Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23
பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23

ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

பிரீமியம் ஸ்டோரி

நியூயார்க்

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23அதிகாலை  மணி 2. போன் தொடர்ந்து ஒலித்ததால், தூக்கத்திலிருந்து எழுந்து போனின் திரையைப் பார்த்தார் ஜோஷ். அந்த நேரத்தில் அவரை போன் செய்வது யார் என்று தெரியவில்லை. இருந்தாலும்  அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

‘`நீ போனை எடுத்துப்பேச நான் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்?’’

அந்தக் குரல் ஜோஷின் தூக்கத்தை முழுவதுமாகக் கலைத்தது. ‘`யார் நீங்க, ஏன் இந்த நேரத்துல போன் பண்ணி உயிரை எடுக்குறீங்க?’’

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23

‘`நீ அனுப்பியதாகச் சொன்ன ஆள் இன்னும் பணத்துடன் போய்ச் சேரவில்லை. அவன் இப்போது எங்கே இருக்கிறான்?”

‘`வாட்? எனக்குப் புரியவில்லை… நீங்க என்ன சொல்றீங்க?’’

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23

‘`நான் சொன்னதில் உனக்கு எது புரியவில்லை?” குரலில் கோபம் கொப்பளித்தது. ‘`போய் அவனைக் கண்டுபிடி!”

அதிகாலையில் படுக்கையின் நடுவில் உட்கார்ந்துகொண்டு எங்கே தவறு நடந்திருக்கும் என ஜோஷ் யோசிக்க ஆரம்பித்தார்.   
               
அவர் ஸ்டேனை மில்லியன் டாலருடன் அனுப்பியிருந்தார். ஜே.எஃப்.கே, சாண்ட்டோ டொமிங்கோ விமானத்தளங்களில் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களை ஏற்கெனவே `வாங்கி’யாகிவிட்டது, எனவே, ஸ்டேன் பிடிபடுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

இந்த ஸ்டேன் எங்கே போய்த் தொலைந்தான்?

பணம் என்னவாயிற்று?

மும்பை

`டைம்ஸ் நவ்’ சேனலில் சிவப்பு நிறப் பட்டையில் செய்திகள் தவழ்ந்து சென்றுகொண்டிருந் தாலும்கூட அந்த நிகழ்ச்சியை வழங்கும் ஆன்கரான சோனியா `ப்ரேக்கிங் நியூஸ்’ வந்துகொண்டிருக் கிறது’ எனக் கத்தினார்.

அந்த சிவப்புநிறப் பட்டையில் கொட்டை எழுத்துக்களில், `மாள்விகா தற்கொலை வழக்கில் பரபரப்புத் தகவல்’ என எழுதப் பட்டிருந்தது.

‘‘7 ரேஸ்கோர்ஸ் சாலையில் இருக்கும் பிரதமரின் இல்லத்துக்கு வெளியே நின்றுகொண்டிருக்கும் எங்களுடைய அரசியல் நிருபர், கருணா ராவத்திடம் உங்களை அழைத்துச் செல்கிறோம்… கருணா, நான் பேசுவது கேட்கிறதா?”

‘`யெஸ், சோனியா, கோ அஹெட்’’ என கருணா கத்தினாள்.

‘`கருணா, மாள்விகா தற்கொலை வழக்கில் இப்போது கிடைத் திருக்கும் தகவல் என்ன?”

‘`சோனியா, பரபரப்பான ஒரு விஷயம் இப்போது வெளியாகியிருக் கிறது. ரிசர்வ் பேங்க் ஆஃப் இண்டியாவின் கவர்னர் பதவிக்கு மாள்விகா பரித்துரைக்கப்பட்டிருக் கிறார். அந்தப் பரிந்துரை ஏற்கப் பட்டிருந்தால், செப்டம்பர் மாதம் பதவியிலிருந்து ஓய்வுபெறும்      ஒய்.வி.ரெட்டியிடமிருந்து அவருக்கு அந்தப் பதவி வந்திருக்கும். அந்தப் பரிந்துரைக் கடிதத்தின் நகல் நம்மிடம் இப்போது இருக்கிறது.’’

கருணா கையில் வைத்திருந்த காகிதத்தை நோக்கி கேமரா ஜூம் செய்யப்பட்டது. அது நிதி மந்திரி யிடமிருந்து பிரதம மந்திரிக்கு அனுப்பப்பட்ட தகவலாகும். கவர்னர் பதவிக்கான விண்ணப்ப தாரர்கள் பெயரில் மாள்விகாவின் பெயர் முதலாவதாக இருந்தது.

‘`பிரதம மந்திரி அலுவலக ஆதாரப்படி, பிரதம மந்திரி இந்தப் பரிந்துரையை விரும்பவில்லை என்பதால், அதைத் திரும்ப அனுப்பிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, சோனியா.’’

நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த மிகவும் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் மாள்விகாவை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை காட்டியிருக்கிறாராம். மாள்விகாவின் தற்கொலைக்கும், இதற்கும் சம்பந்தம் இருக்குமா என இப்போது எதுவும் ஊகிக்க முடியவில்லை.’’

‘`நன்றி, கருணா. இது உண்மையிலேயே பரப்பரப்பான ஒரு விஷயம்தான். தொடர்ந்து இணைப்பில் இருக்கவும். ஒரு சிறிய வணிக இடைவேளைக்குப் பிறகு கலந்துரையாடலை மீண்டும் நாம் தொடரலாம்.’’

விளம்பரங்கள் திரையில் தோன்றியவுடன், கருணாவிடம் சோனியா, ‘`வாட் இஸ் தி ஸ்டோரி? நீ சொல்வது உண்மையா, ஆர் யூ சீரியஸ்? இந்தச் செய்திக்கான ஆதாரம் யார்?”

‘‘நேற்று பதவி ஓய்வுபெற்ற முதன்மைச் செயலர். நிதி மந்திரி அவருக்கு வேண்டப்பட்டவரை ரிசர்வ் பேங்க் கவர்னராக நியமிப்பதை விரும்பாமல்தான் பிரதம மந்திரி அந்தப் பரிந்துரைக் கடிதத்தைத் திரும்ப அனுப்பினார் என இவர் என்னிடம் கூறினார். அவர் மந்திரியோடு படுக்கையைப் பகிர்ந்துகொண்டாராம்!”

‘`நீ ஜோக் அடிக்கிறாய்தானே?”

‘`நான் இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் ஜோக் அடிப்பதில்லை என்று உனக்குத் தெரியுமே.’’

‘`யெஸ், யெஸ், நீ ஜோக்கே அடிக்கமாட்டாயே’’ என்று சொல்லிவிட்டு அவர்கள் சிரித்தனர்.

சோனியாவின் முகம் மலர்ந்தது. இது இந்தத் தசாப்தத்தின் மிகப் பெரிய மோசடி. இவளைப் பொறுத்தவரையில் இது மிகவும் முக்கிய மானதுதான். இதை ஒளிபரப்புவது குறித்து இவள் மட்டும் முடிவு செய்ய முடியாது. எனவே, இவள் சீஃப் நியூஸ் எடிட்டரை அணுகினாள்.

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23

மும்பை

ஒரு சிறிய நூலிழையில் என்.ஒய்.ஐ.பி-க்கும் எடியோஸுக்குமான (eTIOS) டீல் தொங்கிக்கொண்டிருந்தது. எடியோஸ் உடனான ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென்ற `மாட்’டினுடைய விருப்பத்தை ஆதித்யாவிடம் சுவாமி கூறியதிலிருந்து ஆதித்யா உள்ளுக்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருந்தார்.

எடியோஸுன் நம்பகத்தன்மையும், வருமானமும் என்.ஒய்.ஐ.பி தொடர்ந்து எடியோஸுடன் இருக்குமா என்பதைச் சார்ந்திருந்தது. ஆதித்யாவும் சில தனியார் முதலீட்டு நிறுவனங்களும் இண்டிஸ்கேப் கேமிங்கில் பெருமளவுக்கு முதலீடு செய்திருந்தன. எடியோஸுன் வருமானம் பாதிக்கப்பட்டால் ஆதித்யா மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவார். அவர் காரில் ஏறும்போது அவருடைய மனம் பல இடங்களில் சஞ்சரித்துக்கொண்டிருந்தது.

‘`டாட், ஆர் யூ ஓகே?” என்று காரை ஓட்டிக்கொண்டே வருண் கேட்டான். சந்தீப்புடன் ஆதித்யா பின்சீட்டில் உட்கார்ந்திருந்தார்.

‘`இல்லை சோர்வுதான். முடிந்த அளவுக்கு வீட்டுக்கு வேகமாகப் போவோம். கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்.’’ வழியில் சந்தீப்பை இறக்கி விட்டுவிட்டு அவர்கள் வீட்டிற்குச் சென்றார்கள்.

‘`டாட், கவலைப்படாதீர்கள். எல்லாம் சரியாகிவிடும்’’ என்றான்.

‘`அப்படித் தெரியவில்லை. எல்லாம் சிதறுண்டு போவது போலவே தெரிகிறது’’ என்றார்.

‘`அப்படியெல்லாம் ஆகாது டாட், எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்லிவிட்டுப் பேசுவதை நிறுத்தினான்.

வண்டியை அமைதியாக சில நிமிடங்கள் ஓட்டிச் சென்றான்.

‘‘என்.ஒய்.ஐ.பி பிசினஸை நம்மோடு தொடராமல் வேறு நிறுவனத்துக்குக் கொடுப்பது என முடிவு செய்தால் அது நமது நிறுவனத்தை மோசமாகப் பாதிக்குமா?” எனக் கேட்டான்.

‘`இங்கே பார் வருண், நமது நிறுவனம் சிறிய நிறுவனமில்லை. இந்தத் துறையில் நாம் பெரிய அளவில் இயங்கி வருகிறோம். நீண்ட காலத்தைக் கருத்தில் கொள்ளும்பட்சத்தில் என்.ஒய்.ஐ.பி அதனுடைய வேலையை வேறெந்த நிறுவனத்துக்குக் கொடுத்தாலும் நமக்கு எதுவும் பாதிப்பு இருக்காது.

ஆனால், குறுகிய காலத்தில் நமது நிதி நிலைமையில் ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும், குறிப்பாக, இண்டிஸ்கேப்பில் நாம் செய்திருக்கும் முதலீட்டைக் கருத்தில் கொள்ளும்பட்சத்தில். நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இவற்றையெல்லாம்விட பெரியது நமது நிறுவனத்தின் பிரபல்யம். பிரபல்யத்துக்குக் காப்பீடு எதுவுமில்லை.

என்.ஒய்.ஐ.பி அதனுடைய பிசினஸை நம்மிடமிருந்து வேறு நிறுவனத்துக்குக் கொடுத்தால் அது நமது நிறுவனத்தின் கெளரவத்தை வெகுவாகப் பாதிக்கும். அதுதான் வேறெதையும்விட எனக்குக் கவலையளிக்கிறது’’ என்றார்.

‘`எனக்கு அங்கே யாரையாவது தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும், நமது வேலையை அது எளிதாக்கி விடும். நீங்களும், சந்தீப் அங்கிளும் இதுபற்றிக் கவலைப்படுவதைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. அதற்கான காரணம் தெரியவில்லை’’ என வருண் கூறினான்.

பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23

அவனுடைய பேச்சில் இருந்த வலியை ஆதித்யாவால் புரிந்து கொள்ள முடிந்தது.

கடந்த சில மாதங்களின் நிகழ்வுகள் அப்பாவுக்கும் மகனுக்குமான உறவை நெருக்கமாக்கியது.

‘`டவுன்ஸ்விலே எப்படி மேம்படுத்தப்பட்டு வருகிறது?” ஆதித்யா கேட்டார்.

‘`நன்றாக வேலை நடந்துவருகிறது, டாட். ஃபேஸ்புக் விளம்பரங்கள் உண்மையிலேயே இதன் பரவலாக்கத்துக்கு மிகப் பெரும் உதவியாக இருந்துவருகிறது.

இன்னும் ஒருசில நாள்களில் அதற்கான மறுமொழிகள் நமக்குத் தெரியவரும்.

க்ளிக் ரேட் இதுவரை நன்றாகவே இருந்துவருகிறது. மக்களுக்கு இந்த கேம் பிடித்துப்போய் அதையே தொடர்ந்து விளையாடுவார்கள் என நம்புகிறேன்.

நிலைமை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வடிவமைப்பாளர்களுடன் கலந்து பேச ஒரு கூட்டத்தை ஒன்பது மணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்’’ என்றான்.

‘‘இன்றிரவா?’’

‘`ஆமாம், டாட்’’.

‘‘ஓகே.’’
 
(பித்தலாட்டம் தொடரும்)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு