்ளை, நகைக் கடை ஒன்றில் ஒரு சாதாரண ஊழியராக வேலைக்குச் சேர்ந்தார், வாழ்வில் படிப்படியாய் உயர்ந்தார். 8 வருட கடும் உழைப்பும் நகைத் தொழில் பற்றிய நல்ல புரிதலும் பெற்று மிக எளிமையான ஒரு நகைக்கடையை புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் 1940-ல் ஆரம்பித்தார். வெறும் நூறு சதுர அடியில் ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கடை இன்று பல்லாயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான 'வ.யி. ஷண்முகம் பிள்ளை ஜுவெல்லர்ஸ்'யாக உயர்ந்து நிற்கிறது. 'வர வர ராசியாகும், வாங்க, வாங்க தங்கம் சேரும்!' எனக்கூறும் வ.யி.ஷண்முகம் பிள்ளை ஜுவெல்லர்ஸின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து 3 தலைமுறைகளாக இங்கு நகை வாங்குவோர் என்பது குறிப்பிடத்தக்கது!

பாரம்பர்ய ஆன்டிக் ஜுவெல்லரி...

கண்ணைக் கவரும் புதுப்புது மாடர்ன் டிசைனில் தங்க நகைகள் வந்துவிட்டாலும் பழமையையும் பாரம்பர்யத்தையும் கொண்டாடும் ஆன்ட்டிக் (Antique) ஜூவல்லரி நகைகளுக்கு பெயர்பெற்று விளங்குகிறது புதுக்கோட்டை வ.யி. ஷண்முகம் பிள்ளை ஜூவல்லர்ஸ். கண்ணைக்கவரும் பாலிஷ் கொண்ட தங்க நகைகளாக அல்லாமல், ஒருவித மெல்லிய பிரவுன் நிறத் தங்கமாக இருப்பதுதான் ஆன்ட்டிக் ஜுவெல்லரியின் அடையாளம். "அதிக எடை கொண்ட மற்றும் மிக மிக நுணுக்கமான அழகிய கலை வேலைப்பாடுகளால் ஆனது ஆன்ட்டிக் ஜூவல்லரி. முன்னொரு காலத்தில் ஆன்ட்டிக் ஜூவல்லரி விரும்பி வாங்கப்பட்டது. ஆனால் தற்போது எடை குறைந்த நகைகளையே மக்கள் விரும்புகின்றனர். அதற்கேற்றாற்போல குறைந்த எடையில் ஆன்ட்டிக் ஜுவல்லரியை அறிமுகப்படுத்தியுள்ளோம். 10 சவரன் எடைகொண்ட ஒரு ஆன்ட்டிக் நெக்லஸ்-ஐ இப்போது 2 சவரனிலேயே இங்கு வாங்கலாம்! ஒருசில சமூகப் பிரிவினர் மட்டுமே அணிபவையாக இருந்த ஆன்ட்டிக் நகைகள் இன்று அனைத்து சமூக மக்களுக்கும் ஏற்றபடி வடிவமைக்கப்படுகிறது." என்கிறார் வ.யி.ஷண்முகம் பிள்ளை நகைக்கடையின் நிர்வாக இயக்குனர் V.E.S. வெங்கடாச்சலம்.

வ.யி. ஷண்முகம் பிள்ளை ஜுவல்லர்ஸில் பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட நகைகள் உள்ளன

தங்க விலை மளமளவென ஏறிவிட்டதே!

"ஆடி முடிந்துவிட்டது. இனி கல்யாண சீசன் ஆரம்பம். தங்கத்தோடு நெருங்கிய தொடர்புடையவை நம் ஊர் திருமணங்கள். மணமக்களுடன் மகாலட்சுமியையும் அனுப்பி வைப்பதாக எண்ணியே தங்க நகைகளை மணமக்களுக்கு பரிசு வழங்குகிறோம். இப்போதைய தங்க விலை ஏற்றம், எப்போதுமே தங்கம் ஒரு நல்ல முதலீடுதான் என்பதை நிரூபணமாக்கியிருக்கிறது. நகை விலை உயர்ந்தாலும், பார்ப்பதற்கு அளவு பெரிதாக தெரியும் லைட் வெயிட் கலெக்ஷன்ஸை வாங்கலாம். இதுதவிர மொத்தமாக தங்க நகைகள் வாங்குவோருக்கு இலவசமாக வெள்ளிப் பொருள்களையும் வழங்குகிறோம். இதுவும் ஒருவகையில் சேமிப்புதானே!"

தங்கம்போல... ஆனால் வெள்ளி நகைகள்!

"தங்க நகை வாங்க இயலாதோர், கவரிங் நகைகளை வாங்குவர். நாளடைவில் இவை கறுத்துப்போவதோடு, அதன் தரமும் விலையும் மலிந்துபோகும். ஆனால், எங்களிடம் தங்க நகைகளைப் போலவே தோற்றமளிக்கும் ஆன்டிக் வெள்ளி நகைகள் உள்ளன. அச்சு அசல் தங்கம் போலவே இருக்கும் இந்த நகைகளை அன்றாடப் பயன்பாடு மற்றும் விசேஷங்களுக்கு அணியலாம். தங்க விலையுயர்வை மனதில் வைத்து இவ்வாறான வெள்ளி நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். தங்கம் போன்ற வெள்ளி நகைகளை ரூ.3000க்குள் வாங்க முடிவதால் பல வாடிக்கையாளர்கள் இவற்றை மன மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர்".

Jewellers
Jewellers

அனைவரும் விரும்பும் கலெக்ஷன்ஸ் மற்றும் ஆஃபர்கள்

வ.யி. ஷண்முகம் பிள்ளை ஜுவல்லர்ஸில் பத்தாயிரத்துக்கும் மேற்ப்பட்ட நகைகள் உள்ளன. கலெக்ஷன்ஸ் அதிகமாக இருப்பதால் திருமண நகை வாங்குவோருக்கு வசதியாகவும், திருப்தியாகவும் இருக்கிறது. தங்கம், வைரம், வைரம் பதித்த லைட் வெய்ட் கலெக்ஷன்ஸ், மரகதம் & மாணிக்கம் பதித்த ஆன்ட்டிக் குந்தன் செட், பிளாட்டினம் நகைகள், பிளாட்டினம் மோதிரங்கள், வைர டாலர், வெள்ளி நகைகள், விளக்குகள் போன்ற எண்ணற்ற நகைகள் இங்கு கிடைக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைக்காத பிரத்தியேக நகைகள் பலவும் வ.இ.ஷண்முகம் பிள்ளை ஜுவல்லர்ஸில் கிடைக்கின்றன. அக்ஷய திரிதியை, தீபாவளி, தன திரயோதசி ஆகிய நாட்களில் தங்கம் வாங்கும் அனைவர்க்கும் வெள்ளிப் பொருள்கள் இலவசமாகவும் வழங்கப்படுகின்றன!

'வர வர ராசியாகும், வாங்க, வாங்க தங்கம் சேரும்!' புதுக்கோட்டை வ.இ.ஷண்முகம் பிள்ளை ஜுவல்லர்ஸில் கண்கவர் நகைகளை வாங்கி மகிழலாம்! 3217-3218, கீழ ராஜவீதி, புதுக்கோட்டை. போன்: 04322-221869 | 04322-223869 | 98424 33869.

அடுத்த கட்டுரைக்கு