
சில மாநிலங்களில் மக்கள் அனைவரும் ஏ.டி.எம்-களை நோக்கி ஓடவேண்டிய சூழல் மீண்டும் கடந்த வாரம் ஏற்பட்டது. ஏ.டி.எம்-களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட என்ன காரணம் என நாணயம் விகடன் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு சர்வே நடத்தினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த சர்வேயில் 57% பேர், தவறான நிதி நிர்வாகமே பணத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்று சொல்லி யிருக்கிறார்கள். பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு பணத்தைப் பயன்படுத்துவதில் பல பிரச்னைகள் இருந்தபடியே உள்ளன. மத்திய அரசின் நிதி நிர்வாகம் சரியாக இருந்திருந்தால், இந்தச் சிக்கல்கள் வந்திருக்காது என்பதால், மக்களின் இந்தக் கருத்தை சரி எனலாம்.
இந்த சர்வேயில் 31% பேர், தேர்தல் நிதி திரட்ட சிலர் முயற்சி செய்ததுதான் காரணம் என்றார்கள். இது பொதுவான கருத்தே தவிர, இப்படிச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. கர்நாடகாவில் தேர்தல் நடக்கும்போது, ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் பணத்தட்டுப்பாடு நிலவ எந்த நேரடிக் காரணமும் இல்லை.

இந்த சர்வேயில் 12% பேர், தேவை யில்லாத பயம் என்கிற காரணத்தைச் சொல்லியிருக்கிறார்கள். வங்கித்துறை வாராக் கடன் பிரச்னையில் சிக்கித் தவித்தாலும், அதற்காக அதில் போட்டுள்ள பணம் பறிபோய்விடும் என்று நினைக்கிற அளவுக்கு நிலைமை மோசமாகிவிடவில்லை. எனவே, இந்தப் பயம் நிச்சயம் தேவையில்லாதது தான்.
- ஏ.ஆர்.கே