Published:Updated:

"தரமே குறிக்கோள்!" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN

Sponsored content

"பெரும்பாலும் நம் ஊரில், ஆண்களே கைக்கடிகாரம் அணிவதைப் பெரிதும் விரும்புகின்றனர். அணிகலன்களில் அதிகம் ஆர்வம் காட்டாத ஆண்களும் விதவிதமான கடிகாரத்தை கலெக்ட் செய்வதில் மும்முரம் காட்டுகின்றனர்

"தரமே குறிக்கோள்!" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN
"தரமே குறிக்கோள்!" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN

பதினேழாம் நூற்றாண்டு... பாக்கெட் கடிகாரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலம். நம்மிடம் ஒன்று இருந்தால் பந்தா காட்டிக்கொள்ள ஏதுவாக இருந்திருக்கும். பெரும்பாலும் இந்தப் பாக்கெட் கடிகாரங்கள், செல்லப்பிராணி போல ஒரு செயின் இணைக்கப்பட்டு கோட் பைகளில் வைத்துக்கொள்ளப்படும். இப்போதுள்ள கைக்கடிகாரங்கள் போல இஷ்டத்துக்கு வெளியில் எடுத்தால் கஷ்டந்தான். எனவே, அவற்றைப் பாதுகாக்கக் கோட் பைக்குள் வைத்துப் பத்திரப்படுத்தினர் அக்காலத்தைய ஐரோப்பியர்கள்.

"தரமே குறிக்கோள்!" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN

அப்படியே காலவெள்ளத்தில் நீந்தி, 19ஆம் நூற்றாண்டில் கரையேறினால் ரிஸ்ட் வாட்ச் (அ) கைக்கடிகாரங்கள் இராணுவ வீரர்களின் முக்கிய பயன்படு பொருளாக ஆகியிருந்தன. போர் நேரங்களில் தாக்குதல்களை சரியாக நிகழ்த்திடக் காலக் கட்சிதம் அவசியம், எனவே பாக்கெட்டில் வைக்கும் கடிகாரத்துக்குப் பதில் தொழில்நுட்பத்தில் உயர்ந்த கைக்கடிகாரங்கள் பேருதவியாய் இருந்தன. முதலாம் உலகப் போர், வாட்ச்சுகளின் தேவையை அதிகப்படுத்தியது, இயல்பு வாழ்க்கையில் அதுவரை பெண்களுக்கான அணிகலனாக இருந்துவந்த வாட்ச், அனைவரின் அன்றாடத் தேவையாக பரிணமித்தது.

மின்சார வாட்ச், குவார்ட்ஸ் வாட்ச்...

1950க்கு மேல் பாட்டரி செல்களால் இயங்கும் மின்சார வாட்ச் மற்றும் குவார்ட்ஸ் படிகக்கல் (Quartz Crystal) பயன்படுத்தி செய்யப்பட்ட வாட்ச்சுகள், நொடிகளின் துல்லியத்தில் வரலாற்று மைல்கற்கள்! இந்தப் புரட்சிக்குப் பின், சாமானியரும் கைக் கடிகாரம் கட்டலாம் என்கிற நல்ல காலம் பிறந்தது. இன்று சந்தையைக் கவர்வன, இன்டர்நெட் வசதிகொண்டு புத்திசாலியாக செயல்படும் ஸ்மார்ட் வாட்ச்சுகள். இருந்தாலும் ஒருகாலத்தில் தினசரித் தேவையாக இருந்த கடிகாரம், செல் போன்களின் வருகைக்குப் பிறகு இன்று விருப்பப்பட்டு வாங்கி அணிபவர்களுக்கு ஒரு அணிகலனாக மட்டுமே திகழ்கிறது. 

"தரமே குறிக்கோள்!" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN

இந்தியர்களின் வாட்ச் விருப்பம்...

"பெரும்பாலும் நம் ஊரில், ஆண்களே கைக்கடிகாரம் அணிவதைப் பெரிதும் விரும்புகின்றனர். அணிகலன்களில் அதிகம் ஆர்வம் காட்டாத ஆண்களும் விதவிதமான கடிகாரத்தை கலெக்ட் செய்வதில் மும்முரம் காட்டுகின்றனர். பெண்களில் வெகு சிலரே பிரத்யேகமாக வாட்ச் அணிவதை விரும்புகின்றனர்" என்கிறார் லென்கோ வாட்ச்சஸ் - Lenco Watches நிறுவனத்தின் இணை உரிமையாளர் விஜயானந்த். தந்தை லாலராம்'ற்கு இருந்த கைக்கடிகாரங்கள் மீதான அதீத ஆர்வமும் அறிவும், அவரின் பிள்ளைகளும் வாட்ச் துறையைத் தேர்ந்தெடுக்க ஊக்கமளித்துள்ளது.

"Lenco Watches" - இரண்டாம் தலைமுறை வாட்ச்மேக்கர்ஸ்

"வாட்ச் வடிவமைப்பது என்பது ஒரு கலை, அதற்கு மிகுந்த கவனமும், திறமையும், கற்பனைத் திறனும் அவசியம். இதைக் காலம்காலமாக சுவிட்சர்லாந்து மக்கள் அறிந்துவைத்துள்ளனர், அதனால்தான் சுவிஸ் கம்பெனி வாட்ச்சுகள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன. அதற்கு அடுத்தபடி ஜப்பானிய தொழில்நுட்பம் குறைந்த விலையில் மிகத் தரமான வாட்ச்சுகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியது, புதுமையான வாட்ச்சுகளைச் செய்வதில் ஜப்பானியர்களுக்கு ஈடு இணை கிடையாது"  என்கின்றனர் இரண்டாம் தலைமுறை வாட்ச் தயரிப்பாளர்களான லென்கோ வாட்ச்சஸ்.

தமிழகத்தில் மிக எளிமையாக செயலாற்றிவரும் லென்கோ வாட்ச்சுகளின் கனவோ மிகப்பெரியது. தரம் மட்டுமே லென்கொவின் முக்கியக் குறிக்கோளாக இருக்கிறது. வியாபார ரீதியாக இருக்கும் பலவகை சவால்களைத் தாண்டி தரமான நீடித்து நிலைத்து நிற்கும், புதுமையான வாட்ச்சுகளைத் தயாரிப்பதிலேயே லென்கோ வாட்ச்சஸ் கவனம் செலுத்திவருகிறது. லென்கொவின் வித்தியாசமான தயாரிப்பான ஐந்து முள் கொண்ட, லிமிட்டட் ப்ரீமியம் எடிஷன் 'வாரியர்' கடிகாரம் இவர்களின் புதுமைக்கும் தரத்துக்கும் ஒரு சான்று.

"தரமே குறிக்கோள்!" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN

வாட்ச்சினிலே வரும் வாசம்!

மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு புதுமையான மாடல்களை அறிமுகப்படுத்திவரும் லென்கோவின் புதிய வெளியீடு மகளிர்க்கான 'ஒலோரா'. நமக்கு வேண்டியபோது வாசனைத் திரவியம் அடங்கிய இந்த லென்கோ வாட்ச்சைத் திறந்து, ஒரு துளி வாசனைத் திரவியத்தை நம் மேல் இட்டுக்கொண்டு ஸ்பாட் ரெஃப்ரெஷ் செய்துகொள்ளலாம். பெண்களுக்கு இது நிச்சயம் ஆர்வம் தருவதாக இருக்கும். இவற்றைத் தவிர எக்ஸாட்டிக், ரெயின்போ, காலிஸ்டா, நபிலா, அவாந்தே, ஒக்கசானா, கான்வா, வைல்டு என ஒவ்வொருவரின் விருப்பத்துக்கு ஏற்ற சிறந்த டிசைன்களில் பலதரப்பட்ட கலெக்ஷன்ஸைக் கொண்டுள்ளது லென்கோ. 

"குழந்தைகளின் வாட்ச்களைப் பொறுத்தவரை ஏதோவொன்றை வாங்கி அவர்களுக்கு அணிவிக்கிறோம், பிராண்டைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. ஆனால் வாட்ச்சிலேயே பொழுதுபோக்கு மற்றும் யோசிக்கும் திறனைத் தூண்டும் லெகோ வாட்ச், ஃபுட் பால் வாட்ச், சித்திரங்கள் நிறைந்த கடிகாரம் எனப் பல புதுமையான ஐடியாக்களை விரைவில் கொண்டுவரவுள்ளது லென்கோ. தேசிய அளவில் மிகத் தரமான வாட்ச் கம்பெனி எனப் பெயர் எடுப்பதே எங்கள் குறிக்கோள்!" எனக் கூறுகிறார் தீவிர வாட்ச் ஆர்வலரான விஜயானந்த்.

லென்கோ வாட்ச்சுகளை வாங்க விருப்பமா? விகடன் வாசகர்களுக்கு பிரத்தியேக சலுகையாக 25% தள்ளுபடியை வழங்குகிறது லென்கோ வாட்ச்சஸ்! கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து சலுகைக் கூப்பனை SMS மூலம் பெறுங்கள்! லென்கோ வாட்ச்சஸ், டிக்ஸ் ஃபாரெவர்!