Published:Updated:

``பைக்குக்கு ஆகும் செலவில் பறக்கலாம்!” - காருக்குப் பதிலா இதை வாங்கிக்கலாமா?

கார்க்கிபவா
``பைக்குக்கு ஆகும் செலவில் பறக்கலாம்!” - காருக்குப் பதிலா இதை வாங்கிக்கலாமா?
``பைக்குக்கு ஆகும் செலவில் பறக்கலாம்!” - காருக்குப் பதிலா இதை வாங்கிக்கலாமா?
``பைக்குக்கு ஆகும் செலவில் பறக்கலாம்!” - காருக்குப் பதிலா இதை வாங்கிக்கலாமா?

உங்கள் பைக்கை எடுத்துக்கொள்ளுங்கள். 160 கி.மீ செல்ல வேண்டும் என்றால் எத்தனை லிட்டர் பெட்ரோல் போட வேண்டும்? சராசரியாக ஒரு பைக் 45 கிமீ மைலேஜ் தருமென்றால், 4 லிட்டர். அதாவது 300ரூபாய். ஹைவே என்றால் 2-3 மணி நேரத்தில் சென்றுவிடலாம். 

கார் வைத்திருக்கிறவர்கள் கணக்கு போட்டுப்பாருங்கள். 2 மணி நேரத்தில் சென்றுவிடலாம். ஆனால், செலவு 700-800 ரூபாய் வரை செலவாகலாம்.

அதுவே விமானத்தில்..? ஆச்சர்யப்பட வேண்டாம். வெறும் 300 ரூபாய் செலவில் பறந்துவிடலாம்.  

உலகின் முதல் பேட்டரி ஆப்ரேட்டட் ஏர்கிராஃப்ட் தயாராகிவிட்டது. 2 பேரை ஏற்றிச்செல்லக்கூடிய இந்தக் குட்டி விமானத்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்தால் 160 கிமீ வரை பறக்கலாம். மற்ற விமானத்தில் விதிகள்படியே இயங்கும் இந்த விமானத்தில் ஒரே ஒரு மாற்றம்தான்; இதிலிருப்பது 60 கிலோவாட் மின்சார என்ஜின். இந்த விமானத்தைத் தயாரிப்பது Pipistrel Alpha Poland என்ற நிறுவனம். 

உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தன் வாடிக்கையாளர்களுக்காக 40 விமானங்கள் வரை இதுவரை தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய். விமானம் ஓட்டப் பயிற்சி தருவதற்காக விமான நிலையங்களின் எல்லைக்குள்ளே மட்டும் இப்போது இவை பறந்துகொண்டிருக்கிறன. இன்னும் சில ஆண்டுகளில் இது உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியும் அளவுக்கு வளர்ந்துவிடும் என்கிறது  Pipistrel Alpha Poland. அடுத்த 15 ஆண்டுகளில் பயணிகள் விமானமும் மின்சார என்ஜினுக்கு மாறிவிடும் என்கிறார்கள்.

300 கிலோ எடை கொண்ட இந்த விமானத்தில் பேட்டரி மட்டுமே 100 கிலோ. இதில் இரண்டு பேர் பயணம் செய்ய முடியும். இதுவரை இந்த விமானத்தை ஓட்டியவர்கள் சொன்னதன்படி, மாலை நேரத்தில் காற்றின் வேகம் குறைவாக இருப்பதால் அப்போது ஓட்டுவது சுலபமாக இருக்கிறது.  இதுபோலவே ஒருவர் மட்டும் பயணிக்கும்போது விமானத்தை ஓட்டுவது எளிது.

பைக்குக்கு ஆகும் அதே செலவில் பறக்கலாம் என்பது வாவ் விஷயம்தான். விலை பைக் அளவுக்கு இல்லாவிட்டாலும் இன்னும் குறைந்தால் நன்றாக இருக்கும். 

Vikatan