Published:Updated:

``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்!'' - வியப்பில் அரசுப் பள்ளி மாணவர்

துரை.வேம்பையன்
``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்!'' - வியப்பில் அரசுப் பள்ளி மாணவர்
``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்!'' - வியப்பில் அரசுப் பள்ளி மாணவர்

"எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். சொந்தமா வீடுகூட இல்லை. அவ்வளவு வறுமை. நான் இதுவரை கரூரைத் தாண்டியதில்லை. ஆனா, அரசு செலவுல சிங்கப்பூர், மலேசியாவுக்கு பத்து நாள்கள் கல்விச்சுற்றுலா போய்ட்டு வந்தேன். என் வாழ்நாளுக்கும் மறக்க முடியாத ஆனந்த அனுபவம் அது!" என்று நெகிழ்ந்துபோய் சொல்கிறார் ராம்குமார்.

``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்!'' - வியப்பில் அரசுப் பள்ளி மாணவர்

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கும் வாங்கலைச் சேர்ந்தவர் ராம்குமார். குக்கிராமமான இங்கே உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில், பதினொன்றாம் வகுப்பு படிக்கிறார் ராம்குமார். தமிழ அரசு நடத்திய கார்ட்டூன் வரையும் போட்டியில் கலந்துகொண்டு, மாநில அளவில் முதல் பரிசை தட்டினார். அதன் காரணமாக, சிங்கப்பூர், மலேசியாவுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டார். அந்த ஆனந்த அதிர்ச்சி இன்னும் விலகாமல் இருக்கும் ராம்குமாரிடம் பேசினோம்.

``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்!'' - வியப்பில் அரசுப் பள்ளி மாணவர்

"அப்பா சின்ன வயசிலேயே இறந்துபோயிட்டார். நான், அம்மா நிர்மலா, கல்லூரி படிக்கும் அக்கானு மூணுபேரு மட்டும்தான். அம்மாவோட சொற்ப வருமானத்தை வச்சுதான் மொத்தக் குடும்பமும் இயங்குது. அதனால, சின்ன வயசில் இருந்தே குடும்பத்தில் வறுமை. இருந்தாலும், நானும் அக்காவும் நல்லா படிச்சோம். பத்தாவதுல 406 மார்க் வாங்கி, பள்ளி அளவுல மூன்றாம் இடம் வந்தேன். சின்ன வயசில் இருந்து கார்ட்டூன் சேனல்களைப் பார்த்து பார்த்து கார்ட்டூன் உருவங்களை அப்படியே அச்சுஅசலா வரைவேன். அதைப் பார்த்து, எங்க பள்ளியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் ரவிக்குமார் சார், என்னைப் பாராட்டி ஊக்குவிப்பார். ஆனா, எவ்வளவோ வரைஞ்சும்... எங்க பள்ளி அளவுல நடக்கும் ஓவிய போட்டிகளில் பதினைஞ்சு முறைகளுக்கு மேல் தோல்வியையே தழுவியிருக்கிறேன். இந்த சூழல்லதான், கடந்த 2018-ம் வருஷம் ரவிக்குமார் சார், 'தமிழக அரசு கலையருவி திட்டத்தின் கீழ் கார்ட்டூன் போட்டி வைக்குது. கலந்துக்க'னு அனுப்பி வச்சார். கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில கலந்துகிட்டேன். ஸ்கெட்ச் பாக்ஸ்களில் இருக்கும் கார்ட்டூன் சிறுவன் உருவத்தை வரைஞ்சேன். ஆச்சர்யமா, மாவட்ட அளவுல முதல் பரிசை வாங்கினேன். இதனால், மாநில அளவிலான போட்டியில் கலந்துக்க தேர்வானேன். 

``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்!'' - வியப்பில் அரசுப் பள்ளி மாணவர்

கடந்த 2018, ஜூலை மாசம் திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்துகிட்டேன். அங்கே டோரேமானை வரைஞ்சேன். மாநில அளவில் முதலிடம் வந்தேன். என்னைப்போல மத்த பிரிவுகள், போட்டிகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 25 மாணவர்களைக் கல்விச்சுற்றுலாவாக சிங்கப்பூர், மலேசியாவுக்கு அழைச்சுட்டுப் போகப்போறதா சொன்னாங்க. எனக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்துச்சு. காரணம், அதுவரை நான் கரூரைத் தாண்டியதில்லை. எங்க பள்ளி ஆசிரியர்கள், 'நாங்க சென்னைக்கூட தாண்டியதில்லை. பொம்ம படம் வரைஞ்சு, சிங்கப்பூர், மலேசியா சுற்றுலா போக உனக்கு சான்ஸ் வந்திருக்கு. என்ஜாய்'னு வாழ்த்தினாங்க. அரசு தரப்பிலேயே பாஸ்போர்ட் எடுத்து தந்தாங்க.

எனக்கு கரூர்ல இருந்து திருச்சிவரை போய்ட்டு வர 130 ரூபாய் வரை செலவாச்சு. மத்தபடி, திருச்சி ஏர்போர்ட்டுல ஏத்திகிட்டுப்போய் 10 நாள்கள் சிங்கப்பூர், மலேசியாவை சுத்திக் காண்பிச்சுட்டு, திரும்ப கொண்டுவந்து திருச்சியிலேயே விட்டுட்டாங்க. அந்தப் பத்துநாளும் ஒரு கனவுமாதிரி இருந்துச்சு. சிங்கப்பூர்ல ஒருநாள்தான் தங்கினோம். மீதி ஒன்பது நாள்களும் மலேசியாவுலதான் சுற்றுலா. சிங்கப்பூர்ல பிரமாண்டமாக இருக்கும் யுனிவர்சல் ஸ்டுடியோ, பிஸினஸ் பிளேஸ், 32 அடி உள்ள பிரமாண்ட சிங்க சிலைனு பல இடங்களை சுத்திப்பார்த்தோம். அதன்பிறகு, மலேசியாவுல டிவின் டவர்ல 86 வது மாடிக்கு அழைச்சுட்டுப் போனாங்க. 

``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்!'' - வியப்பில் அரசுப் பள்ளி மாணவர்

அப்பப்பா...அங்க இருந்து பார்த்தப்ப, உலகமே தெரிஞ்சாப்புல அப்படி ஒரு த்ரில்லா இருந்துச்சு. 130 அடி உள்ள பத்துமலை முருகன் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போனாங்க. பிறகு, பிரபலமான எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்துக்கு அழைச்சுட்டுப் போனாங்க. அங்குள்ள லேப்ல மனிதர்களை அப்படியே பாடம் பண்ணி வச்சுருந்தாங்க. அது திகில் அனுபவமா இருந்துச்சு. அப்புறம், மலேசியா அரசே நடத்தும் சென்தோசாங்கிற தமிழ்ப் பள்ளிக்கு அழைச்சுட்டுப் போனாங்க. நம்ம ஊர் தனியார் பள்ளிகளைவிட அது அருமையா இருந்துச்சு. பூஜாங்வேலிங்கிற வரலாற்றுப் பகுதிக்கு அழைச்சுட்டுப் போனாங்க. அங்க ஜாலியா பொருள்களை ஒளித்து வைத்துத் தேடும் போட்டியை நடத்தி, எங்களை மகிழ்விச்சாங்க. அப்புறம், மலேசியா நாடாளுமன்றத்துக்கு அழைச்சுட்டுப் போய், எங்களுக்குச் சுத்திக்காட்டுனாங்க.

``அரசு செலவுல பாஸ்போர்ட், பத்து நாள் சிங்கப்பூர், மலேசியா டூர்!'' - வியப்பில் அரசுப் பள்ளி மாணவர்

பெனான்ங் ஹில்னு ஜில் பகுதிக்கு அழைச்சுட்டு போய், எங்களைத் திக்குமுக்காட வச்சாங்க. மலேசியாவுல முதல் மூன்று நாள்கள் மட்டும் அந்த நாட்டு உணவை கொடுத்தாங்க. அது எங்களுக்கு ஒத்துக்கலை. அப்புறம், நம்ம உணவை ரெடி பண்ணி தந்தாங்க. வாழ்க்கையில் நானெல்லாம் கரூரைத் தாண்டுவேனான்னு நினைச்சுருக்கேன். ஆனா, இன்னைக்கு வெறும் 130 ரூபா செலவுல மொத்தமா லம்பாக 10 நாள் வெளிநாடு போய்ட்டு வர்ற ட்ரிப் கிடைச்சுச்சு. அதுக்கு காரணமான இந்த கார்ட்டூன் வரையும் கலையை என் கடைசிக்காலம் வரைக்கும் விட மாட்டேன். இந்தக் கலையை இன்னும் மெருகேற்றி, கார்ட்டூனில் வேற லெவலில் சாதிக்கணும்னு ஆசை. கண்டிப்பாக அதையும் சாதிப்பேன்" என்றார் அழுத்தமாக!

Vikatan