Published:Updated:

நீங்களும் ஆகலாம் பெண் தொழில்முனைவோர்!

பிரெயின் ஓ பிரெயின்
பிரெயின் ஓ பிரெயின்

பிரான்சைசி எடுப்பதற்கான முதலீடும், வழிமுறைகளும் மிகவும் எளிமையாக இருந்தன. இவ்வளவு சுலபமாக ஒரு தொழிலைத் துவங்க முடியும் என்பதே எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

அலுவலகப் பணிகளை சாமர்த்தியமாக கையாளும் பெண்கள், திருமண பந்தம் எனும் புது உறவில் இணையும்போது தனிப்பட்ட வாழ்க்கையை சற்று ஓரம்கட்டி வைத்துவிடுகின்றனர். குடும்பம் ஆதரவாக இருந்தாலும், குழந்தைகள்மற்றும் வீட்டு வேலைகளால் அலுவலகப் பணியில் பெண்களால் முழு மனதோடு ஈடுபட முடியாத நிலைமை ஏற்படுகிறது. பெண்களுக்கே உரித்தான சவால் இது... இதனை எதிர்த்து சாதிக்கத் துடிக்கும் பலகோடி பெண்களில், கிடைத்த வாய்ப்பினை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறி கொண்டிருப்பவர் சவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

பணியாளர் டு தொழில்முனைவோர்

IT துறையில் பணிபுரிந்த சவிதாவிற்கு, குழந்தைப் பிறந்தபிறகு பணிபுரிதல் என்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. "என்னுடைய குழந்தையுடன் சேர்ந்து இருக்கும் நேரம் குறைவு என்பதால் அவனை விட்டு மிகவும் தள்ளியிருப்பதை உணர்ந்தேன். என்னுடைய அம்மாவிடம் விட்டுச் சென்றாலும், வேலைக்குச் சென்றவுடன் குழந்தை என்ன செய்கிறானோ என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. என்னுடைய வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியவில்லை. இதுபோல நான் மட்டுமல்ல, என்னைப் போன்ற பல பெண்கள் தம் குடும்பம், குழந்தைக்காக சொந்த கனவுகளைத் துறக்கிறோம். வேலையைத் துறந்த நிலையில், நமக்கென்று ஏதாவது ஒன்று செய்ய வேண்டும், குடும்பத்திற்கு பொருளாதார ரீதியில் உதவியாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்துகொண்டே இருந்தது. இந்நிலையில்தான் என் தோழி மூலம் 'BRAINOBRAIN' பற்றி தெரியவந்தது."

நீங்களும் ஆகலாம் பெண் தொழில்முனைவோர்!

"ஒரு அம்மாவாக பிரெயின் ஓ பிரெயின்-ல் பயிற்சி பெறும் குழந்தைகளுக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து பயிற்சிகளும், அதன் பயன்களும் என் குழந்தைக்கும் கிடைக்க வேண்டுமென ஆசைப்பட்டே பிரெயின் ஓ பிரெயின் அலுவலகத்தை அணுகினேன். நானே பயிற்சியாளராக மாறினால் என் குழந்தை மட்டுமல்லாமல், என்னைச் சுற்றியுள்ள அனைத்து குழந்தைகளும் இப்பயிற்சியைப் பெற முடியும் என்பதால் பிரெயின் ஓ பிரெயினின் 'பிரான்சைசி வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தேன்."

நீங்களும் ஆகலாம் பெண் தொழில்முனைவோர்!

"பிரான்சைசி எடுப்பதற்கான முதலீடும், வழிமுறைகளும் மிகவும் எளிமையாக இருந்தன. இவ்வளவு சுலபமாக ஒரு தொழிலைத் துவங்க முடியும் என்பதே எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அனைத்து படிநிலைகளிலும் பிரெயின் ஓ பிரெயின் உறுதுணையாக இருந்தது. தொழிலில் சிறிய அளவில் துவங்கி, படிப்படியாக நல்ல நிலையை எட்டலாம் என்பதை பிரெயின் ஓ பிரெயின் கற்றுக்கொடுத்தது." என்கிறார் சவிதா.

வாழ்வை மாற்றிய பிரெயின் ஓ பிரெயின்!

"4 முதல் 14 வயதான பிள்ளைகளுக்கு மூளைத் திறன் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது பிரெயின் ஓ பிரெயின். அபாக்கஸ் பயிற்சி, நியூரோ லிங்விஸ்டிக் புரோக்ராம், மொழித்திறன் பயிற்சி, நியூரோபிக்ஸ், மெண்டல் ஜிம்னாஸ்டிக்ஸ், கிரியேட்டிவ் ஆர்ட் மற்றும் கதை எழுதும் பயிற்சி உள்ளிட்ட 14 வகையான மன வளப் பயிற்சிகளை வழங்குகிறது."

"தொழில் தொடங்கி முதல் 3 ஆண்டுகள் வரை, மூன்று மாதத்திற்கு ஒருமுறை தொடர்ச்சியாக பிரெயின் ஓ பிரெயின் ஆசிரியப் பயிற்சி (Brainobrain Faculty Training) வகுப்புகள் மூலம் பயிற்சி மையத்தை வெற்றிகரமாக நடத்த நிறுவனம் உதவிபுரிகிறது. இதன் மூலம், நமது தனிப்பட்ட திறமைகளை மேம்படுத்திக்கொள்ளவும், சுயத்தை உணரவும், ஆற்றலை அறியவும், வளர்த்துக்கொள்ளவும்; அச்சங்களைத் தவிர்த்து தன்னம்பிக்கையுடனும் செயல்பட முடிகிறது. பிரெயின் ஓ பிரெயின் ஆசிரியர் மாநாடு (Brainobrain Faculty Conference) மற்றும் பிரான்சைசி மாநாடு (Franchise Conference) ஆண்டுக்கு ஓரிருமுறை நடத்தப்படும். பல்வேறு ஊர்களில் Brainobrain பயிற்சி மையத்தை நடத்துபவர்கள் இதில் கலந்துகொண்டு தங்களின் அனுபவத்தை பகிர்ந்துகொள்வார்கள். அதன் வாயிலாக பயிற்சி மையத்தை மேன்மேலும் முன்னேற்றுவதற்கான புதிய பாதையை அறியும் வாய்ப்பு கிடைக்கும்."

நீங்களும் ஆகலாம் பெண் தொழில்முனைவோர்!

"வீட்டிலேயே 15 பிள்ளைகள் உட்காரும் அளவுக்கு இடம் இருந்தால், தாராளமாக இந்த சென்டரை வீட்டிலேயே துவங்கலாம். வார இறுதி நாட்களில் மட்டுமே வகுப்புகள் நடைபெறுவதனால், பிற நாட்களில் சிக்கலின்றி நம்மால் மற்ற பணிகளில் ஈடுபட முடியும். மயிலாப்பூரில் 23 குழந்தைகளுடன் ஆரம்பித்த என்னுடைய பயிற்சி மையத்தில் இப்போது 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். வார இறுதி நாட்களில் ஓய்வில் இருப்பதைக் காட்டிலும், குழந்தைகளுடன் சேர்ந்து இருக்கும் நேரமே மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கனவே பார்த்த வேலையில் இருந்திருந்தால், இந்நேரம் நான் மேளாளராக கூட பணி உயர்வு பெற்றிருக்கலாம். ஆனால், இப்போது என்னுடைய சொந்தத் தொழிலை துவங்கி வளர்ச்சிப் பாதையில் செல்வது மன நிறைவையும், பணி நிறைவையும் கொடுக்கிறது" என்று பெருமிதம்கொள்கிறார் சவிதா.

விவரங்களை பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு