முதலீடு செய்வதன் முக்கிய நோக்கமே நிதிச் சுதந்திரம் பெறுவதற்காகத்தான். கடன் இல்லாமல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்கு நிதி இருப்பதை நிதிச் சுதந்திரம் எனலாம். நீங்கள் நிதிச் சுதந்திரம் அடைந்துவிட்டீர்களா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? அதற்கு ஒரு வழி இருக்கிறது. கீழே நான்கு கேள்விகள் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றில் ஏதேனும் மூன்று கேள்விகளுக்கான, பதில் ஆம் என்று வந்தால், உண்மையிலே நிதிச் சுதந்திரம் அடைந்தவர்தான் நீங்கள்.

1. மாதத் தவணை, கடன் அட்டை கடன் போன்ற கடன்கள் இல்லாதவரா நீங்கள்?

2. இப்போது பார்க்கும் வேலையை விட்டாலும், அடுத்த ஒரு வருடம் பணத் தேவைக்காக யாரையும் எதிர்பார்க்காமல் குடும்பத்தைக் கவனிக்க என்னால் முடியும் என்ற நிலையில் உள்ளவரா நீங்கள்?

3. எல்லோரும் போல 60 வயதில்தான் வேலையிலிருந்து ஓய்வு பெறவேண்டும் என்று எண்ணாமல், முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற்றாலும், அடுத்து வரும் நாள்களைப் பண கஷ்டமில்லாமல் மகிழ்வுடன் கழிக்கத் தயாராக இருப்பவரா நீங்கள்?

4. உடல் நலத்திற்கு மருத்துவக் காப்பீடு, மன நலத்திற்கு நல்ல புத்தகங்கள், பண வளத்திற்கு பரவலான நீண்ட கால முதலீடு (நல்ல பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு) என்று பாதுகாப்பு வளையம் அமைத்திருப்பவரா நீங்கள்?

இரண்டு கேள்விகளுக்கு மேல், இல்லை என்ற பதில் வந்தாலே, நீங்கள் இன்னும் நிதிச் சுதந்திரத்தை அடையவில்லை என்றுதான் அர்த்தம். அப்படியென்றால் நான் நிதிச் சுதந்திரத்தை அடையவே முடியாதா, அடைய என்னதான் வழி என்கிறீர்களா..? இங்கே சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மறக்காமல், மறுக்காமல் கடைப்பிடியுங்கள். உங்களின் விடாமுயற்சியால், நீங்களும் விரைவில் நிதிச் சுதந்திரத்தை அடைந்துவிடுவீர்கள்.

வழி : 1. உங்கள் துணைவரிடம் (கணவன்/மனைவி) பேசுங்கள்.

நீங்கள் சென்று வந்த சினிமா, போக வேண்டிய சுற்றுலா என இவை பற்றி மட்டும் பேசாமல், உங்கள் முதலீடு, காப்பீடு மற்றும் அடுத்த நிதி இலக்குகள் பற்றியும் உங்கள் துணையிடம் பேசுங்கள். எல்லா முதலீடுகளையும் உங்கள் பெயரிலேயே ஆரம்பிக்காமல், எஸ்.ஐ.பி போன்ற சில மாத முதலீடுகளைத் துணைவரின் பெயரிலும் ஆரம்பியுங்கள்.

தன் பெயரில் வீட்டிற்கு வரும் முதலீடு சம்பந்தமான அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் மற்றும் முதலீட்டின் வளர்ச்சி போன்றவை அவர்களுக்குள்ளும் ஒரு தேடுதலை உருவாக்கும். இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தை அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகள் தானே குறையும்.

வழி : 2. பிள்ளைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள்

நீங்கள் செய்யும் வேலை, பெறும் வருமானம், பணத்தின் தேவையை சின்னச் சின்ன கதைகளாக, உணவுடன் பிள்ளைகளுக்குப் புகட்டுங்கள்.

பிள்ளைகளைப் பணத்தைச் சேமிப்பதற்குப் பழக்கி, அவர்களிடமே கடனாக வாங்கி, அவர்கள் கண்ணெதிரே அவசியத் தேவைகளுக்கு மட்டும் செலவு செய்து, அதைத் திருப்பித் தர அவர்களையே ஞாபகப்படுத்த வைத்து, சம்பளம் வந்ததும் கூடுதலாகத் திரும்ப தந்து பணத்தின் முக்கியத்துவத்தை விளையாட்டாகப் புரிய வையுங்கள். ஏனென்றால், நம் வீட்டிற்கும், நாட்டிற்கும் அவர்கள் தானே வருங்காலத் தூண்கள்.

வழி : 3. உங்கள் செலவுகளைக் கண்காணியுங்கள்

எதிர்காலத்திற்கான வலுவான நிதித் திட்டத்தை உருவாக்கு வதற்கான முக்கியமான காரணியே இதுதான். சரியாகக் கணக்குப் பார்த்தால், மாத செலவுகளில் பல தேவையில்லாத செலவுகள் எவை என்பது புரியும்.

திரையரங்கில் குளிர்பானம் மற்றும் நொறுக்குத் தீனிகள் அதிக விலை கொடுத்து வாங்குவது, பொறுப்பில்லாமல் இருந்துவிட்டு கடைசி நேரத்தில் எடுக்கும் தட்கல் டிக்கெட், கடன் தவணை நாளை மறந்துவிட்டு வட்டிக்கு வட்டி கட்டுதல் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். நமது வரவு - செலவை எழுதி வைப்பது மூலம் நிதி மாற்றங்களைக் கொண்டுவர முடியும். குறிப்பாக வீண் செலவுகளைக் கட்டுப் படுத்துவது எளிதாகும்.

வழி : 4 உங்களுக்கான இலக்குகளைத் திட்டமிடுங்கள்

நம் தேவை எதுவென்று, அறிந்துகொண்டாலே, நம் இலக்கை அடைவது சுலபமாகி விடும். ஒவ்வொரு வார விடுமுறை யையும் கொண்டாடுவதா அல்லது அதற்குரிய பணத்தைக் கொண்டு அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த வீடு வாங்க முயல்வதா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இலக்குகளை நிர்ணயித்து, எது முதலில் எது பிறகு என்று தேர்வு செய்வதில் தான், வெற்றியின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

வழி : 5. முதலீட்டுக் கொள்கையை உருவாக்குங்கள்

முதலீடு என்பது பூந்தோட்டத்தைப்போல. பூந்தோட்டத்தில் ரோஜா, மல்லி, முல்லை போன்ற பலவகை மலர்கள் பூத்துக் குலுங்குவது போல, உங்கள் முதலீட்டுத் தோட்டமும், ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சார்ந்த திட்டங்கள், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளால் சிறந்து விளங்கட்டும்.

உங்களின் முதலீடு எனும் பூந்தோட்டத்தைக் காக்க மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்ற வேலிகளை இட்டு ஆண்டுதோறும் புதுப்பிக்க மறக்காதீர்கள். உங்கள் எதிர்கால இலக்கை மனதில்வைத்து, அதற்கான முதலீட்டுக் கொள் கையை வகுக்கத் தவறாதீர்கள்.

முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தால், விரைவில் நிதிச் சுதந்திரத்தை நீங்களும் அடைவீர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

- ஜி.அண்ணாதுரை குமார், நிதி ஆலோசகர்