Published:Updated:

கமல், விஜய், சி.ஆர்.சரஸ்வதி - இவங்களைப் பத்தி ஒரே வார்த்தைல சொல்லணும்னா? ! #FBTrend

SHYAM SUNDAR L
கமல், விஜய், சி.ஆர்.சரஸ்வதி - இவங்களைப் பத்தி ஒரே வார்த்தைல சொல்லணும்னா? ! #FBTrend
கமல், விஜய், சி.ஆர்.சரஸ்வதி - இவங்களைப் பத்தி ஒரே வார்த்தைல சொல்லணும்னா? ! #FBTrend

வாராவாரம் பேஸ்புக்ல எதாவது ஒரு ட்ரெண்ட் வர மாதிரி இந்த வாரம் வந்து இருக்குற ட்ரெண்ட் `என்னைப் பத்தி ஒரு வார்த்தைல சொல்லுங்க` தான். கிட்டத்தட்ட மார்க்கை தவிர பேஸ்புக்ல இருக்குற எல்லாருமே `என்னைப் பத்தி ஒரு வார்த்தைல சொல்லுங்கன்னு போஸ்ட் போட்டுட்டாங்க. ஒரு வேளை நம்ம பிரபலங்களைப் பத்திலாம் ஒரு வார்த்தைல சொல்லணும்ன்னா எப்படி சொல்றதுன்னு பேஸ்புக் பார்த்துக்கிட்டே யோசிச்சுப் பார்த்தோம். அதன்படி இதோ சில பிரபலங்களைப் பத்தி ஒரே வார்த்தைல சொன்னா இப்படித்தான் பாஸ் சொல்லணும்.

சி.ஆர்.சரஸ்வதி - அதிமுகவின் முக்கியமான உறுப்பினர்கள்ல ஒருத்தங்கதான் சி.ஆர்.சரஸ்வதி. அதிமுக கட்சிக்கு என்ன நடந்தாலும் அதுக்கு சப்போர்டிவ்வா சவுண்ட் விட்டு முட்டு கொடுக்குறதுல இவங்களை மாதிரி வேற ஒருத்தங்களை பார்க்க முடியாது. ஆனாலும் இவங்க சத்தமா பேசுற அந்த சங்கீதத்தைத்தான் காதால கேட்க முடியல. ஆகவே இவங்களை லவுட் ஸ்பீக்கர்ன்னு தாராளமா கூப்பிடலாம் மக்களே.

விஜய் - வேட்டைக்காரன், வில்லு, புலி, கத்தி, பைரவா, சுறான்னு விலங்குகளும் அது சார்ந்த பேரும் வச்சு படம் நடிக்குறதால இவரை வேட்டைக்காரன்னு ஒரே வார்த்தைல குறிப்பிடலாம். இன்னும் எத்தனை காடும் காடு சார்ந்தும் படம் நடிப்பார்னே தெரியல. வெளிய வாங்க ப்ரோ.

சூர்யா - சிங்கம்-1ல சிங்கமா நடிச்சு, சிங்கம்-2ல சிங்கமா வாழ்ந்து, சிங்கம்-3ல சிங்கமாவே மாறிட்ட சூர்யாவை வேற எப்படி ஒரே வார்த்தைல சொல்ல முடியும். ஆகவே மக்களே சிங்கம் சூர்யாவ ஒரே வார்த்தைல லயன்னே கூப்பிடலாம்.

அஜித் - சிவாவோட வீரம் படத்துல நடிச்சு, சிவாவோட வேதாளம் படத்துல நடிச்சு, இப்ப சிவாவோட விவேகம் படத்துல நடிச்சிட்டு இன்னும் இதே மாதிரி எத்தனை சிவாவோட படத்துல நடிக்க போறார்ன்னு தெரியல நம்ம தல. அதனால நம்ம அஜித்தைப் பத்தி ஒரே வார்த்தைல சொல்லணும்னா சிவான்னே சொல்லலாம்.

அனிருத் - கொஞ்ச காலமா தமிழ்நாட்டுல எந்தப் பிரச்னை வந்தாலும் அதை அப்படியே திசை திருப்புற மாதிரி வீடியோ போட யூஸ் ஆகுற ஒரே ஆள் அனிருத்தான். எல்லா பிரச்னையும் அப்படியே போறபோக்குல திசை திருப்புற அனிருத்தை புயல்காத்துன்னு ஒரே வார்த்தைல சொல்லலாம் ஃப்ரெண்ட்ஸ்.

தனுஷ் - வாராவாரம் எதாவது ஒரு வகைல வைரல் ஆகுறதே வழக்கமா வச்சு இருக்குற தனுஷுக்கு வேற என்ன ஃப்ரெண்ட்ஸ் பேர் வைக்கிறது. தனுஷைப் பத்தி ஒரே வார்த்தைல சொல்லணும்ன்னா வைரல்னே சொல்லிடலாம்.

கமல்- சமீப காலமா கமல் தமிழ்நாட்டுல நடக்குற எல்லா விஷயத்துக்கு ட்விட்டர்ல சீரியசா ஸ்டேட்ட்ஸ் போட்டுக்கிட்டு இருக்கார். அவர் என்னதான் புரட்சிப் பொங்க ஸ்டேட்ட்ஸ் போட்டாலும், மக்களாலதான் அதை புரிஞ்சிக்கவே முடியல. அவரோட ஸ்டேட்டஸ் பாக்குற மக்கள் எப்பவும் `ஙே`ன்னுதான் ரியாக்சன் கொடுக்குறாங்க. ஆகவே ஃப்ரெண்ட்ஸ் கமல் பத்தி ஒரே வார்த்தைல சொல்லணும்ன்னா `ஙே`ன்னே சொல்லிடலாம்.

ரஜினிகாந்த் - ஒரு பக்கம் கமல் எல்லாத்துக்கும் ஸ்டேட்டஸ் போட்டு புரட்சி பண்றார்னா ரஜினிகாந்த எதுவுமே பேசாம வழக்கம் போல அமைதியாவே இருக்கார். எப்பவும் சைலண்ட் மோட்லயே இருக்குற ரஜினிகாந்த் பத்தி ஒரே வார்த்தைனா அது வேற என்ன மியூட் தான்.

விஜயகாந்த் - நல்லா வளர்ந்துக்கிட்ட இருந்த மனுஷன் ஒரே எலக்‌ஷன்ல இருந்த இடமே தெரியாம காணாம போயிட்டார். இவரைப் பத்தி நினைக்கும் போதெல்லாம் செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழந்தாயடா கர்ணா சாங்தான் ஞாபகம் வரும். இவரைப் பத்தி ஒரே வார்த்தைல சொல்ல பல வார்த்தைகள் இருந்தாலும் பெஸ்ட் வார்த்தை கர்ணன்தான் மக்களே.

ஓபிஎஸ் - இந்தியா முழுக்க யோகா டே கொண்டாடுனப்போ அதை அப்படியே காமெடி டேவா செலிப்ரேட் பண்ணது நம்ம தமிழ்நாடு மட்டும்தான். பட் அப்படிப்பட்ட யோகாவையும், தியானத்தையும் கூட ஈசியா தமிழ்நாட்டுல ட்ரெண்ட் ஆக்குன ஒரே தலைவர் ஓபிஎஸ்தான். இவரைப் பத்தி ஒரே வார்த்தைல தியானம்னே சொல்லலாம்.

தீபா - தமிழ்நாட்டு அரசியல்ல என்னதான் பெரிய பெரிய திருப்பம்லாம் வந்தாலும் எல்லாத்துக்கும் ரொம்ப மெதுவா ரியாக்ட் பண்றது தீபாவாதான் இருக்கும். எல்லா விஷயத்துக்கும் விரைவில் அறிவிப்பு வெளிவருமுன்னு பேசுறதுதான் தீபாவோட பழக்கம். ஆனா அந்த விரைவில் எப்ப வருமுன்னுதான் தெரியவே இல்லை. ஆகவே தீபாவை பத்தி ஒரே வார்த்தைல சொல்லணும்ன்னா `விரைவில்`னே சொல்லிடலாம்.

சு.சாமி - தமிழ்நாட்டுலே இருந்தாலும் தமிழே சரியா பேச வராத சில பேர் நமீதா, ஜக்கி வாசுதேவ், சுப்பிரமணியன் சுவாமி. தமிழ்நாட்டுல நடக்குற எல்லா பிரச்னைக்கும் தமிழர்களுக்கு எதிரா இன்ஸ்டண்ட் தீர்வு வச்சு இருக்குற இவரை பேசாம இங்கிலீஷ்காரன்னு ஒரே வார்த்தைல சொல்லிட்டு நம்ம வேலையைப் பார்க்க போயிடலாம்.

மணிரத்னம் - எல்லாத்தையும் ஒரே வார்த்தைல சொல்றது வேணா இப்ப ட்ரெண்ட் ஆகலாம். ஆனா அதை ரொம்ப காலமா தன்னோட படத்துல தீவிரமா கடைபிடிச்சுக்கிட்டு வர ஒரே ஆள் மணிரத்னம்தான். அவரைப் பத்தி ஒரே வார்த்தைல சொல்லணும்ன்னா `ஒரே வார்த்தை`னே சொல்லலாம்.

- லோ.சியாம் சுந்தர்