Published:Updated:

ஹார்வர்டு பல்கலையில் 170-க்கு 171 மதிப்பெண் பெற்று சாதித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி!

SAKTHIVEL MURUGAN G
ஹார்வர்டு பல்கலையில் 170-க்கு 171 மதிப்பெண் பெற்று சாதித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி!
ஹார்வர்டு பல்கலையில் 170-க்கு 171 மதிப்பெண் பெற்று சாதித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பாடத்தில் 170-க்கு 171 மதிப்பெண் பெற்று தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்  இந்திய ஐ.ஏ.எஸ். அதிகாரியான  அன்கூர் கார்க்.

பள்ளியில் படிக்கும்போது பத்துக்கு பத்து மதிப்பெண் வாங்குவது முக்கியமல்ல, பத்துக்கு பதினொரு மதிப்பெண் வாங்கினால்தான் சந்தோஷம். அப்படி வாங்கிக் காட்டு பார்க்கலாம் என்று சவால் விட்டுள்ளார் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அன்கூர் கார்க்கின் அப்பா. தன் அப்பாவின் ஆசையை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பாடத்தில் 170-க்கு 171 மதிப்பெண் பெற்று, அப்பாவின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார் அன்கூர் கார்க். 

டெல்லி ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவரான அன்கூர் கார்க், 2002-ம் ஆண்டில் தனது 22-வது வயதில் சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனார். தற்போது, தன்னை மெருகேற்றிக்கொள்ளும் வகையில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் படிப்பில் சேர்ந்து படித்து வருகிறார். இங்கு நடத்தப்பட்ட தேர்வில், மேக்ரோக்னொமிக்ஸ் பாடத்தில் 170 மதிப்பெண்ணுக்கு 171 மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார். இவருக்கு, சிறந்த பொருளியல் பேராசிரியர் என்று பெயர் பெற்ற ஜெஃப்ரி ஃபிராங்க், 170-க்கு 171 மதிப்பெண் வழங்கியுள்ளார். அன்கூர் கார்க் மதிப்பெண் அட்டையில், "101 சதவிகிதம்" என்று குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். 

``நான் பள்ளியில் படிக்கும்போது, ​​என் தந்தை 10-க்கு 10 மதிப்பெண் வாங்குவது எல்லோராலும் முடியும். ஆனால், நீ எப்போதும் 10-க்கு 11 மதிப்பெண் வாங்க முயற்சி செய் என்பார். மாணவர் வாழ்க்கையில் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நான் அப்பாவின் ஆசையை நிறைவேற்றியுள்ளேன். இந்த மதிப்பெண்கள் என்னுடைய அப்பாவுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று முகநூலில் குறிப்பிட்டுள்ளார் அன்கூர் கார்க் ஐ.ஏ.எஸ்.  வாழ்த்துகள்.