Published:Updated:

`ஃபர்ஸ்ட் ஸ்டெப்!' - 19 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை அசைபோடும் `பிரபஞ்ச அழகி' லாரா தத்தா

கானப்ரியா
`ஃபர்ஸ்ட் ஸ்டெப்!' - 19 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை அசைபோடும் `பிரபஞ்ச அழகி' லாரா தத்தா
`ஃபர்ஸ்ட் ஸ்டெப்!' - 19 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை அசைபோடும் `பிரபஞ்ச அழகி' லாரா தத்தா

2000-வது ஆண்டு, இந்தியாவிற்கு மிகவும் ஸ்பெஷல். அந்த ஆண்டின் `மிஸ் இந்தியா' அழகிப்போட்டியில் வென்ற லாரா தத்தா, பிரியங்கா சோப்ரா மற்றும்  தியா மிர்ஸா ஆகியோர் சர்வதேச அழகிப் போட்டிகளிலும் வென்று சாதித்தனர். அந்த வருடத்தின் மிக முக்கிய நிகழ்வான இந்த வரலாற்றுப் பதிவை, மீண்டும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபஞ்ச அழகி.

`ஃபர்ஸ்ட் ஸ்டெப்!' - 19 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை அசைபோடும் `பிரபஞ்ச அழகி' லாரா தத்தா

உலகமெங்கிலுமிருந்து நூற்றுக்கணக்கான அழகிகள் பங்குபெற்ற பிரபஞ்ச அழகிப்போட்டியின் வெற்றியாளராக, பத்தொன்பது வயதான லாரா மகுடம் சூடினார். அதே ஆண்டு நடைபெற்ற உலக அழகிப்போட்டியின் வெற்றியாளராகப் பிரியங்கா சோப்ராவும், ஆசிய பசிபிக் அழகியாக தியா மிர்ஸாவும் தேர்வு செய்யப்பட்டனர். இதனால் இந்தியாவிற்கு, உலகளவில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்த விலைமதிப்பற்ற நிமிடங்களை நினைவுகூர்ந்து, OnCueIndia எனும் மேடை மேலாண்மை நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் பிரபஞ்ச அழகி.

`ஃபர்ஸ்ட் ஸ்டெப்!' - 19 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை அசைபோடும் `பிரபஞ்ச அழகி' லாரா தத்தா

அதில், ``25 வருடங்களாக மிஸ் இந்தியா அழகிப்போட்டியை கையாளுவதற்குப் பாராட்டுகள். நீங்கள்தான் மிகவும் சிறந்த நபர்கள். உங்களுடைய சரியான முதல் படி எங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், எங்கள் பயணம் எதுவும் சாத்தியமில்லை. இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்யவும் வெற்றிபெறவும் வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருந்தார் லாரா.