Published:Updated:

தை மாதம் என்றாலே பொங்கல்... முப்பாட்டன் விநாயகர்! - இது 2017-ன் அட்றா சக்கை அறிக்கை

விகடன் விமர்சனக்குழு
தை மாதம் என்றாலே பொங்கல்... முப்பாட்டன் விநாயகர்! - இது 2017-ன் அட்றா சக்கை அறிக்கை
தை மாதம் என்றாலே பொங்கல்... முப்பாட்டன் விநாயகர்! - இது 2017-ன் அட்றா சக்கை அறிக்கை

தினசரி வெளிவரும்  சில அறிக்கைகளைப் பார்க்கும்போது தலைசுற்றல் வந்துடுது. நாடு போகிற வேகத்துக்கு 2017-ல் இப்படியெல்லாம்கூட அறிக்கைகள் வந்து அதை நீங்க பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை மக்களேய்ய்ய்...

க்கள் நலக்  கூட்டணியிலிருந்து தே.மு.தி.க., த.மா.கா., கம்யூனிஸ்டுகள், வி.சி.க., ம.தி.மு.க ஆகிய அனைத்துக் கட்சிகளும் தங்களை விலக்கிக்கொண்டாலும் ம.ந.கூ-வில் பிளவு என்பதே ஏற்படாது. யாராலும்  பிரிக்கவும் முடியாது அது தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும் .#வைகோ

தார் அட்டை அவசியமா? அவசியம்  இல்லையா? என்பது குறித்து நாடு தழுவிய பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அனைவரும் வாக்குகள் செலுத்தி பெரும்பான்மையான வாக்குகளைப் பெறும் திட்டமானது அமலுக்கு வரும். இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஆதார் அட்டை அவசியமா இல்லையா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். #மத்திய அரசு

முருகன், மாயோனைத் தொடர்ந்து என்னுடைய  முப்பாட்டன் விநாயகர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆதித் தமிழர்களின் தலைவன் முருகன், ஆயர்குல தலைவன் மாயோன், அரசமர நிலத் தலைவன் நம்  விநாயகர் என்று சொல்வதில் பெருமிதம். #சீமான்

ன்புமணி ஆகிய நான்.. அன்புமணி ராமதாஸ் ஆகிய நான்.. பா.ம.க-வின் இளைஞர் அணித்தலைவர் ஆகிய நான்... முன்னாள் மத்திய அமைச்சர் ஆகிய நான்...  #அன்புமணி ராமதாஸ்

`நான் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக வெளியிடும் அனைத்துக் கருத்துகளுமே என்னுடைய தனிப்பட்ட கருத்துகளே ஆகும்' என்று தெரிவித்திருந்த கருத்தானது முற்றிலும் முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்தே ஆகும். #தமிழிசை

`திருப்பூரில் 570 கோடி ரூபாயுடன் கன்டெய்னர் லாரி ஒன்று பிடிபட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு' என்று வந்த செய்தியானது உண்மைதான் என்று அதிகாரப்பூர்வத்தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. #காவல்துறை

தை மாதம் என்றாலே பொங்கல்தான் என்பதனைக் கூறிக்கொள்கிறேன். ஆமாம் தை முதல்நாள் பொங்கல் வருது, அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் வருது. அதுக்கு அடுத்தநாள் காணும் பொங்கல் வருது. ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால் தை மாதம் என்றாலே பொங்கல்தான். ஹேப்பி பொங்கல். #விஜயகாந்த்.

ழகத்தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் நாள்தோறும் வந்து என்னை முதலமைச்சராக வேண்டி வலியுறுத்திவிட்டதால் கடைசியாக மீதம் இருக்கும் நானும் விரைவில் முதலமைச்சர் ஆக வேண்டி என்னை வலியுறுத்திக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். #சசிகலா

ந்த ஏ.டி.எம். சென்டரில் பணம் இருக்கிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில்  புதிய 'ஆப்'  ஒன்று உருவாக்கப்படும்.  ஆப்புக்கு  'ஆப்பு' என்றே பெயர் வைக்கப்படும். இந்த ஆப்பானது விரைவில்  2020-க்குள் கட்டமைக்கப்பட்டு ஃப்ரீடம் 251 போனில் மட்டுமே செயல்படும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது என்பதனை பெருமிதத்துடன் சொல்லிக்கொள்கிறேன். #பிரதமர் மோடி

- ஜெ.வி.பிரவீன்குமார்