Published:Updated:

``எது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம்?!” - கண்டறிய உதவும் அடோப்

கார்க்கிபவா
``எது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம்?!” - கண்டறிய உதவும் அடோப்
``எது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம்?!” - கண்டறிய உதவும் அடோப்

உலகை அச்சுறுத்தும் விஷயங்கள் பல. அதில் ஒன்றுதான் போலிப்படங்கள். மார்ஃபிங் செய்யப்பட்ட படங்களால் நடக்கும் குற்றங்கள் ஏராளம். நிறைய பேர் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்ளக்கூட மார்ஃபிங் செய்யப் படங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. எவை ஃபேக் எவை உண்மை எனக் கண்டுபிடிக்க முடிந்தால் பல வழக்குகள் எளிதில் முடியும். இதற்கெல்லாம் தீர்வாக வரக்கூடிய ஒன்றை அடோப் நிறுவனம் செய்ய முன்வந்திருக்கிறது.

``எது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம்?!” - கண்டறிய உதவும் அடோப்

அடோப் நிறுவனமும் UC Berkeley யைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் கைகோத்து ஏ.ஐ. ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மிஷின் லேர்னிங் அடிப்படையில் இயங்கும் இந்த ஏ.ஐ, ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடித்துவிடும். மார்ஃபிங் செய்யப்பட்ட படங்களை சில பேரிடமும் ஏ.ஐ.யிடமும் கொடுத்து எவையெல்லாம் மார்ஃபிங் செய்யப்பட்டவை எனக் கேட்டிருக்கிறார்கள். 53% தடவை மக்கள் சரியான விடையைச் சொல்லியிருக்கிறார்கள். ஏ.ஐ 99% தடவை சரியாகச் சொல்லியிருக்கிறது. இதை உடனடியாக ஒரு கமர்ஷியல் புராடக்டாக மாற்றும் எண்ணம் இல்லையெனச் சொல்லியிருக்கிறது அடோப். இதை எப்படி பயன்படுத்தப்போகிறார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும்.

``ஃபோட்டோஷாப் மற்றும் அடோபின் மற்ற தயாரிப்புகள் பற்றி நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். அதே சமயம் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் நாங்கள் உணர்ந்திருக்கிறோம். போலிப்புகைப்படங்கள் சமூகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” எனத் தனது பிளாக் பக்கத்தில் சொல்லியிருக்கிறது அடோப்.

தொழில்நுட்பம் ஏற்படுத்தும் பிரச்னைகளுக்குத் தீர்வையும் தொழில்நுட்பமே தரும்.

Vikatan