Published:Updated:

மோடி `லாஜிக்' முதல் சீமான் `சீற்றம்' வரை! #VikatanTop10

விகடன் டீம்
மோடி `லாஜிக்' முதல் சீமான் `சீற்றம்' வரை! #VikatanTop10
மோடி `லாஜிக்' முதல் சீமான் `சீற்றம்' வரை! #VikatanTop10
மோடி `லாஜிக்' முதல் சீமான் `சீற்றம்' வரை! #VikatanTop10

> "ஊடகங்களால்தான் பா.ஜ.க தேர்தலில் வென்றது என்று சொல்கிறார்கள். அதுபோன்ற கருத்தை முன்வைப்பவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? ஊடகங்கள் விற்பனைக்கு என்றா? அதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா?" என்றும், ``காங்கிரஸ் கட்சியில் இருக்கும் என் நண்பர்களுக்கு எங்கள் வெற்றியை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அதேபோல், தோல்வியையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்றும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி காட்டியிருக்கும் ஆவேசம் > 'இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா?!' - மாநிலங்களவையில் வெடித்த மோடி > முழுமையான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க

மோடி `லாஜிக்' முதல் சீமான் `சீற்றம்' வரை! #VikatanTop10

> அ.ம.மு.க-வில் அனல் பறக்கும் நிலையில், தங்க தமிழ்ச்செல்வனிடம் செந்தில் பாலாஜி பேசிகொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. செந்தில் பாலாஜியிடம் தங்கம், ``நீங்க தி.மு.க போனப்பவே, நானும் தி.மு.க-வுக்கு வந்திருக்கணும். இந்நேரம் நானும் உங்களைப்போல மாவட்டச் செயலாளராகவும், ஆண்டிபட்டி அல்லது பெரியகுளம் எம்.எல்.ஏ-வாகவும் ஆகியிருப்பேன்" என்று புலம்பியதாக றெக்கை கட்டும் அதிரிபுதிரி தகவல்கள்: `உங்களோடு அப்பவே வந்திருக்கணும்!' - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்? > முழுமையான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க 

மோடி `லாஜிக்' முதல் சீமான் `சீற்றம்' வரை! #VikatanTop10

> `ஜெய் ஶ்ரீராம்' என்னும் கடவுளின் மந்திரம், அண்மைக்காலமாக வன்முறைச் சம்வங்களுக்கு வித்திடுகிறதா என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. ஜெய் ஶ்ரீராம் என்பது சொல்லத்தகாத கோஷம் அல்ல. ஆனால், ஒருவர் இஸ்லாமியர் என்று தெரிந்தும், அவர் அதைச் சொல்லியே ஆக வேண்டுமென அவரைக் கட்டாயப்படுத்தி, ஓடஓட விரட்டியடிக்கும் அளவுக்கும், ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடும் அளவுக்கும், உயிர்போகும்வரை அடித்துத் துன்புறுத்தும் அளவுக்கும் வெறி அந்தக் கும்பலிடம் எங்கிருந்து வருகிறது? அதை யார் ஊட்டுகிறார்கள்? - சில பல கேள்விகளுடன் பின்புலத்தை ஆழமாக நோக்கும் கட்டுரை > 'ஜெய் ஶ்ரீராம்' மந்திரமும் மூன்று சம்பவங்களும்... கடவுளின் பெயரால் நிகழும் வன்முறைகள்! - முழுமையான கட்டுரைக்கு க்ளிக் செய்க 

மோடி `லாஜிக்' முதல் சீமான் `சீற்றம்' வரை! #VikatanTop10

> சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தின் அருகே குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபர் நவீன், போலீஸாரிடம் ரகளையில் ஈடுபட்டார். தற்போது அவர், கைமுறிந்து கட்டுப்போட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. நவீன் மதுபோதையில் போலீஸாரிடம் தகராறில் ஈடுபடும் வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் போலீஸாரை நவீன் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. தற்போது நவீனின் கை முறிந்ததின் பின்னணி குறித்து விசாரித்தபோது வெளியான திடுக்கிடும் தகவல்கள் > போலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்! > முழுமையான செய்திக்கு க்ளிக் செய்க 

மோடி `லாஜிக்' முதல் சீமான் `சீற்றம்' வரை! #VikatanTop10

> பென்ஞ்சைத் தேய்த்தது யார் அல்லது தேய்ப்பது யார் என்கிற விவாதங்களுக்குள் நுழைய விரும்பவில்லை. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணியில் தோனி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது விவாதிக்கப்படவேண்டிய, விமர்சிக்கப்படவேண்டிய ஒன்று. தோனியின் பேட்டிங் ஸ்டைலை சச்சின் விமர்சிப்பதற்கு முன்பாக, 2018-ம் ஆண்டே செளரவ் கங்குலி விமர்சித்திருக்கிறார். தோனி குறித்த விரிவான விமர்சனப் பார்வை > மிஸ் பண்ணுவோம்தான்... ஆனால் லெஜண்டாகவே ஓய்வு பெறுங்கள் தோனி!  முழுமையான செய்திக்கு க்ளிக் செய்க...

மோடி `லாஜிக்' முதல் சீமான் `சீற்றம்' வரை! #VikatanTop10

> ``வீட்டில் உள்ள குழந்தைகள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தாமல் வீணாக்கினால் பெரியவர்களுக்குக் கோபமும் ஆத்திரமும் ஏற்படும். இந்தத் திடீர் மாற்றம் குழந்தைகளுக்குப் புரியாது. பெரியவர்கள் சூழலுக்கு ஏற்ப உடனடியாக மாறிக்கொள்வதைப்போல, குழந்தைகளால் மாறமுடியாது. அதுவே பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். " - தண்ணீர்ப் பிரச்னையால் சாமானிய மக்களுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள் குறித்த சிறப்புப் பார்வை > தண்ணீர்த் தட்டுப்பாட்டால் உளவியல் சிக்கலில் மக்கள்... தீர்வு என்ன? - முழுமையான கட்டுரைக்கு க்ளிக் செய்க 

மோடி `லாஜிக்' முதல் சீமான் `சீற்றம்' வரை! #VikatanTop10

> ``எல்லோருக்கும் வேண்டிய பொருள்களை உற்பத்திசெய்து கொடுக்கும் உழைக்கும் வர்க்கம் பட்டினி கிடக்கிறது. இங்கிலாந்து வெள்ளைக்காரர்கள் செய்த சூழ்ச்சியையும், இந்தியக் கொள்ளைக்காரர்கள் செய்துவரும் தந்திரத்தையும் முழுவதும் உணர்ந்த நாயகன்தான் பக்கிரி என்னும் விஜய்சேதுபதி. விவசாயிகள் சங்கத் தலைவராக நடித்திருக்கிறார். சமூக நீதிக்காகப் போராடும் ஆக்‌ஷன்  ஹீரோவாக நடிப்பதால் இந்தப் படத்துக்கென்று உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளக் கடும்பயிற்சி செய்து வருகிறார்." - `லாபம்'படம் குறித்து இயக்குநர் ஜனநாதன் பகிரும் எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் > சமூக நீதிக்காக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ! - முழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க

மோடி `லாஜிக்' முதல் சீமான் `சீற்றம்' வரை! #VikatanTop10

> ``நாதியற்ற இனமாக, சகித்துக்கொள்ள முடியாத இனமாக, இனியும் தமிழினம் இருக்காது. தமிழகத்தில் இருக்கும் திராவிட அரசியல் கட்சிகள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். என் இனம், என் மொழி எனச் சொல்லும் தைரியம் இன்றைக்கு அரசியல் நடத்தும் திராவிடத் தலைவர்கள் யாருக்காவது இருக்கிறதா? `தமிழர் இனம்' எனப் பேசி அரசியல் நடத்தும் திராவிடக் கட்சித் தலைவர்களுக்கு பெரியாரின் பெயர் ஒரு முகமூடியாகத் தேவைப்படுகிறது. அதனால்தான், எங்கள் கட்சியின் கொள்கை விளக்க ஆவணத்தை வைத்து இப்படி ஆளாளுக்கு அரசியல் கொடி பிடிக்கிறார்கள்'' - சீற்றம் குறையாமல் தொடங்குகிறார் சீமான். இது இப்போது அல்ல... எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் > ஆமாம், நான் இனத் துரோகிதான்! - சீற்றம் குறையாத சீமான் > விகடன் ஃப்ளாஷ்பேக்: முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க 

> சாவு பழகிடுச்சு | சாதாரண மனிதர்களின் அசாதாரண பின்புலம் | ரயிலில் அடிபட்ட உடல்களைச் சேகரிக்கும் ஓர் எளிய தொழிலாளியின் கதை!

> ஃபேஸ்புக் ஹிட் > சென்னையில் செம மழை! - போட்டோ கேலரி