Published:Updated:

'ஏ பெண்ணாதிக்க சமூகமே..!' - கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியா? #PunIntended

VIGNESH S
'ஏ பெண்ணாதிக்க சமூகமே..!' - கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியா? #PunIntended
'ஏ பெண்ணாதிக்க சமூகமே..!' - கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியா? #PunIntended

'ஏ ஆணாதிக்க சமூகமே...'னு அலறி அப்பாவி ஆண்களையும் சேர்த்துப் பயமுறுத்துற நாம இந்தப் பெண்ணாதிக்க மனப்பான்மையோடு உலாவும் பெண்களையும் அப்பப்போ கணக்கில் எடுத்துக்கிட்டுக் களமாடத்  தொடங்கினா நல்லாருக்குமே மக்கழே..! அவங்ககிட்ட மாட்டிக்கிட்டு முழிபிதுங்கித் தவிக்கிற ஆண்களின் கஷ்டத்தையும் பார்த்துக் கண்ணீர் விடலாமே.. (பாவப்பட்ட ஆண்மகன்களுக்குச் சமர்ப்பணம்)

* உங்களைக் காதலிச்ச ஒரே பாவத்துக்காக பஸ்ல போகும்போதோ, பஸ் ஸ்டாப்லே காத்திருக்கும்போதோ பொண்ணுங்க நிற்கிற பக்கம் பசங்க லேசாத் தலையைச் சாய்த்தாலே 'தையத் தக்கா..'னு குதிச்சு காதலுக்கு மெமோ கொடுக்கிறதுலாம் என்ன பழக்கம் கேர்ள்ஸ்? என்ன இருந்தாலும் ஒரு வரைமுறை வேண்டாமா?

* 'இருக்குற இடம் தெரியாம இருந்திட்டுப் போயிடுவோம்'ங்கிற நினைப்போட ஒரு ஓரமா நிற்கும்போது, ஏதாவது வெளியூர்க்காரப் பொண்ணு தெரியாத்தனமா நம்மகிட்டே வந்து அட்ரஸ் விசாரிச்சால் கூட இந்தக் காதலிகள்ங்கிற டேமேஜர்கள் நம்மைச் சந்தேகக் கண்ணோட பார்த்து டைவர்ஸுக்கு அப்ளை பண்றதை யாராவது என்னானு கேளுங்களேப்பா..!

* தினமும் ஏதாவது பஞ்சாயத்துல மாத்து வாங்கி அதை அங்கிட்டும் காட்டிக் கஷ்டப்படுத்துறமேனு யோசிச்சு, மனம் திருந்தி, போனாப் போகுதேனு என்னிக்காவது ரொம்பப் பாசமா 'சாப்பிட்டியாமா... தூங்கிட்டியாமா..?'னு காதலோட விசாரிச்சா, 'என்னடா குடிச்சிருக்கியா..?'னு ஒரே வார்த்தையில பாசத்து மேலேயே அநியாயமா பால்டாயிலை ஊத்தி மனுசனைச் சங்கடப்படுத்துறதுலாம் பாவம் புள்ளைகளா..!
  
* ஏதோ ஏழரை ஏறி நடுமுதுகில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்த நேரம்பார்த்து, வான்டடா வாயைவிட்டு, அப்புறம் அந்தப் பொண்ணு திட்டிடுச்சுனு மெய்யாலுமே ஃபீல் பண்ணி வாட்ஸ்-அப்ல ஸ்டேட்டஸ் வெச்சா அதைக் கண்டும் காணாதமாதிரிக் கடந்துபோய்ப் பசங்களைக் கடுப்பேத்துறது உங்களுக்கே அடுக்குமா கண்மணிகளே..!

* மொழி புரியாத ரொமான்ஸ் படங்களையெல்லாம் பார்த்துக் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி ப்ரொபோஸ் பண்ணினாலும், 'யார்றா இவன் கோமாளி'னு அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்துட்டு கேசுவலா வேற வேலையைப் பார்க்கக் கிளம்பிடுறது. அடுத்தநாள் அந்தப் பையன் பதில் எதிர்பார்த்துக் காத்திருப்பானேனு ஒரு பதட்டம் வேணாம் உங்களுக்கு..?

* உங்களை இம்ப்ரெஸ் பண்றதுக்காக, கீழே விழுந்த பூவை எடுத்துக் கொடுக்குறது, பஸ்ல டிக்கெட் வாங்கி கொடுக்கிறதுனு என்னதான் தலைகீழா நின்னு சர்க்கஸ் பண்ணிக் காட்டினாலும் 'தாங்க்ஸ் ப்ரோ...'னு வெங்காயவெடியை வாயில போட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்குறதெல்லாம் என்னமாதிரியான மனநிலை தாய்க்குலங்களே..?

* பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்னு ஜிம்முக்குப் போறது, பைக்ல வீலிங் பண்றது, கவனத்தை நம்ம பக்கம் திருப்புறதுக்காக மண்டைக்கு நடுவுல மட்டும் கேப் விட்டு நறுக்குனு வழிச்செடுக்கிறதுனு எம்புட்டு நேக்கா ரூட்டைப் போட்டாலும் ஹேர்பின்னை வெச்சே நெம்பிட்டுப் போய்கிட்டே இருப்பாங்க இந்தப் பொண்ணுங்க. #பட்ட கஷ்டமெல்லாம் போச்சே!

 இப்போ சொல்லுங்க... கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியைப் புதைத்து வைத்திருக்கும் இந்தப் பெண்ணாதிக்கச் சமூகத்தில் ஆண்கள் வாழ எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கு..? நீங்க பட்ட கஷ்டத்தையும் கமெண்டில் கொட்டிட்டுப் போங்க ராசாக்களே..

- விக்கி