Published:Updated:

இனி, யூ- டியூப் மூலமாக தொலைக்காட்சி பார்க்கலாம்! - "யூ- டியூப் டி.வி" அறிமுகம்!

விகடன் விமர்சனக்குழு

வீடியோக்களைப் பகிரும் பிரபல சோஷியல் மீடியாவான யூ-டியூப், கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமானது. யூ-டியூப், குறைவான கட்டணத்துக்கு 'Unplugged' என்ற பெயரில் தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கப்போவதாக சில வருடங்களாக செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன.

இந்நிலையில், மன்ஹாட்டன் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், 'யூ-டியூப் டி.வி' என்ற பெயரில் தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கவிருப்பதாக, அதிகாரபூர்வமாக யூ-டியூப் அறிவித்துள்ளது. இதன்மூலம், பிரபல டி.வி சேனல்களின் ஒளிபரப்பை நேரடியாக நேயர்கள் கண்டுகளிக்க முடியும். இது மட்டுமில்லாமல், யூ-டியூப் தளத்தில் இருக்கும் மற்ற வீடியோக்களையும் இந்தச் சேவையில் நேயர்கள் கண்டுகளிக்க முடியும்.

பயனர்கள், 35 டாலர்களை மாதக் கட்டணமாகச் செலுத்தி, இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். யூ-டியூப் டி.வி சேவை, முதல்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.