Published:Updated:

ரூ.505 மதிப்புள்ள அட்டகாசமான 3 இ-புத்தகங்கள் முற்றிலும் இலவசமாக!

இ-புத்தகங்கள்
இ-புத்தகங்கள்

இ-புத்தகங்கள்: மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த மூன்று புத்தகங்கள் குறித்தும், இவற்றை டவுன்லோடு செய்து வாசிக்கும் வழிமுறைகள் குறித்தும் இங்கே பார்ப்போம்.

கொரோனா லாக்டெளன் நீடித்துக்கொண்டே போகும் வேளையில், இந்தக் காலத்தை வாசிப்பு அனுபவத்தைக் கூட்டும் வாய்ப்பாக கருதி, வாசகர்களுக்கு சில சலுகைகளை வழங்குகிறது விகடன்.

இதன் ஒரு பகுதியாக, அஜயன் பாலா எழுதிய 'நாயகன் - அம்பேத்கர்', டாக்டர் ஷாலினி எழுதிய 'அர்த்தமுள்ள அந்தரங்கம்' மற்றும் 'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...' ஆகிய மூன்று புத்தகங்களை இ-புக் வடிவில் வாசகர்களுக்கு வழங்குகிறோம். ரூ.505 மதிப்புள்ள இந்த இ-புத்தகங்களை முற்றிலும் இலவசமாக விகடன் App-ல் டவுன்லோடு செய்து வாசிக்கலாம்.

மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த மூன்று புத்தகங்கள் குறித்தும், இவற்றை டவுன்லோடு செய்து வாசிக்கும் வழிமுறைகள் குறித்தும் இங்கே பார்ப்போம்.

அஜயன் பாலா எழுதிய `நாயகன் - அம்பேத்கர்'

வேர்களை அறுத்தெரிந்து வெடித்துக் கிளம்பிய ஒரு வித்தாக, சாதியத்தின் கொடிய நரம்புகளை அறுத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட 'மகர்' இனத்தின் இருண்ட கருவறையிலிருந்து வெளிவந்த ஒரு விடிவெள்ளி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். பள்ளி நாட்களிலேயே சாதியத்தின் கொடுங்கரங்களால் தீண்டப்பட்டு மனமெங்கும் புண்ணாகிப்போன பீமாராவ் சக்பால் என்ற இளைஞர்தான் அம்பேத்கராக மாறினார். வேதனையில் வெந்து நொந்துகொண்டிருந்த அந்த நேரத்தில் கல்வி என்ற தற்காப்பு ஆயுதம் அவர் கைக்குக் கிடைத்தது. கூரான அந்த ஆயுதம் சாதியத்தின் நரம்புகளை பதம் பார்க்கத் தொடங்கியது.

`நாயகன் - அம்பேத்கர்'
`நாயகன் - அம்பேத்கர்'

இதனால், தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை என்று பிரயோகப் படுத்திக்கொண்டிருந்த சாதிய, துவேஷ சக்திகள் அம்பேத்கரை கண்டு அஞ்சத் தொடங்கின. இதுதான் சமயம் என்று உணர்ந்த அவர், தன் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக கல்வி என்னும் ஆயுதத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தினார். சட்டம் பயின்றார். பல பட்டங்கள் பெற்றார். ஆலய நுழைவு போராட்டத்தை கையில் எடுத்தார். தொடர்ந்து தம் மக்களின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் எழுப்பினார்.

இந்திய அரசியல் சரித்திரத்தின் பங்கங்களைப் புரட்டும்போது அம்பேத்கரின் பெயர் இல்லாத அத்தியாயங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரின் பங்களிப்புகள், செயல்பாடுகள் ஏராளம். அப்படிப்பட்ட ஒப்பற்ற தலைவர் அம்பேத்கரின் வரலாற்றை நூலாசிரியர் அஜயன் பாலா எளிய நடையில் எழுதியிருக்கிறார்.

> 'நாயகன் - அம்பேத்கர்' இ-புக் இலவசமாக இங்கே > க்ளிக் செய்க... https://vikatanapp.page.link/Ambedkar2

டாக்டர் ஷாலினி எழுதிய 'அர்த்தமுள்ள அந்தரங்கம்'

"மனித இனத்தின் அந்தரங்கத்தைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை, அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராயப் போகிறோம். இதுவரை நீங்கள் பார்த்திராத, கேட்டிராத, நினைத்திராத பல திடுக்கிடும் உண்மைகளை உங்களுக்குத் தெளிவாக விளக்கவே இந்த 'அர்த்தமுள்ள அந்தரங்கம்'..." - இப்படி ஆரம்பிக்கிறார் டாக்டர் ஷாலினி.

"காமத்தின் முதலும், முக்கியமானதுமான வகை: இனவிருத்தி காமம் (Reproductive Sex) அதாவது, குழந்தை குட்டி வேண்டுமே என்று ஈடுபடும் உடல் உறவு; உறவு என்று ஏற்பட்டுவிட்டால், அதனை வெறும் 'யாரோ ஓர் ஆணும் பெண்ணும்' என்ற தெளிவற்ற நிலையிலிருந்து 'அவனும் அவளும் ஒரு ஜோடி' என்ற தெளிவான முடிவுக்குக் கொண்டுபோவதே இரண்டாம் வகையான 'ஜோடி சேர்க்கை காமம்' (Pair Formation Sex)...

அர்த்தமுள்ள அந்தரங்கம்
அர்த்தமுள்ள அந்தரங்கம்

மானுடர்கள் தங்கள் அந்தஸ்தை அதிகரிக்க தீவிரமாக ஈடுபடும் புணர்ச்சிதான், காமம் நம்பர் எட்டு: அந்தஸ்து காமம் (Status Sex)..." என பன்னிரெண்டு வகையான மனித காமத்தையும், அதனால் மனித இனத்தில் ஏற்பட்ட வாழ்வியல் ஏற்ற - இறக்கங்களையும் விரிவாக விளக்குகிறது, டாக்டர் ஷாலினி எழுதிய 'அர்த்தமுள்ள அந்தரங்கம்' புத்தகம். உங்களுக்காகவே இந்தப் புத்தகத்தை இ-புக் வடிவில் முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம்.

> 'அர்த்தமுள்ள அந்தரங்கம்' இ-புக் இலவசமாக இங்கே > க்ளிக் செய்க... https://vikatanapp.page.link/Antharangam

'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...'

இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர். இயற்கை விவசாய வரலாறை ஆவணப்படுத்த வேண்டும் என்றால், அது நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு மூலமே பூர்த்தி அடையும். இதனால்தான் பசுமை விகடன் இதழில் 'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...' என்ற தொடரை எழுதினார். 39 பாகம் வரை எழுதிய நிலையில், மீத்தேன் எதிர்ப்புப் பணிகளுக்காக டெல்டா மாவட்டத்தில் ஓயாத சுற்றுப்பயணத்தில் இருந்தவரை ஓய்வு கொள்ள இயற்கை அழைத்துக் கொண்டது.

இதனால், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலரிடம் இருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக தொகுத்திருக்கிறார் பொன்.செந்தில்குமார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் மலேசியா போன்ற சில நாடுகளுக்கும் இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் முன்னெடுத்துச் சென்றிருப்பது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து, அவர் உருவாக்கி வைத்துள்ள இயற்கை வழி விவசாயிகளின் எண்ணிக்கை, அமுதக் கரைசலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்கி பெருகுவது போல பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் அழைத்துச் சென்ற நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு நல்ல நம்பிக்கை விதைக்கும் தன்னம்பிக்கை நூல்.

'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்' இ-புக் இலவசமாக இங்கே > க்ளிக் செய்க... https://vikatanapp.page.link/NaanNammalvarPesugiraen

இ-புத்தகங்களை டவுன்லோடு செய்து வாசிப்பது எப்படி?

உங்களது மொபைலில் Vikatan App-ஐ டவுன்லோடு செய்து, ரெஜிஸ்டர் பண்ணினால் போதும், இந்த இணைப்புகளில் உள்ள இ-புத்தகங்களை முழுமையாக வாசிக்கலாம்.

நீங்கள் டவுன்லோடு செய்யும் இந்த இ-புத்தகங்கள் விகடன் App-ல் உள்ள Library-ன் E-book பகுதியில் சேவ் ஆகியிருக்கும். அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம்.

சிறப்புச் சலுகை:

இந்த இ-புத்தகங்களுடன், புதிதாக விகடன் App-ஐ டவுன்லோடு செய்து தங்களைப் பதிவு செய்துகொள்பவர்கள் விகடன் இதழ்கள் அனைத்தையும் 30 நாள்களுக்கு இலவசமாக வாசிக்கும் சலுகையும் பெறலாம். மேலும், விகடன் இதழ்களின் கடந்த 15 ஆண்டு கால பொக்கிஷப் பகுதிகளிலும் வலம் வரலாம். https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு