Published:Updated:

கிட்களைப் பெற்ற 90'ஸ் கிட்களுக்கு மட்டும்தான் தெரியும்! - தந்தையர் பரிதாபங்கள் #FathersDay

ப.சூரியராஜ்

உள்ளத்தால் கிட்டாக இருக்கும் 90'ஸ் கிட்ஸுக்கும் உருவத்தால் கிட்டாக இருக்கும் அவர்களின் கிட்ஸுக்கும் இடையே நடக்கும் வாழ்க்கை போராட்டங்களில் சில இங்கே...

கிட்களைப் பெற்ற 90'ஸ் கிட்களுக்கு மட்டும்தான் தெரியும்! - தந்தையர் பரிதாபங்கள் #FathersDay
கிட்களைப் பெற்ற 90'ஸ் கிட்களுக்கு மட்டும்தான் தெரியும்! - தந்தையர் பரிதாபங்கள் #FathersDay

90'ஸ் கிட்ஸ் எனும் பேரினத்தின் மேல் `கல்யாணமா, நடக்காது, நடக்கவும் கூடாது' எனக் கடுப்பில் இருக்கிறார் கடவுள். ஆனால், அந்த கடவுளிடமே கண்ணாமூச்சி ஆடி, கல்யாணம் கட்டி, குழந்தைகுட்டி எனச் செட்டில் ஆகிவிட்டார்கள் சிலர்! கடவுளை ஏமாற்றியதால் அந்தக் கடவுளே குழந்தை ரூபத்தில் வந்து என்னென்ன கலவரங்கள் செய்கிறதென பார்ப்போம். உள்ளத்தால் கிட்டாக இருக்கும் 90'ஸ் கிட்ஸுக்கும் உருவத்தால் கிட்டாக இருக்கும் அவர்களின் கிட்ஸுக்கும் இடையே நடக்கும் வாழ்க்கைப் போராட்டங்களில் சில இங்கே...

கிட்களைப் பெற்ற 90'ஸ் கிட்களுக்கு மட்டும்தான் தெரியும்! - தந்தையர் பரிதாபங்கள் #FathersDay

நாமளே பரபரப்பா உட்கார்ந்து பப்ஜி விளையாடிட்டு இருப்போம். அப்போதான் இந்தப் பயபுள்ளைகளுக்கு படிப்பு அக்கறை பீறிட்டு கிளம்பும். ``போன் குடு ரைம்ஸ் பார்க்கணும்"னு நம்ம கையைப் பிடிச்சு இழுத்து சிக்கன் டின்னர்ல மண் அள்ளி போட்ருவாய்ங்க. ``அம்மா போனை எடுத்துக்கோ போ"னு சொன்னா பூரிக்கட்டையை விட்டெறிவார் அந்த டிக்டொக் பிரபலம். நாமளும் ``எனக்கு வேற வழி தெரியல ஆத்தா"னு போனை குடுத்துருவோம். ஆனா, அந்த பக்கிக போன்ல ரைம்ஸ் பார்க்காம கேம் ஓபன் பண்ணுவாய்ங்க பாருங்க, ஆத்திரமா வரும். அந்த வயசுல நாம, ``தேவுடா தேவுடா" போன் வாங்கித்தரச் சொல்லி அப்பாகிட்ட அடம் பிடிச்சதை நினைக்கும்போது வேற, துக்கம் தொண்டையை அடைக்கும். 

கிட்களைப் பெற்ற 90'ஸ் கிட்களுக்கு மட்டும்தான் தெரியும்! - தந்தையர் பரிதாபங்கள் #FathersDay

நைட் கண் அசந்து தூங்கிட்டிருப்போம். திடீர்னு ஃபேக்டரி அலாரம் சத்தம் கேட்கும். ``நம்ம எரியாவுலதான் எந்த ஃபேக்டரியும் இல்லையே'னு யோசிக்கிறப்போதான் ஞாபகம் வரும், எழுந்து பார்த்தால் தொட்டில் குலுங்க அழுதுட்டு இருப்பாய்ங்க. ``இப்போ எதுக்கு இவன் அழுவுறான்"னு கேட்டா ``எதாவது கனவு கண்டிருப்பான்"னு மனைவி சொல்வாங்க. ``உனக்குக் கனவு வருதுன்னு அழுவுற. ஆனா, உன்னால உங்கப்பன் தூக்கமே வரமாட்டுதுன்னு அழுத்துட்டு இருக்கேன்டா. அமைதியா தூங்குடா"னு காலைப் பிடிச்சு கெஞ்சலாம்னு தோணும். பத்து கிலோ மீட்டர் பறந்துபோன தூக்கத்தை மறுபடியும் பிடிச்சு கொண்டாந்து புருவத்துக்கு மத்தியில நிறுத்தினா, அடுத்த அலாரத்தை அடிச்சு விடுவாய்ங்க. ``பிள்ளைகளைப் பெற்ற தந்தைகளுக்கும் தெரியும். இரவில் தூக்கம் வாய்ப்பில்லை என்று!' ஒரு காலத்துல கேம் ஆடுறேன், டிவிடி பார்க்குறேன்னு விடிய விடிய டிவியைப் போட்டு வீட்ல தூங்கவிடாம பண்ணதெல்லாம் நம்ம கண் முன்னாடி வந்துபோகும்.

எதையும் எடுத்த இடத்துல வைக்கிறது இல்லைன்னு கால் நூற்றாண்டா திட்டுவாங்கி, இப்போதான் நாமளே உணர்ந்து, திருந்திருப்போம். கீ செயின், பர்ஸ், வாட்ச் வகையறாக்களை பத்திரமா எடுத்து வெச்சி பழகிருப்போம். ஆனா, அது மாயமா மறைஞ்சு போயிடும். ``எங்கப்பா பர்ஸ், கீ செயின்"னு துணைவி கிட்ட கேட்டா ஊமைக்குத்தா விழும். ``என்ன வாழ்க்கைடா இது. நான் லிப்ட் கேட்டாவது ஆபீஸ் போய்க்கிறேன்"னு நொந்துப்போய் ஷூ எடுத்து மாட்டினா, கால் குத்தும். உதறினா உள்ளே இருந்து கீ செயின், வாட்ச், பர்ஸ், ஐடி கார்டு கூடவே லைட்டரும் வந்து விழும். லைட்டர்னால வெயிட்டா அடியும் விழும். அடேய்களா, அப்பா பாவம்டா..! 

கிட்களைப் பெற்ற 90'ஸ் கிட்களுக்கு மட்டும்தான் தெரியும்! - தந்தையர் பரிதாபங்கள் #FathersDay

ஒரு பொண்ணு நம்மளைப் பார்த்து கலாய்ச்சு சிரிக்குதா, காதல்ல சிரிக்குதான்னே கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியாம, கல்யாணம் பண்ணி, குழந்தையும் பெத்திருப்போம். இந்த லட்சணத்துல இந்த வாண்டுங்க அழும். ஏன் அழுவுறாய்ங்க, எதுக்கு அழுவுறாய்ங்கன்னு கண்டுபிடிக்கவே முடியாது. பசிக்கு அழுவுறான்னு பால் ஆத்தி கொடுத்தால், பாலை மூஞ்சில துப்பிட்டு அழுவாங்க. தூக்கம் வந்து அழுவுறான்னு தொட்டில்ல போட்டு வெக்கு வெக்குன்னு 2 மணி நேரம் ஆட்டின பிறகு கொஞ்சம் அமைதி ஆவானுங்க. பரவால்லையேனு எட்டிப் பார்த்தால் மறுபடியும் ஆரம்பிச்சுடுவானுங்க. நாமளும் அழ ஆரம்பிச்சுடுவோம். 

ஆண் தேவதைகள் அழக் கூடாது, ஆப்பி தந்தையர் தினம்!