Published:Updated:

கேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்... பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்!

ம.காசி விஸ்வநாதன்
கேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்... பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்!
கேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்... பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்!

கிர்கிஸ்தானில் சமீபத்தில் நடந்த SCO மாநாட்டில் நெறிமுறைகளை மீறி மோடி உட்பட அனைத்துத் தலைவர்களும் மாநாட்டை நடத்தும் நாட்டின் தலைவருக்கு மரியாதையைச் செலுத்தும்வகையில் நின்றுகொண்டிருக்கும்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மட்டும் உட்கார்ந்துவிட்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்குமுன் பெரிதாக சர்வதேச மாநாடுகளில் பங்குபெறாத இம்ரான் மீது இருந்த நெட்டிசன்களின் பார்வை இப்போது இன்னொரு கலகல நிகழ்வின் பக்கம் திரும்பியிருக்கிறது. ஷாக்காட் யூசப்சாய் என்னும் அமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பை அவர் சார்ந்த PTI கட்சியின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் லைவ் செய்தது.

கேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்... பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்!

ஆனால் அது விஷயமில்லை, அதில் கேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்துவிட்டனர். இதனால் அமைச்சர் மற்றும் அவருடன் இருந்தவர்களின் முகங்களும் பூனை போல மாற்றப்பட்டே நேரலையானது. கீழே 'ஃபில்டர் ஆஃப் பண்ணுங்க பாஸ்'  எனப் பலர் கமென்ட் செய்தும் எதுவும் மாற்றப்படவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, இப்போது இது தொடர்பான மீம்ஸ் குவிந்தவண்ணம் உள்ளன. ஆளும்கட்சியின் அதிகாரபூர்வ பக்கம் இந்த அளவு கவனக்குறைவாக இருப்பதா என்று கேலி செய்துவருகின்றனர் நெட்டிசன்கள்!