Election bannerElection banner
Published:Updated:

யார் S. கதிரவன்? திமுக-வுக்கு வலுக்கும் ஆதரவு! #மண்ணச்சநல்லூர்தொகுதி

S. கதிரவன்
S. கதிரவன்

திருச்சியின் கல்விச் சூழலுக்கு ஓர் அடையாளமாக விளங்குவது தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது மண்ணச்சநல்லூர். கிட்டத்தட்ட 2.5 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் (ஏறக்குறைய 8000+)... கடந்த தேர்தலில் அதிமுக இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றது, ஆனால்...

2011, 2016 - டிமிக்கி கொடுத்த ஆளும் கட்சி, கொதித்துக் கிளம்பும் மக்கள்...

2008-ஆம் ஆண்டு, தனித்த சட்டப் பேரவைத் தொகுதியாக மண்ணச்சநல்லூர் அறிவிக்கப்பட்டபின், 2011-ஆம் ஆண்டில் முதன்முறையாக மாநிலத் தேர்தலைச் சந்தித்தது. சரியாக 10 வருடங்களுக்கு முன் மண்ணச்சநல்லூர் மக்கள் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

* தொகுதியின் தலைநகர் மண்ணச்சநல்லூரில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.

* மண்ணச்சநல்லூரில் அரிசி அரைவை ஆலைகள் அதிகம் உள்ளன, ஆனாலும் அவற்றுக்கு மும்முனை மின்சாரம் சரியாகக் கிடைப்பதில்லை, அதற்குத் தீர்வு காண்பதோடு, மண்ணச்சநல்லூரில் 110 கிலோவோல்ட் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* மண்ணச்சநல்லூரில் அரசு கலைக்கல்லூரி துவங்கவேண்டும்.

* தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

* கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை, தேவைப்படும் இடங்களில் போர்வெல் அமைத்து குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.

* முக்கொம்பு மேலணையில் இருந்து வடக்கில் 3 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் வரை சித்தாம்பூர், சோழிங்கநல்லூர், கோமங்கலம், நெய்வேலி, திருத்தியமலை, பேரூர், திருத்தலையூர் ஏரிகள் உள்ளன, அவற்றுக்கான நீராதாரங்களைச் சரி செய்து, இந்த ஏரிகளுக்குத் தண்ணீர் நிரப்புவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மண்ணச்சநல்லூர், சமயபுரம் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள் முழுமை பெறவில்லை, அதற்குத் தீர்வு காணவேண்டும்.

* செயற்கை வைரம் பட்டைத் தீட்டும் தொழில் இந்தப் பகுதியில் மிகப் பிரசித்தி. ஆனால் இப்போது நலிவடைந்துவிட்டது. இதனை மேம்படுத்த வேண்டும்.

S. கதிரவன்
S. கதிரவன்

பத்தாண்டுகள் ஓடிவிட்டன, இரண்டுமுறை அதிமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துவிட்டது. ஆனால் மேற்கண்ட கோரிக்கைகள் எதுவும் இன்றும் நிறைவேற்றப்படவில்லை என்று மக்கள் கொந்தளிக்கின்றனர். தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ கொரோனா காலத்தில் எந்தவித ஆக்கப்பூர்வமான நிவாரண நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் மண்ணச்சநல்லூர் மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

2011-தேர்தலில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் மண்ணச்சநல்லூரில் பதிவு செய்யப்பட்டன. அப்போது திமுக-வை விட, அதிமுக 12.26% வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றது. 2016-தேர்தலில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வாக்குகள் பதிவானது, இதில் அதிமுக வேட்பாளருக்கும் இரண்டாம் இடம் பிடித்த திமுக வேட்பாளருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 4% மட்டுமே. இதிலிருந்து தொகுதி மக்களின் ஆளும்கட்சி மீதான அதிருப்தி தெளிவாக தெரிகிறது.

எஸ்.கதிரவன், புதிய தலைவராக வர வேண்டும்!

திருச்சியின் கல்விச் சூழலுக்கு ஓர் அடையாளமாக விளங்குவது தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம். இதன் துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார் எஸ். கதிரவன். இவரின் தலைமையில் இக்குழுமம் கடந்த பத்தாண்டுகளில் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் செய்துள்ள சமுதாயப் பணிகள் ஏராளம். திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதியில் நன்கு பரிச்சயப்பட்ட, மண்ணச்சநல்லூர் பெரகம்பி பகுதியைப் பூர்விகமாகக்கொண்ட எஸ்.கதிரவனை இம்முறை வேட்பாளராக அறிவித்துள்ளது தி.மு.க தலைமை.

இன்ஜினியரிங் பட்டதாரியான கதிரவன், தங்கள் குழுமத்தின் சமூகப் பணிகளை முன்னின்று நடத்தி வருகிறார். அவர்களின் சில பணிகள்...

* மண்ணச்சநல்லூர் பெண்கள் அரசுப் பள்ளிக்கு 11.50 லட்சம் செலவில் நூலகம் மற்றும் கம்ப்யூட்டர் லேப் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

* தனலட்சுமி சீனிவாசன் குழுமக் கல்லூரிகளில் நடைபெறும் மெரிட் அசெஸ்மென்ட் டெஸ்ட்டில் தேர்ச்சி பெறும் (DMAT Exam) மெரிட் மாணவர்களுக்கு இலவசக் கல்வி உட்பட அனைத்து வசதிகளும் தரப்படுகின்றன.

* அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பிரெட் என்று பெரம்பலூர் பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குக் கொரோனா கால நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

* கஜா புயல் நிவாரணமாக தமிழக அரசுக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளது இவரின் கல்விக் குழுமம். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.50-லட்சத்துக்கும் மேற்பட்ட நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

* தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறைவான கட்டணத்தில் வழங்கப்படும் சிறப்பான இருதய அறுவை சிகிச்சையைப் பெற உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, இராமநாதபுரம், நாகர்கோயில் போன்ற மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இங்கு வருகின்றனர்.

* தங்களின் சொந்த நிதியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை 40 ஜெ.சி.பி இயந்திரங்கள் வைத்து தூர் வாரி இருக்கிறார். நடுவண் அரசின் 'ஜல் சக்தி அபியான்' அமைப்பு இதனைப் பாராட்டி பெரம்பலூர் மாவட்டதிற்கு சிறந்த நீர் மேலாண்மைக்கான விருதை வழங்கியுள்ளது.

* ஏழை மக்கள் வீடு கட்டிக்கொள்ள 2 சென்ட் இலவச பட்டா நிலம் வழங்கியது, துறையூர் - பெரம்பலூர் சாலையில் 25000 மரக்கன்றுகள் நட்டது, டெங்கு விழிப்புணர்வு என்று தினந்தோறும் ஏதாவதொரு சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறது எஸ்.கதிரவன் துணைத்தலைவராக உள்ள தனலட்சுமி சீனிவாசன் குழுமம்...

ஆட்சியில் இல்லாதபோது இவ்வளவு நல்லது செய்ய முடிந்தால், ஆட்சிப் பொறுப்பு வழங்கினால், நிறைவேறாத திட்டங்கள் அனைத்தும் எஸ்.கதிரவன் மூலம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு நிச்சயம் வந்து சேரும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் தொகுதி மக்கள்.

'மண்ணச்சநல்லூருக்கு இவை அனைத்தும் கிடைக்கும்' - எஸ். கதிரவன்

"அரிசி அரவை ஆலைகளுக்கு மும்முனை மின்சாரம். பேருந்து நிலையம், தொகுதியைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி, அரசுக் கல்லூரி, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள், சாலை வசதி, பாதாளச் சாக்கடைத் திட்டம், தேவைப்படும் கிராமங்கள் தோறும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், நெல் கொள்முதல் நிலையங்கள், சமயபுரம் கோவில் செல்லும் பாதசாரிகளுக்குத் தனி வழி, சமயபுரம் கோவிலைச் சுற்றியுள்ள சுகாதாரச் சீர்கேடு நிறைந்த பகுதிகளைத் தூய்மைப்படுத்தல், என்று 22 அம்ச அறிக்கையை, அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று திட்ட ஆலோசனை நடத்திய பின்னர் வெளியிட்டுள்ளோம்." என்கிறார் திமுக வேட்பாளர் எஸ். கதிரவன்.

"ஆளும் கட்சி வாஷிங் மெஷின் இலவசம் என்கிறது. முதலில் எங்கள் தொகுதிக்கு வந்து பாருங்கள், எங்கள் தொகுதி மக்களுக்குத் தேவை நல்ல குடிநீர் வசதி. தண்ணீர் இல்லாமல் வாஷிங் மெஷின் எதற்கு என்று மக்களே சிரிக்கிறார்கள். ஏரிகளைத் தூர்வாரி தண்ணீரைச் சேமிக்கும் பணிகள் செய்த அனுபவம் எங்களுக்கு உண்டு. கிராமங்கள் வாரியாக இதைச் சாத்தியப்படுத்துவது எப்படி என்பதைத் திட்டமிட்டுள்ளோம். ஆட்சிக்கு வந்தால் அவற்றைச் செவ்வனே செய்து முடிப்போம். மேலும், எங்கள் குழும மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்காக இலவச மருத்துவம் வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம்" என்கிறார் கதிரவன்.

மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தில் மட்டுமே அரசியலுக்கு வந்ததாகவும், சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை என்று கூறும் கதிரவன், மண்ணச்சநல்லூர் தொகுதியின் மேம்பாட்டிற்காக மூழுவீச்சுடன் செயல்படுவதாக உறுதி அளிக்கிறார். தொகுதிக்குத் தேவையான விஷயங்களை எல்லாம் பட்டியலிட்டு வெளியிடப்பட்டுள்ள திமுகவின் தெளிவான அறிக்கையும், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தி.மு.க வேட்பாளர் எஸ். கதிரவனின் உதவும் மனப்பான்மை, எளிமை போன்ற குணங்களும் அவருக்கு மக்களின் செல்வாக்கை அதிகப்படுத்தியுள்ளன. இத்தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் வெற்றி பெறுவதில் திமுகவுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு