Published:Updated:

ஆன்லைனில் இல்லங்க... நேரிலும் இப்படி வாங்கலாம்! விவேக்ஸ் தரும் விழாக்கால ஆஃபர்கள்! #Viveks_TheUnlimitedShop

பொருளை நேரில் பார்த்து தேடித்தேடி வாங்குவதுபோன்ற திருப்தி வேறெதிலும் கிடைப்பதில்லை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இது பண்டிகைக் காலம்... ஆடைகள், வீட்டு உபயோகப்பொருள்கள், பரிசுப்பொருட்களை வாங்கவேண்டிய நேரமும் இதுவே. முன்பெல்லாம் பண்டிகை என்றால் வீடே கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்கும். ஒரு மாதத்திற்கு முன்பே எப்போது பர்ச்சேஸ் செய்ய வேண்டும்.. என்னென்ன வாங்கவேண்டும் என்ற லிஸ்ட் தயாராகிவிடும். பர்ச்சேஸிற்கு குடும்பத்துடன் விரைந்து, ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை போட்டுப்பார்த்து தேர்வு செய்வர். அதேபோல் வீட்டிற்குத் தேவையான பொருள்களையும் குடும்பத்துடன் பார்த்து பிடித்துப்போன பிறகே தேர்வு செய்து வாங்குவர்.

குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும். அதனைப் பூர்த்திசெய்யும் வகையில் அலைச்சல் எல்லாம் பார்க்காமல் ஒவ்வொரு பொருளையும் தேர்வு செய்து வாங்கினால்தான் திருப்தியடைவோம். பரபரப்பாக இயங்கும் பண்டிகை நாட்களில் அக்கம்பக்கத்தில் இனிப்புகளை பரிமாறி, குடும்பத்துடன் வெடிவெடித்து கொண்டாடி மகிழ்ந்தகாலம் அது. ஆனால் இப்போதெல்லாம் பண்டிகை நாட்களில் பலரும் குடும்பத்துடன் இருப்பதையே தவிர்த்துவிடுகின்றனர். குடும்பத்துடன் ஷாப்பிங், கொண்டாட்டம் எல்லாம் இல்லாமல், பண்டிகை நாள் சத்தமின்றி சாதாரண நாளாக முடிந்துவிடுகிறது.

விவேக்ஸ்
விவேக்ஸ்

'ஆன்லைன் ஷாப்பிங்' மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுது இந்த நிலைக்கு ஒரு முக்கிய காரணமாகும். நேரம் ஒதுக்கி, நேரில் சென்று நிதானமாக தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கும் பொறுமை இல்லாதவர்களுக்கு 'ஆன்லைன் ஷாப்பிங்' சிறந்த சாய்ஸாக இருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங்கில் பல பின்னடைவுகள் உள்ளன. உதாரணத்திற்கு ஆன்லைனில் நாம் வாங்கும் ஆடையின் நிறம் ஆர்டர் செய்து வந்தபின் நேரில் வேறொரு நிறமாகத் தெரியும். நிறம் மட்டுமன்று தரம் போன்ற பல விஷயங்களும் மாறலாம்...

விவேக்ஸ் - தி அன்லிமிட்டட் ஷாப்

டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், லேப்டாப், ஃபோன் போன்ற பல உபயோகப் பொருட்களை பலவிதமான பிராண்ட்களில் வழங்கி வருகிறது விவேக்ஸ் - தி அன்லிமிட்டட் ஷாப். ஒரு பொருளை நேரில் பார்த்து தேடித்தேடி வாங்குவதுபோன்ற திருப்தி வேறெதிலும் கிடைப்பதில்லை, அதேபோல் நாம் விரும்பும் பொருளை நேரில் சரிபார்க்க முடிவதும், அதன் அம்சங்களை பார்த்து தெரிந்துகொண்டு அதைவிட சிறந்த பொருளை தேர்வு செய்ய முடிவதும், நேரில் நாம் பார்த்து அலசுவதில்தான் உள்ளது. இந்த அனுபவங்களையெல்லாம் விவேக்ஸில் பெற முடியும்.

விவேக்ஸ்
விவேக்ஸ்

"விவேக்ஸில் ஒவ்வொரு பொருள் பற்றியும் விவரிக்க விற்பனை பிரதிநிதி இருப்பார். அதனால் ஆன்லைனில் தேடித்தேடி ரிவியூக்களைப் பார்ப்பதற்கு பதில் விற்பனை பிரதிநிதியிடம் உடனடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். பல பொருள்களுக்கு லைவ் டெமோவும் இங்கு இருக்கிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு வாரக்கணக்கில் காத்திருக்காமல், அப்போதே பொருளை வாங்கி அப்போதே வீட்டில் டெலிவரியும், இன்ஸ்டாலேஷனும் செய்வதற்கு பொருளை நேரில் வாங்குவதே சிறந்தது. தவிர, நேரில் வாங்கும் பொருள்கள் டேமேஜ் ஆவதற்கு வாய்ப்பில்லை." என்கிறார்கள் விவேக்ஸ் நிறுவனத்தார்.

ஆஃபரும், சேவையும்!

ஆன்லைனில் மட்டுமல்ல விவேக்ஸிலும் நாம் எதிர்பார்க்கக்கூடிய பண்டிகைக்கால ஆஃபர்கள், கேஷ்பேக்குகள் இருக்கின்றன. பேங்க் கேஷ்பேக் மட்டுமன்று விவேக்ஸ் தனிப்பட்ட முறையில் வழங்கும் கேஷ்பேக் ஆஃபரும் உள்ளது. எக்ஸ்சேஞ் ஆஃபர், நீட்டிக்கப்படும் வாரன்டி போன்ற அம்சங்களையும் விவேக்ஸ் வழங்குகிறது. இதுதவிர, விவேக்ஸ் மற்றும் பிற கடைகளில் வாங்கிய பொருட்களுக்கு சர்விஸ் செய்து தருவதற்கு வாடிக்கையாளர்களுக்குத் தனியாக 'ஹோம் சர்வ்' என்கிற சர்விஸ் சென்டரும் உள்ளது.

எனவே இந்தத் தீபாவளியை ஆன்லைனிற்கு மேலான சிறப்புகளையும், தரத்தையும் கொண்ட விவேக்ஸில், பொருள்களை வாங்கி பண்டிகையைக் கொண்டாடலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு