Published:Updated:

நன்மதிப்பே நம்மை உயர்த்தும்!

Sponsored content
நன்மதிப்பே நம்மை உயர்த்தும்!
நன்மதிப்பே நம்மை உயர்த்தும்!

ஏழ்மை, கடின உழைப்பு, வளர்ச்சி... இவ்வாறு வாழ்வில் மதிப்பிற்குரிய நிலைக்கு வரவேண்டும் என்பதே பலரின் குறிக்கோள், இதற்குத்தான் பல போராட்டங்களைச் சந்திக்கிறோம். அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொண்டு தற்போது நிப்பான் பெயின்ட் நிறுவனத்தால் வளர்ச்சியை எட்டிப்பிடித்திருக்கும் அந்தியூரின் (ஈரோடு மாவட்டம்) வாசு & கோ நிறுவனத்தின் தலைவர் ஜி. வாசுதேவன், நிப்பான் பெயின்ட்டுடனான தனது பயணத்தை விவரிக்கிறார். 

இது நிப்பான் பெயின்ட் டீலர்கள் தங்களின் வெற்றிக்கதைகளைப் பகிர்ந்துகொள்ளும் தொகுப்பு... 

நன்மதிப்பே நம்மை உயர்த்தும்!

தந்தையின் கடின உழைப்பு...

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், எங்கள் தந்தையின் கடின உழைப்பைப் பார்த்து வளர்ந்தவன். தையல் வேலையில் காஜா எடுக்கத் தொடங்கியவர், அங்கிருந்து தையல் கடையை ஆரம்பித்தார். இரவு-பகல் பார்க்காமல் உழைத்தவர், தனது தொழிலை தையல் மற்றும் துணிக் கடையாக உயர்த்தினார். பகல் முழுவதும் துணி கடையைப் பார்த்துக்கொள்வார். இரவில் தையல் வேலையைப் பார்ப்பார். இப்படி அவரின் கடின உழைப்பினால் தொழில் வளர்ந்து, குடும்பமும் நல்ல நிலைமையை எட்டியது. 'வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது முக்கியமில்லை, நல்ல பெயரைச் சம்பாதிக்க வேண்டும்' என்று தந்தை அடிக்கடி சொல்வார்.

அண்ணன் மருந்துக் கடை வைத்திருந்ததால் எனக்கும் அதன்மேல் அதீத ஆர்வம் இருந்தது. அதற்காகவே அந்தத்துறைப் படிப்பையே தேர்வு செய்தேன். படித்து முடித்ததும் நானும் மருந்துக் கடை ஆரம்பிப்பதையே லட்சியமாகக்கொண்டிருந்தேன். அந்தச் சமயம், அண்ணனும் அவரது நண்பரும் சேர்ந்து ஹார்ட்வேர் கடையொன்றை ஆரம்பித்தனர். நான் தொழில் தொடங்க இருந்த இடைவெளியில் ஹார்ட்வேர் கடையில் வேலைப்பார்த்ததால், அதன்மீது ஈடுபாடு பெருகியது. எனக்குத் திருமணமான சில மாதங்களில் தொழில் தொடங்க தந்தை பணம் கொடுத்தார். அப்பணத்தை சொந்த செலவிற்காக அல்லாமல் கடையின் செலவிற்காக மட்டுமே பயன்படுத்தினோம்.

நன்மதிப்பே நம்மை உயர்த்தும்!

வாசு & கோ திறக்கப்பட்டது, ஸ்டீல், சிமெண்ட், எலெக்ட்ரிக் பொருள்கள், பெயின்ட் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தோம். தந்தை, தாயார் சொன்னதை மனதில் கொண்டே இதுவரை தொழில் நடத்தி வருகிறேன். அதனாலயே இதுவரை மக்களிடம் நன்மதிப்பை சம்பாதித்து வைத்துள்ளேன். தொழில் ஆரம்பித்து நல்ல நிலையை அடைந்தபின் தந்தையிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டேன். மிகவும் எளிமையாக ஆரம்பிக்கபபட்ட கடையை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை விரிவுபடுத்துவது என் வழக்கம். இப்படி எங்கள் தொழில் சென்றுகொண்டிருக்கையில்தான் நிப்பான் பெயின்ட் நிறுவனத்துடனான அறிமுகம் ஏற்பட்டது.

நிப்பானுடனான புது அனுபவம்!

வெளிநாட்டுத் தயாரிப்பான நிப்பான் பெயின்ட்டை வாங்கி விற்பதற்கு முதலில் தயக்கம் இருந்ததால், அந்த வாய்ப்பை உடனே பெற்றுக்கொள்ளவில்லை. சில தினங்கள் எடுத்து நன்றாக யோசித்த பிறகே, நிப்பானுடன் கைக்கோத்தோம். இப்போது மிகவும் திருப்திகரமாக நிப்பானின் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறோம். 

எங்களை நம்பி வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கிச் செல்வதால், எப்போதும் எந்தவொரு பெயின்ட் பிராண்டையும் நாங்கள் முதலில் எங்கள் இல்லத்தில் அடித்து பரிசோதித்துக்கொள்வோம். நிப்பானின் தயாரிப்புகளில் எங்களுக்கு மிகவும் பிடித்தது Spotless Nxt. எங்களது வீட்டிற்கு இதனை அடித்து ஐந்து வருடங்களாகிறது. இன்னும் புதுப்பொலிவுடன் இருக்கிறது. தண்ணீர், கிரீஸ், மை, இங்க், குழந்தைகளின் கிறுக்கல் என எதுபட்டாலும் சுவரை எளிதில் சுத்தம் செய்துவிட முடியும். தவிர, நிப்பான் பெயின்ட் தயாரிப்பில் இருக்கும் வாட்டர்போர்ன் சிஸ்டம் குறைந்த வி.ஓ.சி-யைக் கொண்டதால் மூச்சுப் பிரச்னை இருப்பவர்களுக்கு பாதிப்பைக் கொடுப்பதில்லை. எங்கள் பகுதியில் இருக்கும் மருத்துவர்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதன்படி மருத்துவர்களும் மூச்சுப் பிரச்னை இருக்கும் நோயாளிகளின் படுக்கை அறையில் நிப்பான் பெயின்ட்டை உபயோகப்படுத்த பரிந்துரைக்கின்றனர். 

குழந்தைகளுக்கான நிப்பான் பெயின்ட் பெரியளவில் பிரபலமடைந்துள்ளது. பெரும்பாலும் எங்களின் வாடிக்கையாளர்கள் பெண்கள்தான். பத்து வருடங்களாவது நிலைத்து நிற்கக்கூடிய பிராண்டையே இவர்கள் கேட்பதுண்டு. அவர்களுக்கு நிப்பான் பெயின்ட்டினை பரிந்துரைக்கிறோம். அவர்களுடன் குழந்தைகள் வந்தால், நிப்பானின் பிளாபி பொம்மையைக் கேட்டுவாங்கிச் செல்கின்றனர். பிளாபி என்றால் நிப்பான் பெயின்ட் என்றாகிவிட்டது. இதன் மூலம் நிப்பான் பெயின்ட்டின் தயாரிப்பைப் பற்றியும் அவர்கள் அறிந்துகொள்கின்றனர். 

நிப்பானின் ஊக்கம்

நிப்பானின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் கேட்டு வாங்குகின்றனர். அந்த அளவிற்கு மற்ற நிறுவனங்களிடம் இருந்து நிப்பான் பெயின்ட் முற்றிலும் தனித்து நிற்கிறது. நிப்பானைக் கையிலெடுத்த முதல் ஆறு மாதங்கள் சிரமம் இருந்தது உண்மைதான். ஆனால் நிப்பான் பெயின்ட் நிறுவனம் கொடுத்த ஆதரவினாலும், ஊக்கத்தினாலும் இவ்வளர்ச்சியைப் பெற முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் பெயின்ட்டர், நுகர்வோர்களுக்கான சந்திப்பை நிப்பான் பெயின்ட் ஏற்படுத்தித் தருகிறது. இது மட்டுமல்லாமல் தொழிலில் சாதிப்பவர்களுக்கு நிப்பான் பெயின்ட் விருதளித்து கௌரவிக்கிறது. அவ்விருதுகளை வழங்க எங்களைப் பல வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறது. இதெல்லாம் எங்களுக்குப் புது அனுபவம். சிறந்த நண்பர்களாகவும், குடும்பமாகவும் நிப்பானுடன் பணியாற்றி வருகிறோம்.

நிப்பானின் ஆதரவு எவ்வாறு எங்களுக்கு இருக்கிறதோ, அதேபோன்ற ஆதரவை எங்களது ஊழியர்களுக்கும் தருகிறோம். அடிமட்டத்தில் இருந்து வளரும் கஷ்டம் எங்களுக்கும் தெரியும் என்பதால், அவர்களை எங்களுள் ஒருவராகவே பார்ப்போம். அதனால் எங்களுடன் சேர்ந்து அவர்களும் வளர உதவி வருகிறோம். பல ஆண்டுகளாக அவர்களுடனான உறவு தொடர்ந்து வருகிறது. எங்கள் நிறுவனத்தின் மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் ஊழியர்களுக்கு பல உதவிகளைச் செய்துவருகிறோம். அறக்கட்டளை வாயிலாக குழந்தைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவிகள் செய்யப்படுகின்றது. மொத்தத்தில் நிப்பான் பெயின்ட்டுடனான உறவு அனைத்துவகையிலும் எங்களுக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது!