Published:Updated:

பிஎஸ்என்எல் உடன் கை கோர்த்த யப் டிவி (YuppTV)

யப் டிவி யின் தொழில்நுட்பமானது மிகவும் நம்பகமானது மற்றும் வளர்ச்சியை நோக்கி செயல்பட்டுக்கொண்டிருப்பது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கிழக்காசியாவின் முதன்மை OTT கண்டெண்ட் நிறுவனமான யப் டிவி இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் உடன் கை கோத்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து வீடியோ மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவைகளை (ட்ரிபிள் பிளே சர்வீசஸ்) மொபைல் மற்றும் ஃபிக்ஸ்டு லைன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்க உள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் ஃபைபர் நெட்வொர்க் இந்தியாவின் மூலை முடுக்குகளை எல்லாம் இணைத்துள்ளது. அதைப் போலவே மிகப்பெரிய மொபைல் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. எனவே ட்ரிபிள் பிளே சர்வீசஸ் வழங்குவதற்கு பிஎஸ்என்எல் மிகச் சிறந்த தளமாக இருக்கிறது.

மறுபக்கம் யப் டிவி ட்ரிப்பிள் பிளே சர்வீசஸ், வீடியோ மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப சேவைகளில் சிறந்து விளங்குவதோடு மிகச்சிறந்த OTT ஸ்பேஸ் சேவை வழங்கும் நிறுவனமாக இயங்கி வருகிறது. இத்துறையில் வெற்றிகரமாக 10 ஆண்டுகளைக் கடந்து, தன்னுடைய புதுமையான அம்சங்களால் உலகளாவிய மக்களைச் சென்றடைந்துள்ளது. யப் டிவி யின் தொழில்நுட்பமானது மிகவும் நம்பகமானது மற்றும் வளர்ச்சியை நோக்கி செயல்பட்டுக்கொண்டிருப்பது. தொழில்நுட்பத்தில் பல புதுமைகளையும் சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ, ஆப் இன் ஆப் மற்றும் வீடியோ அனாலிடிக்ஸ், டாங்கில் மற்றும் நேரடி ஒளிபரப்பு, இவை இதில் அடங்கும்.

லைவ் டிவி சேனல்ஸ், கேட்ச் அப் டிவி, திரைப்படங்கள் மற்றும் பிரத்தியேக நிகழ்ச்சிகள் என மிகப்பெரிய பொழுதுபோக்கு நூலகத்தைக் கொண்டுள்ளது யப் டிவி. இவர்களின் யப்ஒரிஜினல் நிறுவனம் தென்னிந்தியாவின் முக்கிய திரைப் பிரபலங்களுடன் கைகோத்து பலதரப்பட்ட வெப்சீரிஸ்களை வழங்கிவருகிறது. இதில் தென்னிந்தியாவை மையமாகக்கொண்டு 13 ஒரிஜினல் நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது, இந்தியாவில் இதுவே அதிக எண்ணிக்கையாகும். இதுமட்டுமல்லாது கூடியவிரைவில் பொழுதுபோக்கை மாற்றி அமைக்கக்கூடிய புது அறிவிப்போடு இந்திய மக்களை அசத்த இருப்பதாக தெரிவிக்கிறது யப் டிவி.

இந்தியாவைப் பொருத்தவரை தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது பிஎஸ்என்எல். எனவே இந்த இரு நிறுவனங்களில் கைகோர்ப்பு நிச்சயம் மிகச் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

லைவ் ஸ்ட்ரீமிங், கேட்ச் அப் டிவி மற்றும் பிரத்யேகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் - இவை யப் டிவியின் மிகச்சிறந்த சேவைகள் ஆகும். எனவே, யப் டிவியுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்

இந்தியாவின் வளர்ந்து வரும் நகராட்சிகள் மற்றும் கிராமங்களை இணைத்துள்ள பிஎஸ்என்எல், மற்றும் பொழுதுபோக்கு துறையில் முன்னணி வகிக்கும் யப் டிவி, இவ்விரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படும்போது மிகச் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சிக்குரிய திட்டமிடுதலோடு மதிப்பான செயல் திட்டங்களை நிறைவேற்றக் கூடும். இந்தியாவின் அடுத்த 50 கோடி இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள் கிராமப்புறங்களிலிருந்து வரக்கூடும் என்பதால் இந்த பிசினஸ் இணைப்பு வாடிக்கையாளர்களுக்கு நல்ல பலன்களைத் தருவதாக அமையும்.

யப் டிவியின் சிஇஓ மற்றும் நிறுவனரான உதய் ரெட்டி இது குறித்து பேசுகையில், "பிஎஸ்என்எல் போன்ற மிகப்பெரும் நிறுவனத்தோடு இணைந்து செயலாற்றுவத்தில் பெருமைகொள்கிறோம். இதனால் பிஎஸ்என்எல்-ன் மிகப்பெரும் நெட்வொர்க் மற்றும் அதிசிறந்த தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் வாடிக்கையாளர்களைச் சென்றடைய முடியும். புதுமையான மற்றும் உன்னதமான தொழில்நுட்பத்தின் உதவியோடு அனைவரின் பொழுதுபோக்கு தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது எங்களின் லட்சியம் ஆகும். பிஎஸ்என்எல் உடனான இந்த இணைப்பு நீண்ட காலம்தொடரும் என உறுதியாக நம்புகிறோம்." என்றார்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சீஃப் மேனேஜிங் டைரக்டர் பிரவீன் குமார் இதுபற்றி கூறியதாவது: "பத்து வருடங்களாக மொபைல் பொழுதுபோக்கு துறையில் கோலோச்சி வரும் யப் டிவி, மாறி வரும் சூழ்நிலைகளுக்கேற்ப தங்களைத் தயார்படுத்திக்கொண்டு மிகச்சிறந்த டிஜிட்டல் மற்றும் வீடியோ பொழுதுபோக்கு தயாரிப்புகளையும், சேவைகளையும் வழங்கி வருகிறது. லைவ் ஸ்ட்ரீமிங், கேட்ச் அப் டிவி மற்றும் பிரத்யேகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் - இவை யப் டிவியின் மிகச்சிறந்த சேவைகள் ஆகும். எனவே, யப் டிவியுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், இந்த கைக்கோப்பு இவ்விரு நிறுவனங்களுக்கும், இந்திய வாடிக்கையாளர்களுக்கும் மதிப்பு சேர்க்கும் என நம்புகிறோம்."

yupptv
yupptv

பிஎஸ்என்எல் போர்டின் டைரக்டர் சிஏ விவேக் பன்சால் கூறியதாவது: "பிஎஸ்என்எல்-ன் பாரத் ஃபைபர் மூலம் ட்ரிப்பிள் பிளே சேவைகள் வழங்குவதற்கான முன்னோட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்து இருக்கின்றன. இந்த ஒருங்கிணைப்பு பிஎஸ்என்எல்-க்கு புதுவிதமான சேவை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பாக அமைகின்றது மற்றும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப போட்டியை எதிர்கொள்ளும் ஒரு வாய்ப்பையும் தந்துள்ளது. பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எங்களுடைய சேவை என குறுகிய மனப்பான்மையோடு இருந்துவிடாமல் தொழில்நுட்ப ரீதியாக பின்தங்கி இருக்கும் அனைத்து இடங்களுக்கும் எங்களுடைய சேவைகளை வழங்குவோம்."

Yupp TV பற்றி...

Yupp TV தெற்காசிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடிய இணையத்தை அடிப்படையாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சியாகும். 250க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் மற்றும் 5000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை 14 மொழிகளில் வழங்குகிறது.

ஆசியாவை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் எமரால்டு மீடியா நிறுவனம் Yupp TV-க்கு நிதி முதலீடு அளித்துள்ளது. இந்நிறுவனம், சர்வதேச முதலீட்டு நிறுவனமான KKR-இன் சிறுபான்மைப் பங்குகள் மூலம் செயல்படுகிறது. இந்நிறுவனம், மீடியா, பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் மீடியா நிறுவனங்களுக்கு முதலீட்டை வழங்குவதில் கவனம் செலுத்திவருகிறது. Yupp TV, அதன் முதல்கட்ட நிதித் திரட்டலை Poarch Creek Indian Tribe of Alabama மூலம் செய்தது.

25000 மணி நேரம் அளவிலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வைத்துள்ள யப் டிவி, 2500+ மணி நேரம் நேயர் விரும்பும் வீடியோ நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது.

YuppFlix எனும் நேயர் விரும்பும் திரைப்பட ஸ்ட்ரீமிங் சேவையையும் வழங்கிவரும் யப் டிவி, யப் டிவி ஒரிஜினல்ஸ் எனும் களம் மூலம், திரை பிரபலங்களைக் கொண்டு இதுவரை மக்கள் கண்டிராத மிகவும் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது. யப் டிவி பிளாட்ஃபார்மின் மூலம் எபிசோடு ரீதியில் இந்த நிகழ்சிகளைக் கண்டுகளிக்கலாம்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பயன்படுத்தும் நம்பர் ஒன் இன்டர்நெட் பே டிவி-யாக விளங்குகிறது YuppTV. அதிகமாக தரவிறக்கப்பட்ட இந்திய ஸ்மார்ட் டிவி ஆப் YuppTV தான். 4.0 ரேட்டிங் கொண்ட இந்த ஆப், இதுவரை 13 மில்லியன் மொபைல் டவுன்லோடுகளைக் கண்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு https://www.yupptv.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு