Published:Updated:

100% இலவச கல்லூரிப் படிப்பு! வி-சாட் எக்ஸாம் எழுதுங்க.

VSAT Online Exam
VSAT Online Exam

இத்தேர்வில் சிறப்பான இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் மதிப்பெண்ணின் அடிப்படையில் 100%, 75%, 50%, 25% மற்றும் 10% டியூஷன் ஃபீஸ் கட்டணமில்லாமல் படிக்கலாம்.

கல்லூரி காலம் வந்துவிட்டது. 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் எந்தக் கோர்ஸ், என்ன ஃபீஸ், எப்படி எதிர்காலம் என்று நிறையவே திட்டம் தீட்டிக்கொண்டிருப்பார்கள்! திறமை இருந்தால் போதும், கல்விக் கட்டணம் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்கிறது சென்னையில் இயங்கி வரும் வேல்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்! ஆம், வேல்ஸ்-ன் 'V-Sat' நுழைவுத் தேர்வு எழுதி நீங்களும் இலவசமாகக் கல்லூரியில் படிக்கலாம்!

வேல்ஸ் - தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனம்.

* சென்னை பல்லாவரத்தில் 30 ஆண்டுகாலமாகக் கல்விச் சேவையை வழங்கிவரும் ஸ்தாபனம் வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (VISTAS).

* கலை மற்றும் அறிவியல், இன்ஜினியரிங், ஏவியேஷன், கடல்சார் படிப்புகள், ஹோட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட், சட்டம், மொழிகள், மேலாண்மை, மருந்தியல் (ஃபார்மசி), ஆராய்ச்சிப் படிப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்கிவருகிறது வேல்ஸ்.

* முப்பது ஏக்கர் பரப்பளவில், பசுமையான சூழலில் வகுப்பறைகள், ஆராய்ச்சிக் கூடங்கள், கணினி வகுப்பறைகள், 4 ஆடிட்டோரியம், பல்வேறு விளையாட்டுத் திடல்கள், அனைத்து வசதிகளும் கூடிய மாணவர் விடுதி போன்ற எண்ணற்ற கட்டுமான வசதிகளைக் கொண்டது வேல்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.

100% இலவச கல்லூரிப் படிப்பு! வி-சாட் எக்ஸாம் எழுதுங்க.

*AICTE அங்கீகாரம் பெற்றுள்ள வேல்ஸ், சிறந்த பொறியியல் கல்லூரிக்கான பட்டியலில் தமிழக அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள்‌ இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.‌ NAAC அமைப்பின் 'ஏ' கிரேடு அந்தஸ்து மற்றும் NBA அமைப்பின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது வேல்ஸ்.

*மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாது பலவிதமான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கும் வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் 85% மாணவர்கள் வளாகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

100% இலவச கல்லூரிப் படிப்பு! வி-சாட் எக்ஸாம் எழுதுங்க.

வி சாட் (V-Sat) தேர்வு எப்போது?

ஜூலை 2 முதல் 7ஆம் தேதி வரை வி சாட் ஆன்லைன் தேர்வு நடைபெறவுள்ளது.

45 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும் இந்தத் தேர்வில் மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் கேள்விகள் இடம்பெறும்.

இத்தேர்வில் சிறப்பான இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் மதிப்பெண்ணின் அடிப்படையில் 100%, 75%, 50%, 25% மற்றும் 10% டியூஷன் ஃபீஸ் கட்டணமில்லாமல் படிக்கலாம். இச்சலுகை பட்டப்படிப்பை முடிக்கும் வரை அனைத்து ஆண்டுகளுக்கும் உரியது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள்.

எப்படிக் கலந்துகொள்வது?

மாணவர்கள் ஜூன் 30க்குள் https://vsat.velsuniv.ac.in/ என்ற இணைய முகவரியில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்கள் ஜூலை 2 முதல் ஜூலை 7 ஆம் தேதிக்குள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் அவர்களுக்கு வசதியான நேரத்தில், 45 நிமிடங்களைத் தேர்வு செய்துகொண்டு தேர்வினை எழுதலாம்.

முன் பதிவு செய்ய: https://vsat.velsuniv.ac.in/

மேலும் தகவல்களுக்கு: 95661 66777

அடுத்த கட்டுரைக்கு